டாம் சாயரின் சாகசங்கள்

டாம் சாயரின் சாகசங்கள் (The Adventures of Tom Sawyer) என்பது மார்க் டுவெய்ன் எழுதிய புதினம் (இலக்கியம்) ஆகும். இது மிசிசிப்பி ஆறு ஓரமாக வளர்ந்த ஒரு சிறுவனைப் பற்றியது. இந்தக் கதையானது புனித பீட்டர்ஸ்பர்க் எனும் கற்பனை நகரத்தில் 1840 ஆம் ஆண்டில் நடைபெறும் விதத்தில் கதை அமைக்கப்பட்டிருக்கும். இந்த பகுதியானது மிசூரியில் உள்ள ஹன்னிபல் பகுதியினால் ஈர்க்கப்பட்டு உருவாக்கப்பட்டது .இந்தப் பகுதியில் தான் மார்க் டுவெய்ன் சிறுவனாக வாழ்ந்து வந்தார்.[2] இந்தப் புதினத்தில் டாம் சாயர் அவரது நண்பர் ஹக்குடன் இணைந்து செய்த சாகசங்கள் இடம்பெற்றுள்ளன.அதில் ஒன்று டாம் வேலிக்கு வெள்ளை அடிப்பதும் ஒன்றாகும். இது ஓவியமாகவும் வரையப்பட்டுள்ளது. துவக்கத்தில் இந்தப் புதினம் வியாபார ரீதியாக தோல்வி அடைந்த இந்தப் புதினமானது மார்க் டுவெய்னின் படைப்புகளிலேயே அதிகம் விற்பனையானது.[3][4]

டாம் சாயரின் சாகசங்கள்
டாம் சாயரின் சாகசங்கள் அட்டைப்பக்கம், 1876 முதல் பதிப்பு.
நூலாசிரியர்மார்க் டுவெய்ன்
நாடுஅமெரிக்க ஐக்கிய நாடுகள்
மொழிஆங்கிலம், சில் பதிப்புகள் (இசுப்பானியம்)
வகைகுழந்தைகள் இலக்கியம், நையாண்டி
வெளியீட்டாளர்American Publishing Company
வெளியிடப்பட்ட நாள்
1876[1]
OCLC47052486
813.4
LC வகைPZ7.T88 Ad 2001
அடுத்த நூல்ஹக்கிள்பெரி ஃபின்னின் சாகசங்கள்
உரைடாம் சாயரின் சாகசங்கள் விக்கிமூலத்தில்

கதைச் சுருக்கம் தொகு

டாம் சாயர் தனது அத்தை போலி மற்றும் அவனது சகோதரன் சித் உடன் வசித்து வருகிறான். அவன் பள்ளிக்குச் செல்லாமல் நீந்துவதற்குச் செல்வதால் அவனுக்கு வீட்டின் மதில்சுவரை வண்ணம் பூசும் தண்டனை கிடைக்கிறது. ஆனால், டாம் புத்திசாலித்தனமாக அங்கு வரும் தனது நண்பர்களை வர்ணம் பூசுவது ஒரு கலை என்று கூறி தனது நண்பர்களை அந்த வேலையைச் செய்ய வைக்கிறான்.

டாம் அந்த நகரத்திற்கு புதியதாக வந்த பெக்கி தாட்சரின் மீது காதல் வயப்படுகிறான். அவளும் அந்த காதலை ஏற்றுக்கொள்கிறாள்.ஆனால் டாமிற்கு ஏற்கனவே எமி லாரன்சோடு திருமண உடன்படிக்கை ஏற்பட்டது தெரிந்த பிறகு இவர்களின் காதலில் முறிவு ஏற்படுகிறது. சக மாணவர்களுக்கு இது தெரியவர பெக்கி கவலையடைந்தாள். இதனால் பெக்கி , டாமை வெறுக்கிறாள். அதன்பிறகு டாம் ஹக்கிள்பெரி ஃபின்னுடன் இணைந்து ஒருநாள் இரவு அருகில் இருக்கும் இடுகாட்டிற்குச் செல்கின்றனர். அங்கு பிணத்தை பகரிக்கும் கும்பலான மருத்துவர்.ராபின்சன், மஃப் பாட்டர் மற்றும் இன்சன் ஜோவிற்கும் இடையில் சண்டை நடக்கிறது. இந்தச் சண்டையில் இன்சன் ஜோவினால் ராபின்சன் கொலைசெய்யப்படுகிறார். இதை வேறு யாரிடமாவது கூறினால் ஜோ தங்களையும் கொலை செய்து விட வாய்ப்புள்ளது என பயந்து இந்தக் கொலையை யாரிடமும் சொல்லக் கூடாது என இருவரும் சத்தியம் செய்கின்றனர்.

பள்ளிக்கூடம் வெறுப்பாக இருந்ததினால் டாம் தனது நண்பர்களான ஓ ஆர்பர்மற்றும் ஹக் ஆகியோருடன் இணைந்து மிசிசிப்பியில் உள்ள ஜாக்சன் தீவிற்குச் சென்றனர்.

சான்றுகள் தொகு

  1. Facsimile of the original 1st edition.
  2. "American Literature: Mark Twain". www.americanliterature.com. பார்க்கப்பட்ட நாள் 29 January 2015.
  3. Railton, Stephen. "The Adventures of Tom Sawyer". Mark Twain in His Times. University of Virginia. பார்க்கப்பட்ட நாள் 2 April 2018.
  4. Messent, Peter (2007). The Cambridge Introduction to Mark Twain. Cambridge, England: Cambridge University Press. https://books.google.com/books?id=oqbQZkDfnhUC&pg=PA12&lpg=PA12&dq=adventures+of+tom+sawyer+copies+sold&source=bl&ots=SrwfaaDplK&sig=Zb5pxmTigjz_uG0RMOoz-CF_1kE&hl=en&sa=X&ved=0ahUKEwiYjI_th5zaAhULG3wKHaGiB0I4FBDoAQg5MAM#v=onepage&q=adventures%20of%20tom%20sawyer%20copies%20sold&f=false. பார்த்த நாள்: 2 April 2018. 

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டாம்_சாயரின்_சாகசங்கள்&oldid=3214459" இலிருந்து மீள்விக்கப்பட்டது