டாடா நானோ என்பது டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தால் இந்திய சந்தையை முதன்மையாகக் குறி வைத்து உருவாக்கப்பட்ட, பின்புறம் இயந்திரம் கொண்ட நான்கு பேர் பயணிக்கக் கூடிய நகரக் கார் (நான்கு சக்கர வாகனம்) ஆகும். இந்தக் கார் சிறந்த எரிபொருள் பயனுறுதி உடையது, நெடுஞ்சாலைகளிலும் 26 கிலோமீட்டர்கள் per லிட்டர் (73 mpg‑imp; 61 mpg‑US), நகரப்பகுதிகளிலும் 22 கிலோமீட்டர்கள் per லிட்டர் (62 mpg‑imp; 52 mpg‑US) எய்தப்பெறுகிறது.[3] இது முதன்முறையாக ஜனவரி 10, 2008 ல் இந்தியத் தலைநகர் புது டில்லி ப்ராகதி மைதானில் நடைபெற்ற ஒன்பதாம் வருடாந்திர வாகன கண்காட்சியில் அறிமுகப்படுத்தப்பட்டது.[4] நானோ வணிக ரீதியிலான விற்பனை துவக்கமாக 2009 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று துவங்கப்பட்டது, மேலும், ஏப்ரல் 9 லிருந்து 25 வரை முன்பதிவு செய்ய கால நிர்ணயம் செய்யப்பட்டதில் 200,000 மேற்பட்ட கார் முன்பதிவுகளை உண்டாக்கியது.[5][6] கார் விற்பனை ஜூலை 2009 ல் துவங்கவுள்ளது.[needs update][7] துவக்க விலையாக ரூபாய் 115,000 நிர்ணயிக்கப்பட்டுள்ளது, ஏறக்குறைய UK ஸ்டெர்லிங் 1,515அல்லது US$2,407 ற்கு சமமானது.as of செப்டம்பர் 2009 இது மாருதி 800 றை விட விலைக் குறைவானது. மாருதி இதற்கு அடுத்தபடியான முக்கிய போட்டியாளராகவும், விலைக் குறைந்த இந்தியக் காராகவும் ரூபாய் 184,641 ($3,865 U.S.) ஆகவுள்ளது.[8][9][10] டாடா உலகிலேயே[11] மிகக் குறைந்த விலையுள்ள காரை உற்பத்திசெய்ய - துவக்க விலையாக ரூபாய் 100,000 (ஏறக்குறைய US$2,000 ஆக as of சூன் 2009) குறிவைத்தது.[12][13]

Tata Nano
உற்பத்தியாளர்Tata Motors
வேறு பெயர்The People's Car
உற்பத்தி2008–present
பொருத்துதல்Charodi, Gujarat, India
வகுப்புCity car
உடல் வடிவம்4-door city car
திட்ட அமைப்புRR layout
இயந்திரம்2 cylinder SOHC petrol Bosch multi-point fuel injection (single injector) all aluminium 624 cc (38 cu in)
செலுத்தும் சாதனம்4 speed synchromesh with overdrive in 4th
சில்லு அடிப்பாகம்2,230 mm (87.8 அங்)[1]
நீளம்3,099 mm (122.0 அங்)[1]
அகலம்1,495 mm (58.9 அங்)[1]
உயரம்1,652 mm (65.0 அங்)[1]
குறட்டுக்கல் எடை600 kg (1,300 lb)–635 kg (1,400 lb)[1]
வடிவமைப்பாளர்Girish Wagh, Justin Norek of Trilix, Pierre Castinel[2]

2008 முற்பகுதியில் ந்யூஸ்வீக் செய்திப் பத்திரிகை நானோவை "21 நூற்றாண்டின் கார் இனங்களில் புதியவையாக"வும் " (கார்களில்) ஓர் முரண் தத்துவமாக சிறிய,லேசான,விலை குறைந்த" உள்ளடக்கமாகவும், அதிக செலவில்லாத தனிப்பட்ட போக்குவரத்து வாகனமாகவும்- உள்ளார்ந்த, "உலகளவிலான போக்குவரத்து இடையூறிணை" ஏற்படுத்தக் கூடிய அளவில் ஓர் பாகமாகவும் அடையாளம் கண்டது.[14] வால் ஸ்டிரீட் ஜர்னல் இதழ் சிறிய கார்களை நோக்கிய, நானோவை உள்ளடக்கிய உலகளவிலான போக்கினை உறுதி செய்தது.

"நானோ" என்பதன் பொருள் குஜராத்தி [15] மொழியில் "சிறிய" என்பதாகும். டாடா குழுமத்தின் நிறுவனர்களின் மொழியாகும் குஜராத்தி. "நானோ" ஒரு பில்லியனைக் குறிக்கும் SI முன்னைடையிலிருந்து வந்தது ஆங்கில வழக்கு மொழியில் அடிக்கடி "சிறிய" என்பதைக் குறிக்க SI பயன்படுகிறது.[16]

மேலோட்டமான பார்வை தொகு

 
நானோ

நானோவின் அறிமுகம் ஊடகங்களின் கவனத்தை ஈர்த்ததற்கு அதன் குறைந்த விலை இலக்கே காரணம். தி ஃபினான்ஷியல் டைம்ஸ் எழுதியது: "இந்தியா ஓர் நவீன தேசமாக மாற விரும்பச் செய்ய ஒரு குறியீடு உண்டென்றால், அது சிறிய கார் அதுவும் சிறிய விலைப் பட்டியுடன் கூடிய, நானோவாகவே நிச்சயம் இருக்கும்.உள்நாட்டு பொறியியல் வளர்ப்பிற்கு ஓர் வெற்றியாக, $2,200 (யூரோ 1,490, ஸ்டெர்லிங் 1,186) நானோ இலட்சக்கணக்கான இந்தியர்களின் கனவான நிச்சயமற்ற நகர்புற சுபிட்சத்தை சுருக்குகிறது. இந்தக் கார் இந்திய பொருளாதாரத்தை மேலுயர்த்துமென எதிர்பார்க்கப்படுகிறது, தொழில் முனைவோருக்கான வாய்ப்புக்களை இந்தியா [17][18] முழுதும் உருவாக்குவதோடு, இந்திய கார் சந்தையை 65% [19] மாக விரிவாக்குகிறது. இக்கார் டாடா குழுமத்தலைவரும், டாடா மோட்டார்ஸ் தலைவருமான ரத்தன் டாடாவினால் தொலை நோக்கு பார்வையுடன் உண்டாக்கப்பட்டு, அவரால் சுற்றுச்சூழல் நட்புடனான "மக்கள் கார்" என விவரிக்கப்பட்டது. நானோ அதன் குறைந்த விலைக்காகவும் [20][21], சூழல் நட்பு முயற்சியான காற்றடைப்பு எரிபொருள் வகை[22] மற்றும் மின்சார கார் வகைக்காகவும் (மின் நானோ)[23][24], பெரிதும் பல தரப்பிலிருந்தும், ஊடகங்களிலும் பாராட்டப்பட்டது. டாடா குழுமம் பேரளவில் நானோவை உற்பத்தி செய்து, குறிப்பாக மின் வகையை, மேலும்,இந்தியாவில் விற்பது மட்டுமின்றி, உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யுமென எதிர்பார்க்கப்படுகிறது.[25][26][27]

இந்தக் காரை விமர்சித்தவர்கள் இந்தியாவில் இதன் பாதுகாப்பை கேள்விக்குட்படுத்தினர் (ஆண்டுத்தோறும்[28] 90,000 பேர் சாலை விபத்துக்களில் இறப்பதால்)மேலும் இது ஏற்படுத்தப் போகும்[29] சூழல் சீர்கேட்டையும் விமர்சித்தனர் (நோபல் அமைதிப் பரிசு வென்ற ராஜேந்திர பச்சௌரியின் [30] விமர்சனம் உட்பட). இருப்பினும், டாடா மோட்டார்ஸ் கரிம எரிபொருள் வகைகளுடன் சூழல் நட்பு வகைகளுடன் கட்டாயமாக வெளியிட உறுதியளித்தனர்.[31][32]

நானோவானது முதலில் மேற்கு வங்கத்தில் உள்ள சிங்கூரில் அமைந்த புதிய தொழிற்சாலையில் உற்பத்திச் செய்ய திட்டமிடப்பட்டது, ஆனால் அதிகரித்து வந்த வன்முறை டாடாக்களை அக்டோபர் 2008ல் அங்கிருந்து வெளியேறச் செய்தது. (கீழேயுள்ள சிங்கூர் தொழிற்சாலை வெளியேற்றம் பகுதியைப் பார்க்கவும்.)தற்போது, டாடா மோட்டார்ஸ் ஏற்கனவே இயங்கி வரும் பந்த்நகர் (உத்தரகண்ட்) தொழிற்சாலையில் நானோவை உற்பத்தி செய்து வருகிறது மேலும் தாய்த் தொழிற்சாலை சனந்த் குஜராத்தில் அமையவுள்ளது.[33] நிறுவனம் துவக்கத்தில் தற்போதைய வணிகர் வலைத்தொடர்பையே சார்ந்திருக்கும்.[34] புதிய நானோ தொழிற்சாலை சிங்கூரின் 300,000 எண்ணிக்கையிலான கார்களை உற்பத்தி செய்யும் வசதியுடன் ஒப்பிடுகையில் 500,000 எண்ணிக்கையிலான கார்களை உற்பத்திச் செய்யும். குஜராத் மாநிலமானது மேற்கு வங்க அரசு அளித்த அனைத்து ஊக்கச் சலுகைகளையும் ஒத்தவகையில் அளிக்க ஒப்புக்கொண்டது.[35]

வடிவமைப்பு தொகு

 
பின்புறம்
 
சில்வர் நிறத்தில் ஒரு டாடா நானோ

டாடா குழுமங்களின் தலைவர் ரத்தன் டாடா 2003ல்[36] உலகின் மிகக் குறைந்த கார் உற்பத்தியை மேம்படுத்த துவங்கியதற்கு எழுச்சியூட்டும்படியாக அமைந்தது இந்திய குடும்பங்கள் வைத்திருந்த நான்கு சக்கர வாகனங்களின்[37] எண்ணிக்கையை விட இரு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை அதிகமிருந்ததே. நானோவின் வளர்ச்சியானது குறைந்த செலவிலான Ace நான்கு சக்கர டிரக் வாகனத்தின் 2005 ஆம் ஆண்டு மே மாதத்தின் வெற்றியின் மூலம் உறுதி நிலைப்பட்டது[தெளிவுபடுத்துக].[36]

இக்கார் வெறும் நான்கு சக்கர ஆட்டோ ரிக்ஷா என ஊகிக்கப்பட்டதற்கு எதிராக தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, இவ்வாகனமானது "ஒரு முறையாக வடிவமைக்கப்பட்ட மற்றும் உருவாக்கப்பட்ட கார்" எனக் கட்டுரை வெளியிட்டது.[38] தலைவர் கூறியதாகச் சொல்லப்பட்டது,"இக்கார் நெகிழித் திரைகளுடனோ அல்லது கூரையுடனோ இருப்பதல்ல- இது ஒரு உண்மையான கார்." [36]

அதன் வடிவமைப்பு இலக்குகளைச் சாதிக்க, டாடா உற்பத்தி முறைகளை செப்பனிட்டார், கண்டுபிடிப்புக்களை வலியுறுத்தினார், மேலும் புதிய வடிவமைப்பு அணுகுமுறைகளை வழங்குநர்களிடமிருந்து எதிர்பார்த்தார்.[38] இக்கார் இத்தாலியின் Institute of Development in Automotive Engineering னால் வடிவமைக்கப்பட்டது- ரத்தன் டாடா சில மாறுதல்களுடன் வேண்டியது,உதாரணமாக கண்ணாடி துடைப்பான்களில் இரண்டில் ஒன்றை நீக்கக் கோரியது உட்பட.[36] நானோவின் பல பாகங்கள் ஜெர்மனியில் பாஷ்நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டவை, இவை ஃபூயல் இஞ்ஜெக்சன்,ப்ரேக் சிஸ்டம்,வால்யூ மோட்டாரானிக் ECU, ABS மற்றும் இதர தொழில்நுட்பங்கள் போல.[39]

நானோ 21% கூடுதல் உட்பகுதியைக் கொண்டது (தலைக்கு மேலிருக்கும் அறையென்ற போதிலும் அதன் உயர்ந்த நிற்றல் நிலையில்) மேலும் 8% சிறிய வெளிப்புறப் பகுதியை அதன் நெருங்கிய போட்டியாளரான மாருதி 800 ஐக் காட்டிலும் பெற்றுள்ளது. காரை டாடா மூன்று பதிப்புகளில் கொடுத்துள்ளது: அடிப்படை Tata Nano; Cx; மற்றும் Lx. Cx மற்றும் Lx பதிப்புகளில் ஒவ்வொன்றிலும் குளிர் பதன வசதி,தானே இயங்கும் சாளரங்கள் மற்றும் மையப் பூட்டு வசதி உள்ளன. டாடா துவக்கத்தில் 250,000 எண்ணிக்கையிலான கார்களை வருடந்தோறும் உற்பத்தி இலக்காக நிர்ணயித்துள்ளது.[மேற்கோள் தேவை]

செலவின குறைப்பு அம்சங்கள் தொகு

  • நானோவின் கதவு பின்புறம் திறக்காது. அதற்குப் பதிலாக பின்புற இருக்கைகள் மடிக்கப்பட்டு பின்புறம் செல்ல முடியும்.[40][41]
  • வழக்கத்திற்கு மாறாக இரு கண்ணாடி துடைப்பான்களுக்குப் பதிலாக ஒன்று மட்டுமே இருக்கும்.[42]
  • பவர் ஸ்டியரிங் கிடையாது.[43]
  • அதன் கதவு திறப்பான் எளிமையாக்கப்பட்டுள்ளது.[44]
  • சக்கரங்களில் நான்கு முடுக்கிகளுக்குப்பதிலாக மூன்று மட்டுமே இருக்கும்.[45]
  • ஒருபுறம் மட்டுமே பார்க்க பார்வைக் கண்ணாடியுண்டு.[46]
  • முன்புற இருக்கைகள் ஒரே போன்றவை மேலும் ஒருங்கிணைக்கப்பட்ட தலை ஓய்வு வசதி உண்டு.

விலை தொகு

 
விக்கிசெய்தியில்

தொடர்பான செய்திகள் உள்ளது.


டாடா துவக்கத்தில் வாகனத்தை "உலகிலேயே[11] குறைந்த விலையிலான உற்பத்திக் கார்" என குறிக்கோள் கொண்டார்- துவக்க விலையாக ரூபாய் 100,000 அல்லது US $ 2000 (அன்றைய அன்னிய செலாவணி மாற்று விகிதத்தை பயன்படுத்தி)மாக as of 22 மார்ச்சு 2009)[12][13] 6 ஆண்டுகளுக்கு முன்பு, [எப்போது?]பண்ட விலைகள் அப்போது உயர்ந்து வந்தாலும் கூட நோக்கமாகக் கொண்டார்.[47]

As of ஆகத்து 2008, கார் மேம்படுத்தப்பட்டு[48] வந்த போது பண்ட விலைகள் 13% லிருந்து 23% மாக உயர்ந்தது, டாடா தன் முன்னிருந்த மாற்றுக்களை சந்தித்தார்[மேற்கோள் தேவை]:

  • காரை செயற்கையாக அரசுத் தரும் மானியங்கள் மற்றும் வரிச் சலுகைகளால் விலைக் குறைவாக அறிமுகம் செய்வது[மேற்கோள் தேவை]
  • இலாபத்தை ஒத்திவைப்பது[மேற்கோள் தேவை]
  • பிற பண்ட உற்பத்தியாளர்கள் தொழில்கள் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் அவற்றின் செலவைக் குறைத்து செயற்கையாக காரின் இலாபத்தைக் கூட்டுவது[மேற்கோள் தேவை]
  • பகுதியளவு விலைக்குறைந்த பாலிமர்கள் அல்லது விரைவில் மக்கக் கூடிய நெகிழிகளை முழு உலோகத்திலான உடற்பகுதிக்கு பதிலாக பயன்படுத்தலாம்[மேற்கோள் தேவை]
  • காரின் விலையைக் கூட்டுவது[48]

முன்மாதிரி பதிப்புகள் தொகு

 
அடிப்படை மாதிரி

அதன் துவக்கத்தில் நானோ மூன்று சீர்நிலை மட்டங்களில் கிடைத்தது.[8]

  • டாடா நானோவின் அடிப்படை விலையான ரூபாய் 123,000 க்கு மேல் அதிகப்படியான கட்டணம் ஏதுமில்லை.
  • டாடா நானோ டீலக்ஸ் CX ரூபாய் 151,000,௦௦௦ குளிர்பதன வசதியுடன் உள்ளது.
  • சொகுசு டாடா நானோ LX ரூபாய் 172,000, குளிர்பதன வசதி, நெய்யப்பட்ட துணி வகை இருக்கைகள் மற்றும் மைய பூட்டு வசதி ஆகியவற்றைக் கொண்டது.
  • நானோ ஐரோப்பா, டாடா நானோவின் ஐரோப்பிய பதிப்பு மேற்சொன்ன அனைத்தையும் தவிர பெரிய கொள்ளளவும், பெரிய மூன்று சிலிண்டர் இயந்திரமும், ஆண்டி-லாக் பிரேக் முறையும் (ABS) மேலும் ஐரோப்பிய விபத்து தரங்களுடன் மாசு கட்டுப்பாட்டு விதி முறைகளையும் சந்திக்கிறது.

அடிப்படை மாதிரி ஓட்டுனர் இருக்கையைத் தவிர குறிப்பிட்ட அளவிலான இருக்கைகளை மட்டுமே கொண்டிருக்கும், இது சரிப்படுத்திக்கொள்ளும்படியானது [தெளிவுபடுத்துக], டீலக்ஸ் மற்றும் சொகுசு மாதிரிகள் குளிர்பதன வசதியுடனும் உடல் நிறத்திலான முட்டுத்தாங்கியுடனும் இருக்கும்.[49]

தொழில்நுட்ப தனிக்குறிப்பீடு தொகு

 
உட்பகுதி

டாடா மோட்டார்ஸ்சின் கூற்றுப்படி, நானோ கார்35 PS (26 kW; 35 hp) 624 cc பின்புற இயந்திரமும், பின்புற சக்கர இழுப்பானுடனும், எரிபொருள் சிக்கனம் 4.55 லி/100 கிமி (22கிமி/லி,51.7 mpg (US),62 mpg (UK) நகரத்திலும், மேலும், 3.85லி/100 கிமி (26கிமி/லி,61.1 mpg (US), 73.3 mpg (UK) நெடுஞ்சாலைகளிலும் தரவல்லது. முதல் முறையாக இரு சிலிண்டர் தடையற்ற பெட்ரோல் இயந்திரம் காரில் ஒற்றைச் சமநிலை எந்திரத்தண்டுடன் பயன்படுத்தப்படுகிறது.[50] டாடா மோட்டார்ஸ் நானோ வடிவமைப்பின் போது ஏற்பட்ட கண்டுபிடிப்புகளுக்கு 34 காப்புரிமை பதிவுகளுக்கு விண்ணப்பித்ததாக கூறியுள்ளவற்றில், பாதிக்கு மேற்பட்டவை பவர்டிரெய்ன் பாகத்திற்காக மேற்கொண்டதாகும்.[51] இத்திட்டத்தின் இயக்குநர் கிரீஷ் வாக் நானோவின் வடிவமைப்புக்கு பின்னணியில் செயல்பட்ட மூளைகளில் முக்கியமானவராக நன்மதிப்பு கொடுக்கப்பட்டுள்ளார்.[51][52]

டாடாவின் நானோ காப்புரிமை விண்ணப்பங்களின் மீதான நிலுவையிலிருந்தவற்றைப் பற்றி அதிகமான அளவில் பேசப்பட்டது. இருப்பினும் புது டில்லி வாகன கண்காட்சியில் செய்தியாளர்களை சந்தித்தப்போது ரத்தன் டாடா இந்த காப்புரிமைகள் புரட்சிகரமானவையோ அல்லது புவியை அதிரவைக்கும் தொழில்நுட்பமோ கிடையாது எனச் சுட்டினார். அவர் கூறினார், இவற்றில் பெரும்பாலானவை கார் தொடர்புடைய இம்மைச் சார்ந்த பாகங்களான இரு-சிலிண்டரின் ஒற்றைச் சமநிலை எந்திரத்தண்டு மற்றும் எவ்வாறு கியர்கள் வண்டி செலுத்தப்படும்போது குறைக்கப்படுகின்றன என்பது பற்றியது.

இருந்தாலும் இந்தக் கார் பல தரப்பிலிருந்தும் பாராட்டுக்களைப் பெற்றது, இது ராய்டர்ஸ் உட்பட. அதற்கான காரணமாக "இதுவரை அணுகப்படாத சந்தையின் பகுதியை குறிவைத்து தற்போதுள்ள தொழில்நுட்பங்களைக் சுண்டி இழுத்துக்கொண்டு செல்லும் முறையினால்," இன்னும் இதே ராய்டர்ஸ்ஸால் நானோ அந்தளவிற்கு "அதன் தொழில்நுட்பத்தில் புரட்சிகரமானதல்ல", விலைக் குறைவானது மட்டுமே எனக் கூறப்பட்டது.[53] மேலும், இன்னும் வெளியிடப்படாத காரின் எதிபார்க்கப்படும் தொழில்நுட்பங்களில் புரட்சிகரமான அழுத்தப்பட்ட காற்று எரிபொருள் அமைப்பும்[54],சூழல் நட்புடனான மின்சார பதிப்பும்[23],உள்ளடக்கப்படடுள்ளன,இவை டாடாக்கள் ஏற்கனவே செய்துவரும் தொழில்நுட்பப் பணிகள் கூறப்பட்டிருந்தாலும், இதுவரை அதிகாரபூர்வமாக இந்தத் தொழில்நுட்பங்களை புதிய காரில் உள்ளடக்கும் தேதி விபரம் வெளியிடப்படவில்லை.

டாடாக்கள், நானோ பாரத் ஸ்டேஜ்-III (ஈரோ-III போன்ற)சூழல் தரக் கட்டுப்பாடுகளையும் கூடவே ஈரோ-IV மாசுக் கட்டுப்பாட்டு விதிகளுக்கும் உட்பட்டது என்கின்றனர்.[55] ரத்தன் டாடாவும் கூறினார்," இந்தக் கார் முன்புறமான மோதல்களையும், பக்கவாட்டு மோதல்களின் பாதிப்பினையும் தாங்கும் தேர்வில் தேறியுள்ளது." [56] டாடா நானோ தேவைப்படும் 'உறுதியளிப்பு' சோதனைகளை புனேயிலுள்ள Automotive Research Association of India (ARAI)மூலம் தேர்ந்துள்ளது. இதன் மூலம் தெரியவருவது என்னவென்றால் அரசால் ஏற்படுத்தப்பட்ட சாலையில் கார் செல்லத் தேவையான அனைத்து குறிப்பிடப்பட்ட, மாசு அல்லது சத்தம் மற்றும் அதிர்வு உட்பட எல்லா தனிப்பட குறித்துக் காட்டப்படும் அம்சங்களையும் சந்தித்து, கார் சாலையில் பறக்கத் தயாரான நிலையிலுள்ளது. டாடா நானோ ARAI யினால் செய்யப்பட்ட 'உறுதியளிப்பு' சோதனையில்3.6 கிமி/லி சென்று சமாளித்தது.[1] இது டாடா நேனோவை எரிபொருள் சிக்கனம் மிகுந்த காராக ஆக்குகின்றது. நானோ கார் தான் இந்தியாவிலேயே ARAI யில் செய்யப்பட்ட சோதனைகளின் உண்மையான எரிபொருள் மைல்கல் தகவல்களை தனது கண்ணாடிகளில் பொருத்தியுள்ள முதல் காராகும். ARAI யை பொருத்தவரை நானோ 2010 போது இந்தியாவில் அமல்படுத்தப்படும் ஈரோ IV மாசு தரக்கட்டுப்பாடுகளைக் கொண்டுள்ளது, இதுவரை ஈரோ III தர நிலையிலேயே உறுதியளிக்கப்பட்டுள்ளது.[57]

பின்புறம் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் தொகு

பின்புறம் பொருத்தப்பட்டுள்ள இயந்திரம் உட்பகுதியை அதிகரிக்க உதவுகிறது, இது மூல வடிவமமும் , மற்றொரு தொழில்நுட்ப கண்டுபிடிப்பான பியட் 500 "மக்கள் கார்" போன்றது. நானோவைப் போன்ற பாணியிலான கருத்துக் கொண்ட, பின்புறம் இயந்திரம் கொண்ட வடிவமைப்புடன் கூடிய UK ரோவர் குழுமத்தால் ௧௯௯௦ 1990 களில் முன்பரிந்துரைக்கப்பட்ட மூல வடிவமான மினியை பின் தொடர்ந்த வாகனமானது தயாரிப்பிற்கு கொண்டு செல்லப்படவில்லை.[58] BMW வினால் இத் திட்டம் எடுத்துக் கொள்ளப்பட்டப் பிறகு புதியமினி கார் தொழில்நுட்ப ரீதியாக மரபு சார்ந்த பெரிய காராகவே இருந்தது. தனித்திருந்த தற்போது செயல்படாத MG ரோவர் குழுமம் பின்னர் தங்களது ரோவர் சிட்டி ரோவர் காருக்கு டாடா இண்டிகாவை அடிப்படையாக வைத்துக் கொண்டது.

காற்றழுத்தப்பட்ட இயந்திரத்தை ஓர் மாற்றாகத் தர டாடா கருதியதாக கூறப்பட்டது.[59]

இயந்திரம் இருபெட்ரோல்சிலிண்டர்களுடன் கூடிய பாஷ் பல்முனை எரிபொருள் ஏற்றி (ஒரு ஏற்றி)முழு அலுமினியத்துடன் 33 horsepower (25 kW)624 cc (38 cu in)
பாஷ்சிடமிருந்து வேல்யூ மோடிரானிக் இயந்திர மேலாண்மைத் தளம்
இரு வால்வுகள் ஒரு சிலிண்டர் மேல்நிலையில் இயக்கியுடன் கூடியது
அழுத்த விகிதம்:9:5:1
துளைxவீச்சு:73.5 mm (2.9 அங்)73.5 mm (2.9 அங்)
வலு:35 PS (26 kW; 35 hp)@௫௨௫௦ rpm[1]
முறுக்குத்திறன்:48 N⋅m (35 ft⋅lbf)@ ௩௦௦௦+/-௫௦௦ [[rpm|rpm[1]]][1][1]
வடிவம் மற்றும் செலுத்தம் பின்புற சக்கர செலுத்தம்
௪-வேக கையேடு செலுத்தம்
திருப்பல் இயக்குமுறை பற்சட்டம் மற்றும் பற்சில்லு நிற்கும் செர்வோ அமைப்புடன்
திரும்பும் ஆரம்: ௪ மீ[1]
செயல்திறன் முடுக்கம்:௦௦௦- 60 km/h (37 mph)௮ வினாடிகள்[1]
அதிகபட்ச வேகம்:105 km/h (65 mph)[1]
எரிபொருள்த் திறன் (ஒட்டுமொத்த)௨௩.௬ 4.24 லிட்டர்கள் per 100 கிலோமீட்டர்கள் (66.6 mpg‑imp; 55.5 mpg‑US)[1]
உடற்பகுதி மற்றும் பருமானம் இருக்கைப் பட்டை:4[60]
பேழை கொள்ளளவு:150 L (5.3 cu ft)[61]
தொங்கல்,சக்கரங்கள் & தடுப்பான்கள் முன்புற தடுப்பான்:௧௮௦ மிமி ௦ உருளை[1]
பின்புற தடுப்பான்:௧௮௦ மிமி உருளை[1]
முன்புறச் சுவடு:[1]1,325 mm (52.2 அங்)
பின்புறச் சுவடு:1,315 mm (51.8 அங்)[1]
மனை இளக்கம்:180 mm (7.1 அங்)[1]
முன்புற தொங்கல்:மெக்பெர்சன் முட்டு கீழ் A கையுடன்
பின்புற தொங்கல்:தனிப்பட்ட வில் சுருள்
12௧௨-இன்ச் சக்கரங்கள்[62]
சப்ளையர்[63] பார்ட்/சிஸ்டம்[63]
டெக்ஸ்பின் கிளட்ச் பேரிங்ஸ்
பாஷ் எரிபொருள் ஏற்றியமைப்பு (டீசல் பின்னர் வரும்),ஸ்டார்டர்,ஆல்டெர்னேட்டர்,ப்ரேக் அமைப்பு
காண்டினெண்டல் ஏஜி எரிபொருள் அளிப்பு அமைப்பு, எரிபொருள் இருப்பு உணர்த்தி
காப்பாரோ உள் கட்டமைப்பு பலகை
எச் எஸ் ஐ ஆட்டோ நிலைத்த கூரையமைப்பு (பருவநிலை துண்டு)
டெல்பி இண்ஸ்ட்ருமெண்ட் கிளஸ்டர்
டென்சோ கண்ணாடி துடைப்பான் அமைப்பு (ஒரு இயக்கி மற்றும் கை)
எஃப் ஏ ஜி பின்புற சக்கரத் தாங்கி
ஃபிக்கோசா பின்புற பார்வை கண்ணாடி. உள் கண்ணாடி, மானுவல் மற்றும் CVT ஷிப்டர்ஸ்,வாஷர் சிஸ்டம்
புரூடென்பெர்க் இயந்திரக் கூரை
ஜிகேஎன் செலுத்தி இயந்திரத்தண்டு
ஐஎன்ஏ ஷிப்டிங் எலிமெண்ட்ஸ்
ஐடிடபிள்யூ டெல்டார் உள் மற்றும் வெளிக் கதவு பிடிகள்
ஜான்சன் கண்ட்ரோல்ஸ் இருக்கை வசதி
மாஹ்லே மேல்நிலை இயக்கியுடன் கூடியது,தற்சுழற்சி எண்ணெய் வடிகட்டிகள்,எரிபொருள் வடிகட்டிகள் மற்றும் காற்று தூய்மையாக்கிகள்
செயிண்ட்-கோபெய்ன் க்ளேசிங்
டிஆர்டபிள்யூ தடுப்பான் அமைப்புகள்
சீக்கேய் டாய்க்கின்/வாலியோ கிளட்ச் ஜோடிகள்
விப்ராகொவுஸ்டிக் இயந்திர பொருத்துக்கள்
விஸ்டியான் காற்று தூண்டல் அமைப்பு
இசட் எஃப் பிரீட்ரிக்ஷாபென் ஏஜி வண்டி உதிரிபாகங்கள்,டை ராட்ஸ் உட்பட
பெஹர் சொகுசு பதிப்பிற்கு HVAC
தூர் லீன் பெயிண்ட் ஷாப்


ஊகிக்கப்படும் வேறுபாடுகள் தொகு

 
டாடா நானோ ஐரோப்பாவிற்கான எதிர்கால மாதிரி

வழக்கமான பெட்ரொல்[32] மற்றும் மரபு சார்ந்த தவிர கீழ்க்காணும் வேறுபட்ட வகைகளும் வெளிவருமென எதிர்பார்க்கபடுகிறது.

டீசல் தொகு

ஒரு இணையதளம் டாடா நானோ 690 cc டீசல் இயந்திரத்துடன் 2009 ஆம் ஆண்டு செப்டம்பரில் வெளிவருமெனத் தெரிவித்தது.[64] டாடா மோட்டார்ஸ் இதுவரை இதனை உறுதி செய்யவில்லையென்பது டீசல் பதிப்பு எதிர்காலத்தில் அறிமுகப்படுத்தப்படும் என்பதை சைகைப்படுத்தியது. "இதுவரை டீசல் மாறுபட்ட மாதிரி கொடுக்கப்படவில்லை. தற்போது பெட்ரோல் பதிப்பாகவே அளிக்கப்படவுள்ளது."[65]

காற்றழுத்தப்பட்ட இயந்திரம் தொகு

டாடா மோட்டார்ஸ் பிரெஞ்சு நாட்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து காற்றழுத்தப்பட்ட இயந்திரத்தை எரிபொருளாக பயன்படுத்த வேலை செய்கிறது.[54] இந்த காரணத்திற்காக நிறுவனம் Moteur Development International (MDI) யோடு உடன்படிக்கையொன்றை ஏற்படுத்தியுள்ளது.[32]

மின்சார செலுத்துவாகனம் அல்லது மின்சார பதிப்பு தொகு

டாடாக்கள் மின்சார பதிப்பொன்றையும் தயாரித்து வருவதாகவும், அதற்கு மின்-நானோ எனப் பெயரிடப்பட்டுள்ளதாகவும் (சூரிய சக்தி தகடுகள் பொருத்தப்பட்டதாகவோ அலலது பக்கவாட்டிலோ)[23][66] இது "உலகின் விலை குறைவான மின்சார கார்"[67] ஆக மாறுமென கருதவும் சூழல் நட்பு மிகுந்திருப்பதால் பல ஆர்வலர்கள் மற்றும் ஊடக ஆதரவும் பெற்றிருக்கிறது.[68] மரபுச் சார்ந்த எரிபொருள் பதிப்புக்கள் போன்று இதுவும் விலை குறைவானதாக இருக்குமென கூறப்படுகிறது. டாடா நானோவை ஏற்றுமதிச் சந்தை கட்டுப்பாடுகளுடன்[69] கூடிய வகையில் இருக்கவும், அது போன்றதொரு காரை உலகம் முழுதும் ஏற்றுமதி செய்யவும், குறிப்பாக UK மற்றும் மீதமுள்ள ஐரோப்பா கண்டம்[25][26],[70] US மற்றும் ஆஸ்திரேலியாவிற்கு செய்ய திட்டமிட்டுள்ளது.[27][71][72][73]

ஈகனாமிக் டைம்ஸ் கூறியது[74] "மின்சார நானோ" இன்னும் கூட நல்லவிதமான பொருளாதார, சுத்தமான மற்றும் சூழல் எண்ணங்களுடன் தனிப்பட்ட வாகனமாக உலகம் முழுதும் இருக்கும்."ஆட்டோ பில்ட்,என்னும் ஹாம்பர்க் நகர பத்திரிகையின்படி, மின்-நானோ நார்வே நாட்டு மின் கார் நிபுணர்களான Miljøbil Grenland AS ன் ஒத்துழைப்புடன் கட்டப்படுகின்றது.[75][76][77][78]

கலப்பின கார் தொகு

லெஃப்ட்லானென்நியூஸ் கூறியது " கலப்பு எரிபொருள் பதிப்பும் (டாடா நானோவின்)வரலாம், எனினும் மின்சார மோட்டாருக்கு இணையாக எந்த வகையான எரிபொருளைக் கொண்ட பெட்ரோல் அல்லது டீசல் பதிப்பை வெளியிடுவது என்பது பற்றி இதுவரை தெரியவில்லை.[79]

நானோ ஐரோப்பா தொகு

டாடா மோட்டார்ஸ் 2009 ஜெனிவா வாகன கண்காட்சியின்போது நானோ ஈரோப்பா என்ற நானோ சிறு காரினை வெளியிட்டது. ஐரோப்பா மற்றும் UK[80] செல்லும் கார் சாதாரண நானோவைவிட பல மேம்பாடுகளைக் கொண்டிருக்கும். நானோ ஐரோப்பா அதிகரிக்கப்பட்ட சக்கர அடித்தளமும்,புதிய 3சிலிண்டர் இயந்திரம் மற்றும் உட்புற மற்றும் வெளிப்புற மேம்பாட்டினையும் கொண்டிருக்கும். நானோ ஐரோப்பா விலை கூடுதலாகவும், கனமாகவும், குறைந்த எரிபொருள் சிக்கனத்துடனும் சாதாரண நானோவைவிட US $6000 விலை அளவுடனிருக்கும்.[81]

எதிர்பார்ப்புகள் தொகு

ஒரு அறிக்கையின்படி இந்தியா, மற்ற நாடுகளைப் போல குறிப்பாக ஐரோப்பிய நாடுகளைப் போல நானோவைப் பற்றி ஏராளமான எதிர்பார்ப்புகள் உண்டு. மேலும் குறிப்பாக நானோ[82] மின்சார பதிப்பிற்காக ஆர்வமுடன் காத்திருக்கின்றனர், அதிகாரபூர்வமாக ஆவணங்களில்[67][83] இருப்பது போன்று "உலகின் விலைக்குறைவான மின்சாரக் கார்" நிகழக்கூடியதாக ஆக்கியுள்ளது. கார் தானாகவே இந்தியப் பொருளாதாரத்தை மேம்படுத்துவதோடு இந்திய கார் சந்தையையும் 65% விரிவுபடுத்தும் என தரப்படுத்துதல் நிறுவனமான CRISIL கூறியுள்ளது.[19]

இந்திய பொருளாதாரத்தில் ஏற்படுத்தக்கூடிய பாதிப்புகள் தொகு

எகனாமிக் டைம்ஸ் குறிப்பிடுகிறது:[19]

வரலாற்றில் இடம் தொகு

சில செய்தி தோற்றுவாய்கள் நானோவை ஹென்றி ஃபோர்ட்டின் ஒரு நூற்றாண்டுக்கு முன் செய்தமாதிரி டி காருடன் ஒப்பிட்டனர்: லைவ்மிண்ட் கூறியது:

டைம்ஸ் ஆஃப் இந்தியாவும் நானோவை மாதிரி டி யுடன் ஒப்பிட்டது:

நானோ இன்னும் தயாரிப்பிற்கு வரவில்லையென்றாலும், கின்னஸ் உலக் சாதனைப் புத்தகத்தில் ஏற்கனவே இடம்பெற்றுவிட்டது.[83]

சிங்கூர் தொழிற்சாலை வெளியேற்றம் தொகு

பலத்த ஊகங்களுக்குப் பிறகு, டாடா மோட்டார்ஸ் 2006 ஆம் ஆண்டு மே 19 அன்று மேற்கு வங்கத்திலுள்ள சிங்கூரில் டாடா நானோவை உற்பத்திச் செய்யப்போவதாக அறிவித்தது.[86] இருப்பினும், ஒரு வாரத்திற்குள் ஒரு சில விவசாயிகள் டாடா நிறுவனம் தங்கள் நிலங்களைக் கையகப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களைத் துவங்கினர்.[87] இந்த வழக்கு மமதா பானர்ஜி, திரிணமுல் காங்கிரஸ் தலைவர் அவர்களால் கைக்கொள்ளப்பட்டது.[88] சூழ்நிலை டாடாக்கள் வெளியேறுவதாக மிரட்டும் அளவிற்கு சென்றது[89],மேலும் தானாகவே நிலம் தர முன்வந்த விவசாயிகளுக்கான இழப்பீட்டுத் தொகை பட்டுவாடாவும் எதிர்ப்பாளர்களால் தடைப்பட்டது.[90] இது பின்னர் திரிணமுல் காங்கிரஸ்சால் அக்டோபரில் கடைப்பிடிக்கப்பட்ட மாநிலம் தழுவிய கடையடைப்பு போராட்டத்தில் தொடர்ந்தது.[91] மாநில அரசு அரசியல் கட்சிகள் சிங்கூரில் கூட்டங்கள் அல்லது ஊர்வலங்கள் நடத்த தடை விதித்தது, மேலும் பெரிய காவற்படையை அங்கே நிலைநிறுத்தியது.[92][93] 2006 ஆம் ஆண்டு டிசம்பர் 2 ஆம் நாள் காவலர்களுக்கும் விவசாயிகளுக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் பரவலான வன்முறை ஏற்பட்டது.[94]

2006 ஆம் ஆண்டு டிசம்பர் 4 அன்று மமதா பானர்ஜி உண்ணாநிலைப் போராட்டதில் இறங்கினார். அதன் பின்னர், ஓர் 48 மணி நேர வேலை நிறுத்தம் அவரால் அறிவிக்கப்பட்டது. இது தபசி என்னும் விவசாய நில பாதுகாப்புக் குழு பிரச்சாரகரின் எரிந்த உடற்பகுதி நானோ சிங்கூர்ஆலைப்பகுதியில் கண்டெடுக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து அறிவிக்கப்பட்டது.[95] இரு இடது கம்யூனிஸ்ட் கட்சித் தொண்டர்கள் பின்னர் கொலைக்காக ஆயுள் தண்டனை வழங்கி தண்டிக்கப்பட்டனர்.[96] அவரது 24 ஆம் நாள் போராட்டத்தின்போது, பானர்ஜிக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டது. இறுதியாக அன்றைய குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரது வேண்டுகோள்களுக்குப் பிறகு தனது உண்ணாநிலைப் போராட்டத்தை விலக்கிக் கொண்டார்.[97]

நிலத்தின் மீதான எதிர்ப்புகள் 2007[98] ளிலும் தொடர்ந்த போது, ரத்தன் டாடா இச்சர்ச்சையில் வர்த்தகப் போட்டியாளர்களின் பங்கிருப்பதாகக் குற்றஞ்சாட்டினார்.[99] பிப்ரவரி 2007 ல் நில கையக்கப்படுத்துதல் துவக்கத்தில் விமர்சிக்கப்பட்டாலும் பின்னர் 2008 ல் கொல்கொத்தா உயர் நீதி மன்றத்தால் அங்கீகரிக்கப்பட்டது.[100][101] அரசியல் அமைதியின்மையும் மழையும் ஆலை நிறுவுதலை தடைச் செய்ததால் டாடா மோட்டார்ஸ் நானோ துவக்கத்தை செப்டெம்பர் 2008 வரை தாமதித்தது.[102]

வன்முறை 2008[103][104][105] முழுதும் தொடர்ந்தது. மேலும் 2008 ஆம் ஆண்டு செப்டம்பரில் டாடா மோட்டார்ஸ் சிங்கூரில் தங்கள் பணியை இடை நிறுத்தம் செய்வதாக அறிவித்தது.[106] அக்டோபர் 2 2008 ஆம் ஆண்டு டாடா மோட்டார்ஸ் சிங்கூரிலிருந்து வெளியேறுவதாக அறிவித்தனர்.[107] அக்டோபர் 7 2008 ல் குஜராத் முதல்வர் நரேந்திர மோடி டாடா மோட்டார்ஸ்சுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று மூலம் நானோ ஆலைத் தொடங்க குஜராத்தில்அகமதாபாத் மாவட்டத்தில் சனந்த் எனும் பகுதியில் நிலம் அளிக்க கையொப்பமிட்டார்.[108]

விமர்சனங்கள்,விவகாரங்கள் மற்றும் பிரச்சினைகள் தொகு

பாதுகாப்பு பற்றிய கேள்விகள் தொகு

தி டைம்ஸ் இதழ் கூறுகிறது:[28]

டாடா மோட்டார்ஸ் நானோவை இந்தப் பாதுகாப்பு அம்சங்களுடன் மின்சார பதிப்பில் ஒரு காற்றுப்பை அமைப்பு உட்பட நானோ பதிப்புகளை அளிக்கும்.[மேற்கோள் தேவை]ஜப்பான் மற்றும் கொரியா தயாரிப்புகளான முழு உலோக உடற் பகுதியை நானோ பாதுகாப்பு அம்சங்களான கிரம்புள் சோன்ஸ், உட்புகா எதிர்ப்பு கதவுகள், இருக்கை பட்டிகள், வலுவான இருக்கைகள் மற்றும் கைதாங்கிகள், உடலுடன் இணைக்கப்பட்ட பின்புறக் கண்ணாடி போன்றவற்றுடன் கூடியது. சக்கரங்களுக்கு குழாய்கள் கிடையாது.

பேரளவு வாகனமயமாக்கல் தொகு

நானோ தற்போது சூழல் நட்புக் கொண்ட மிதி வண்டிகளையும் மற்றும் இரு சக்கர வாகனங்களையும் பயன்படுத்தும் மக்கள் கூட்டத்தில் உருவாக்கப்பட்டும் வடிவமைக்கப்பட்டும் அறிமுகப்படுத்தப்படும்போது சூழலியலாளர்கள் அதன் மிகக் குறைந்த விலை பேரளவு வாகனமயமாக்கல் இந்தியா போன்ற நாடுகளில் மாசினை அதிகரிப்பதோடு எரிபொருள் தேவையையும் அதிகரிக்கும் என கவலைத் தெரிவிக்கிறார்கள். சூழல் மீது கவனம் கொண்ட ஜெர்மன் செய்தித்தாளான டெய் டாகெஸ்சீதுங் டாடா நானோ குறைந்த அளவில் வோல்ஸ்வேகன் போன்ற வாகனங்களோடு ஒப்பிடும்போது மாசினை வெளியிடுவதால் இது போன்றகவலைகள் "பொருத்தமற்றவை" என உணர்த்துகிறது. மேலும் தொழில்மயமான நாடுகள் தங்களது மாசு அளவினை குறைக்கவும் கார் பயன்பாட்டினை குறைக்கவும் காண விழைய வேண்டிய போது வளரும் நாடுகள் அவர்களது வாகன போக்குவரத்து உரிமைகளை மறுக்கப்படக் கூடாது என்கிறது.[109] டெய் வெல்ட்த் காரானது சூழல் பாதுகாப்பு விதிகளை பூர்த்தி செய்வதோடு இந்தியாவில் குறைந்த மாசுபாட்டையே ஏற்படுத்தும் எனக் கூறுகிறது.[110]

மும்பை போன்ற நெருக்கடி மிகுந்த மாநகரங்களில் ரத்தன் டாடா எத்தகைய வாகனத்தையும் வைத்திருக்காத தனிநபர்களுக்கு மட்டுமே நானோவை வழங்கும் திட்டத்தை உருவாக்கியிருக்கிறார். நானோ மேற்கொண்டு அதிகச்சுமைக்கொண்ட மற்றும் தேய்ந்த்துப்போன இரு- விசை மாசு ஏற்படுத்தும் இரு மற்றும் மூன்றுச் சக்கர வாகனங்களின் இடத்தை இட்டு நிரப்பும். புது டில்லியிலுள்ள Centre for Science and Environment யின் இணை இயக்குநர் அனுமிதா ராய்சொளத்திரியின் கூற்றுப்படி தற்போதைய கொள்கை மற்றும் கட்டுப்பாட்டு வரைச்சட்டங்களின்படி "விலைக்குறைந்த கார்கள் அழிவுண்டாக்குபவை." [54]

பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தை விளைவுகள் தொகு

நானோ பயன்படுத்தப்பட்ட கார்களின் சந்தையை கடுமையாகப் பாதிக்கும், ஏனெனில் பல இந்தியர்கள் நானோவின் வெளியீட்டிற்காக காத்திருந்து, நானோவின் நெருங்கிய போட்டியாளரான மாருதி 800 ( மீண்டும் அடையாளம் கண்ட சுசூகி ஆல்டோ) ன் பயன்படுத்தப்பட்ட கார்களை வாங்கத் தயங்குகின்றனர். நானோவின் வெளியீட்டிற்குப் பிறகு பயன்படுத்தப்பட்ட கார்களினுடையதும்,மாருதி 800 கார்களினுடையதும் முறையே 30% மற்றும் 20% விற்பனை குறைந்துவிட்டது. ஒரு வாகன இதழியலாளர் தொகுத்துக் கூறுகிறார்: " மக்கள் தங்களைத் தானேயும்-எங்களையும் கேட்கிறார்கள்-ஏன் அவர்கள் 250,000 ரூபாய்களை மாருதி ஆல்டோவிற்கு கொடுக்க வேண்டும், எப்போது அவர்கள் காத்திருந்து புதிய நானோவை குறைந்த விலைக்கு அதுவும் உண்மையில் அளவில் பெரியதானதை ஒரு சில மாதங்களில் பெற முடியும்போது." [111]

போட்டியாளர்கள் தொகு

போட்டிக் கார் தயாரிப்பாளர்களான பஜாஜ் ஆட்டோ.பியட்,ஜெனரல் மோட்டார்,ஃபோர்ட் மோட்டார்,ஹுயூண்டாய் மற்றும் டயோட்டா ஆகிய அனைவரும் வளரும் சந்தைகளில் நடுத்தரு நுகர்வோருக்கு வாங்கக கூடிய விலையில் சிறிய காரினைத் தயாரிக்க ஆர்வம் தெரிவித்துள்ளனர். மககள் அடிக்கடி மாறுபடுகிற எரிபொருள் விலைப் பற்றி கவனம் கொண்டிருப்பதால் சிறிய கார்களின் தேவை பெரிய அளவிலுள்ளது.

ஹோண்டா மற்றும் டயோட்டா ஆகிய நிறுவனங்கள் தூய்மையான பெட்ரோல்-மின்சார கலப்பு கார்களின் தயாரிப்பில் முன்னணியிலுள்ளனர், மேலும் சில சூழலியலாளர்கள் இது போன்ற தொழில்நுட்பங்களின் விலையைக் குறைப்பதில் முயற்சிகள் கவனம் கொள்ள வேண்டுமென வாதிடுகின்றனர். அதிக செலவில்லாத மற்றும் சூழல் நட்புக் கொண்ட மின்சார கார்களான தாரா டைனி, ஒரேவா சூப்பர் ( இரண்டும் டாடா நானோவைவிட விலை குறைவானவை எனக் கூறப்படுகிறது)மற்றும் REVA [112] குறிப்பிடத்தக்க ஆபத்தை நானோவிற்கு தரக் கூடியவை. டாடா நானோவை எதிர்கொள்ள மாருதி சுசூகி குறைந்த விலைக் கொண்ட ஆல்டோவை அறிமுகப்படுத்தப் போவதாக வதந்திகளும் உள்ளன.[113]

மேலும் காண்க தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
டாடா நானோ
என்பதில் ஊடகங்கள் உள்ளன.


குறிப்புகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 "Official specifications for Tata Nano". Tata Motors. Archived from the original on 2012-03-14. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  2. "Specifications of Tata's Nano". cardesignnew. Archived from the original on 2012-03-13. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  3. "Review of Tata Nano" (in English). TechWebToday. Archived from the original on 2009-06-25. பார்க்கப்பட்ட நாள் 2009-06-24.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  4. Mohanty, Mrituinjoy (2008-01-10). "Why criticising the 1-Lakh car is wrong". Rediff News. http://www.rediff.com/money/2008/jan/04tatacar.htm. பார்த்த நாள்: 2008-01-10. 
  5. "Nano receives over 2.03 lakh bookings". The Hindu. 2008-03-23. http://www.hindu.com/holnus/006200905050333.htm. பார்த்த நாள்: 2009-05-05. [தொடர்பிழந்த இணைப்பு]
  6. "Nano, the Rs 1-lakh car, hits the road". Times of India. 2008-03-23. http://timesofindia.indiatimes.com/Nano-the-Rs-1-lakh-car-hits-the-road/articleshow/4305642.cms. பார்த்த நாள்: 2008-03-23. 
  7. http://www.detnews.com/apps/pbcs.dll/article?AID=/20090324/AUTO01/903240352/1148/&source=nletter-business[தொடர்பிழந்த இணைப்பு]
  8. 8.0 8.1 "Tata Nano". cardekho.com. பார்க்கப்பட்ட நாள் 2009-03-24.
  9. "Maruti 800". பார்க்கப்பட்ட நாள் 2009-03-24.
  10. Sirish. "Tata Nano First Drive at Overdrive". Overdrive (magazine). பார்க்கப்பட்ட நாள் 2009-03-24.
  11. 11.0 11.1 "Tata Nano — world's cheapest new car is unveiled in India". driving.timesonline.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2008-01-21.
  12. 12.0 12.1 "Tata unveils Nano, its $2,500 car". MSN. 10 January 2008. Archived from the original on 2008-01-11. பார்க்கப்பட்ட நாள் 2008-01-11.
  13. 13.0 13.1 "First Look: Ratan Tata unveils Nano". IBN. 2008-01-10. http://www.ibnlive.com/news/first-look-ratan-tata-unveils-nano/56038-7.html. பார்த்த நாள்: 2008-01-10. 
  14. "Small, It's The New Big". Newsweek, Keith Naughton, Feb 25, 2008. Archived from the original on ஏப்ரல் 10, 2009. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 28, 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  15. Dawn News: The Nano: small is beautiful, by Rahul Singh
  16. "Nano — Definition from the Merriam-Webster Online Dictionary". Merriam-webster.com. 2007-04-25. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.
  17. Hagel, John (2008-02-27). "Learning from Tata's Nano". Businessweek.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  18. "Learning from Tata's Nano". Businessweek.com. 2008-02-27. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  19. 19.0 19.1 19.2 "Tata Nano may expand market by 65%: CRISIL- Automobiles-Auto-News By Industry-News-The Economic Times". Economictimes.indiatimes.com. 2008-01-12. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  20. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-05-17. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  21. money. "The world's cheapest car arrives tomorrow — MSN Money". Articles.moneycentral.msn.com. Archived from the original on 2008-01-11. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  22. "Green Technology and Environmental Science News: ENN — Know Your Environment". ENN. 2008-06-19. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  23. 23.0 23.1 23.2 IANS 21 August 2008, 12:12am IST (2008-08-21). "Tata plans electric version of Nano — International Business — Business — NEWS — The Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  24. "Tata planning electric-drive version of Nano". Hindustan Times. 2008-08-20. Archived from the original on 2008-12-24. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  25. 25.0 25.1 10 January 2008 (2008-01-10). "World's cheapest car launched: Tata Nano". Autocar. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  26. 26.0 26.1 "India: Tata to export Nano to Europe from 2012". Automotive World. 2008-02-11. Archived from the original on 2008-02-12. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  27. 27.0 27.1 Agencies (2008-05-13). "Tata may export 'Nano' to promising mkts". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  28. 28.0 28.1 [1][தொடர்பிழந்த இணைப்பு]
  29. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-08-30. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  30. The Associated Press (2008-01-10). "Tata Motors rolls out Nano, the world's cheapest car". Cbc.ca இம் மூலத்தில் இருந்து 2008-01-11 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080111123157/http://www.cbc.ca/consumer/story/2008/01/10/nano-tata.html. பார்த்த நாள்: 2009-06-08. 
  31. Topolsky, Joshua (2008-07-03). "Tata's Nano to begin production this Fall, eco-friendly version on the way?". Engadget.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  32. 32.0 32.1 32.2 "Tata to launch E-Nano this Diwali". Merinews.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.[தொடர்பிழந்த இணைப்பு]
  33. "Now, Honda and Mitsubishi follow Nano to Gujarat- Automobiles-Auto-News By Industry-News-The Economic Times". Economictimes.indiatimes.com. 2008-11-18. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  34. Shweta Bhanot (2008-09-20). "Nano dampener for Tata dealers". The Financial Express. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  35. "Nano gets a new home: We are not orphans, says Tata- Interviews-Opinion-The Economic Times". Economictimes.indiatimes.com. 2008-10-07. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  36. 36.0 36.1 36.2 36.3 "The Next People's Car". Yahoo Finance. 2007-04-17. http://finance.yahoo.com/family-home/article/102865/the-next-peoples-car. பார்த்த நாள்: 2008-01-11. 
  37. "1 lakh car drives 1 billion dreams". Indian Express. 2008-01-11. http://www.indianexpress.com/story/260232.html. பார்த்த நாள்: 2008-01-15. 
  38. 38.0 38.1 "All eyes on Tatas' Rs 1 lakh car". Times of India. 2008-01-08. http://timesofindia.indiatimes.com/All_eyes_on_Tatas_Rs_1_lakh_car/articleshow/2681795.cms. பார்த்த நாள்: 2008-01-14. 
  39. பாஷ் டாடா நானோவிற்கு உதிரிபாகங்கள் தயாரிப்பது பற்றிய டூ சர்க்கிள்ஸ் கட்டுரை
  40. ஆட்டோ கார் இந்திய சோதனை ஓட்டம்
  41. Steve Cropley. "Tata Nano driven — first drive". Autocar. பார்க்கப்பட்ட நாள் 2009-03-24. 2 minutes in video shows trunk space
  42. நானோ என்னும் முழுமையானக் கார்
  43. "டாடா நானோ- டாடா மோட்டார்ஸ்சின் மக்கள் கார்-அடிக்கடி கேட்கப்படும் கேள்விகள்". Archived from the original on 2010-05-05. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  44. BBCnews.com 2008 01 article on cost-cutting methods
  45. Tata Nano - Nano second to none!
  46. "Time.com article on Nano". Archived from the original on 2009-05-14. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  47. "Materials prices could push up cost of Tata's Nano". Motor Authority, 7 July 2008. Archived from the original on 2 டிசம்பர் 2008. பார்க்கப்பட்ட நாள் 28 அக்டோபர் 2009. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  48. 48.0 48.1 Nelson Ireson (2008-08-05). "Rising costs could eat Tata Nano's profits". Motor Authority, Tuesday 5 August 2008. Archived from the original on 2008-12-02. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  49. Adil Jal Darukhanawala. "Launch: ONE Lakh Rupee Tata Nano reviewed by ZigWheels". பார்க்கப்பட்ட நாள் 2009-03-24. 25 seconds into video
  50. "Tata Nano, Unveiled!". Gawker Media. 2008-01-10. http://jalopnik.com/tag/tata-nano/. பார்த்த நாள்: 2008-01-10. 
  51. 51.0 51.1 "It’s a car, not an apology". Times of India. 2008-01-11. http://epaper.timesofindia.com/Default/Scripting/ArticleWin.asp?From=Archive&Source=Page&Skin=TOI&BaseHref=TOIM/2008/01/11&PageLabel=1&EntityId=Ar00102&ViewMode=HTML&GZ=T. பார்த்த நாள்: 2008-01-11. 
  52. "The Next Peoples' Car". Forbes. 2007-04-16 இம் மூலத்தில் இருந்து 2012-12-08 அன்று. பரணிடப்பட்டது.. https://archive.today/20121208212118/http://www.forbes.com/forbes/2007/0416/070_2.html. 
  53. "Events/Miscellaneous » Blog Archive » Detroit auto show: Tata's Nano is talk of show | Blogs |". Blogs.reuters.com. 2008-01-15. Archived from the original on 2009-05-27. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  54. 54.0 54.1 54.2 ENN: How green is my low-cost car? India revs up debate
  55. "Ratan Tata unveils Rs 1-lakh 'Nano'". expressindia.com. Archived from the original on 2008-01-11. பார்க்கப்பட்ட நாள் 2008-01-10.
  56. "This is what the Tata Rs 1-lakh car looks like!". rediff.
  57. "Nano passes Indian road test". indiatimes.com.
  58. "Rover Mini 'Spiritual' project". austin-rover.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2008-01-13.
  59. "Tata Nano To Offer Compressed Air Engine Optional, Make Electric Cars Look Silly". பார்க்கப்பட்ட நாள் 2008-07-22.
  60. Ruth David (January 10, 2008). "Tata Unveils The Nano, Its $2,500 Car". Forbes.com. Archived from the original on ஜனவரி 16, 2008. பார்க்கப்பட்ட நாள் அக்டோபர் 28, 2009. {{cite web}}: Check date values in: |archivedate= (help)
  61. "Nano Mania". Autocar India. February 2008 இம் மூலத்தில் இருந்து 2008-04-27 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20080427081838/http://www.autocarindia.com/new/Information.asp?id=2002. பார்த்த நாள்: 2008-02-05. 
  62. "India's £1,250 car". autoexpress.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2008-01-14.
  63. 63.0 63.1 "India's Tata low-cost Nano took a lot of high-tech". ae-plus. Archived from the original on 2008-08-20. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  64. "Tata Nano Diesel version roll out by September 2009". 2008-09-15. Archived from the original on 2009-03-29. பார்க்கப்பட்ட நாள் 2009-03-24.
  65. "Tata Motors - FAQ for the Nano". Tata Motors. Archived from the original on 2010-05-05. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  66. "Tata planning electric-drive version of Nano". Hindustan Times. 2008-08-20. Archived from the original on 2008-12-23. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  67. 67.0 67.1 "The Tata Nano: World's Cheapest (Electric) Car? | EcoGeek — Clean Technology". EcoGeek. 2008-07-30. Archived from the original on 2009-06-21. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  68. "Let Tata's Nano be electric". Merinews.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.[தொடர்பிழந்த இணைப்பு]
  69. "Tata's Nano Likely To Face Price, Competitive Pressures". Forbes.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  70. "Tata may export Nano to US". Rediff.com. 2004-12-31. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  71. "tata nano export plans". Autofix.Com.Au. Archived from the original on 2009-01-07. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  72. "Insider» Tata Nanoâ€"the Rs. 1 lakh car revealed". Lucire. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  73. "Tata 'NANO' - The People's Car from Tata Motors". Tatanano.inservices.tatamotors.com. 2008-03-05. Archived from the original on 2009-04-28. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  74. "Tata's new volt colts! - Auto-The Economic Times". Economictimes.indiatimes.com. 2008-09-25. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  75. "Miljøbil Grenland AS". Miljobil.no. Archived from the original on 2018-11-16. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  76. "Tata plans E-Nano, electric version of Rs1-lakh car". domain-b.com. 2008-08-20. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  77. Roshan PM (2008-08-21). "Tata Motors palnning electric-drive version of the Nano: Report". AutoIndia.com. Archived from the original on 2009-02-16. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  78. "Tata plans E-Nano, electric version of Rs1-lakh car". domain-b.com. 2008-08-20. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  79. "Tata Nano to get diesel, hybrid engines in addition to gasoline". Leftlanenews.com. 2008-07-24. Archived from the original on 2008-12-29. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  80. http://www.autonews.com/article/20090304/ANE02/903039952/1164
  81. "Tata Nano Europa &raquo Australian Car Advice | News Blog". Caradvice.com.au. 2009-03-04. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  82. "National : Europe awaiting Nano car's electric version". The Hindu. 2008-09-14. Archived from the original on 2009-05-23. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  83. 83.0 83.1 "Latest Guinness Book celebrates Tata Nano Car". Ibnlive.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  84. "The car...and the planner — Views". livemint.com. 2008-09-14. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  85. Surendra Munshi15 September 2008, 12:00am IST. "LEADER ARTICLE: More Than Just A Nano — Edit Page — OPINION — The Times of India". Timesofindia.indiatimes.com. பார்க்கப்பட்ட நாள் 2009-07-17.{{cite web}}: CS1 maint: numeric names: authors list (link)
  86. டாடா மேற்கு வங்க கார் ஆலை அறிவிப்பு
  87. "கிராமவாசிகள் கார் நிறுவனத்தை எதிர்த்து கோஷங்கள் எழுப்புகின்றனர்". Archived from the original on 2012-11-08. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  88. மமதா டாடா நில விவகாரம் ரத்தக் களறியாகும் என அச்சுறுத்துகிறார்
  89. சிங்கூரிலிருந்து வெளியேறுவதாக டாடாக்கள் எச்சரிக்கை
  90. சிங்கூரை குழப்பங்கள் ஆள்கின்றன[தொடர்பிழந்த இணைப்பு]
  91. திரிணமுல் ஆதரவு கடையடைப்பு அன்றாட வாழ்க்கையை மேற்கு வங்கத்தில் பாதிக்கிறது
  92. "சிங்கூரில் பாதுகாப்புப் போர்வை". Archived from the original on 2015-10-01. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  93. டாடா மோட்டார்ஸ் திட்டத்தின் எதிர்ப்பை மேற்கு வங்கம் தடைச் செய்கிறது
  94. 80 பேர் சிங்கூர் போராட்ட வெடிப்பில் காயம்[தொடர்பிழந்த இணைப்பு]
  95. சிங்கூர் போராட்டக்காரர் இறந்து கிடந்தார்
  96. சிபிஎம் கட்சித் தொண்டர்களுக்கு தபசி கொலையில் ஆயுள் தண்டனை
  97. உன்ணாநிலையை கைவிட மமதா முடிவு
  98. புதிய வன்முறைச் சம்பவங்கள் சிங்கூரில் வெடிக்கின்றன[தொடர்பிழந்த இணைப்பு]
  99. டாடா:போட்டியாளர்களின் பங்கு பற்றி ஆதாரங்கள் எங்களிடம் இருக்கிறது
  100. சிங்கூர் நில கையகம் சட்ட விரோதமாகத் தெரிகிறது: உயர்நீதி மன்றம்
  101. சிங்கூர் நில கையகம் சட்டப்பூர்வானது:கல்கொத்தோ உயர்நீதிமன்றம்[தொடர்பிழந்த இணைப்பு]
  102. [ http://inhome.rediff.com/money/2007/aug/03tata.htm Rain, political unrest delay Tatas' dream car]
  103. சிங்கூரில் மீண்டும் வன்முறை; 10 பேர் காயம்[தொடர்பிழந்த இணைப்பு]
  104. டாடா சிங்கூர் ஆலையில் போலீஸ்சார் கிராம்வாசிகள் மோதல்
  105. "டாடா மோட்டார்ஸ் சிங்கூர் ஆலையிடத்தில் தாக்குதல் போலீஸ்காரர் காயம்". Archived from the original on 2008-05-26. பார்க்கப்பட்ட நாள் 2009-10-28.
  106. "டாடா மோட்டார்ஸ் மேற்கு வங்க சிங்கூரில் பணிகளை இடை நிறுத்தம் செய்வதாக கூறுகிறது". Archived from the original on 2009-06-27. பார்க்கப்பட்ட நாள் 2009-06-27.
  107. "இது இறுதி:டாடா மோட்டார்ஸ் சிங்கூரிலிந்து வெளியேற்றம்". Archived from the original on 2012-10-02. பார்க்கப்பட்ட நாள் 2021-08-30.
  108. Buddha's loss is Modi's gain as Nano goes to Gujarat (2008-10-07). "Buddha's loss is Modi's gain as Nano goes to Gujarat". NDTV.com. Archived from the original on 2008-12-10. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  109. Der Spiegel Online: India Delivers World's Cheapest Car
  110. "Deutscher Konzern verdient am Tata kräftig mit" (in German). Die Welt. 10 January 2008. பார்க்கப்பட்ட நாள் 2008-03-22.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
  111. "Nanomania overwhelms Indian car market". Autocar.co.uk. 2008-02-07. பார்க்கப்பட்ட நாள் 2008-02-10.
  112. Motavalli, Jim (2008-09-24). "Tiny and Tax-Free: The Electric Reva — Wheels Blog — NYTimes.com". Wheels.blogs.nytimes.com. பார்க்கப்பட்ட நாள் 2009-06-08.
  113. "Stripped-down Alto likely to take on Nano". Economic Times.

புற இணைப்புகள் தொகு

வார்ப்புரு:Tata Motors வார்ப்புரு:Tata Timeline

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாடா_நானோ&oldid=3759497" இலிருந்து மீள்விக்கப்பட்டது