டாவி ரோயிவாசு

டாவி ரோயிவாசு (Taavi Rõivas, பிறப்பு: 26 செப்டம்பர் 1979) எசுத்தோனிய அரசியல்வாதியும் மார்ச் 26, 2014 முதல் அந்நாட்டின் பிரதமராக இருப்பவருமாவார். ஏப்ரல் 6, 2014 முதல் எசுத்தோனிய சீர்திருத்தக் கட்சியின் தலைவராகவும் உள்ளார்.[1]

டாவி ரோயிவாசு
எசுத்தோனியா பிரதமர்
பதவியில் உள்ளார்
பதவியில்
26 மார்ச் 2014
குடியரசுத் தலைவர்டூமாசு என்றிக்கு இல்வெசு
முன்னையவர்
சமூகநல அமைச்சர்
பதவியில்
11 திசம்பர் 2012 – 26 மார்ச் 2014
பிரதமர்ஆன்ட்ரசு அன்சிப்
முன்னையவர்அன்னோ பெவ்குர்
பின்னவர்எல்மென் குட் (சமூக பாதுகாப்பு)
ஊர்மசு குருசெ (நலவாழ்வு மற்றும் தொழிலாளர் நலம்)
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்பு26 செப்டம்பர் 1979 (1979-09-26) (அகவை 44)
தாலின், எசுத்தோனியா
அரசியல் கட்சிஎசுத்தோனிய சீர்திருத்தக் கட்சி
துணைவர்லூயிசா வர்க்கு
பிள்ளைகள்1 மகள்
முன்னாள் கல்லூரிதர்து பல்கலைக்கழகம்

பிரதமராக பொறுப்பேற்பதற்கு முன்னதாக ரோயிவாசு சமூக நலவாழ்வு அமைச்சராக (2012–2014) பணியாற்றி உள்ளார். மார்ச் 14, 2014 அன்று அப்போதைய பிரதமர் ஆன்ட்ரசு அன்சிப்பிற்கு அடுத்து பிரதமராக பொறுப்பேற்க நாட்டுத்தலைவர் டூமாசு என்றிக்கு இல்வெசால் நியமிக்கப்பட்டார்.[2] இதனையடுத்து புதிய அரசு அமைக்க சீர்திருத்தக் கட்சிக்கும் சமூக மக்களாட்சி கட்சிக்கும் இடையே நடந்த பேச்சு வார்த்தைகளுக்கு தலைமை வகித்தார்.[3] இரு கட்சிகளுக்குமிடையே கூட்டணி உடன்பாடு மார்ச் 20 அன்று கையொப்பமிடப்பட்டது.[4] மார்ச் 26, 2014இல் பிரதமராகப் பொறுப்பேற்றார். ஐரோப்பிய ஒன்றியத்தில் மிக இளைய அரசுத்தலைவராக ரோயிவாசு விளங்குகின்றார்.[5] மார்ச் 1, 2015 அன்று நடந்த பொதுத்தேர்தலில் இவரது கட்சிக்கு வெற்றி கிடைத்துள்ளது.

மேற்சான்றுகள் தொகு

  1. "Taavi Rõivas sai Reformierakonna esimeheks - Eesti uudised - Postimees.ee". Postimees. 6 April 2014. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
  2. "Rõivas: küllap on võimalik ka autoriteet tööga välja teenida". Postimees. 12 March 2014. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
  3. "New Coalition Will Split Two Ministries". News - ERR. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
  4. "Reform Party and Social Democrats Sign Coalition Agreement". News - ERR. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015.
  5. "Taavi Roivas designated Estonia PM, EU's youngest". GlobalPost. Archived from the original on 23 மார்ச் 2014. பார்க்கப்பட்ட நாள் 3 March 2015. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டாவி_ரோயிவாசு&oldid=3859180" இலிருந்து மீள்விக்கப்பட்டது