டி. வி. கோபாலகிருஷ்ணன்

திருப்புனித்துறை விசுவநாத கோபாலகிருஷ்ணன் (Tirupanithurai Viswanatha Gopalakrishnan, பரவலாக TVG, பிறப்பு: கேரளத்தின் திருப்புனித்துறையில் சூன் 11, 1932) சென்னையைச் சேர்ந்த ஒரு கருநாடக இசை மற்றும் இந்துத்தானி இசைக் கலைஞர்.[1]

டி.வி. கோபாலகிருஷ்ணன்
பின்னணித் தகவல்கள்
பிறப்புசூன் 11, 1932 (1932-06-11) (அகவை 91)
பிறப்பிடம்இந்தியா கேரளா, இந்தியா
இசை வடிவங்கள்திரைப்படப் பாடல்
தொழில்(கள்)பாடகர், கருநாடக இசைக்கலைஞர்

வாழ்க்கையும் பணிவாழ்வும் தொகு

கோபாலகிருஷ்ணன் இரண்டு நூற்றாண்டுகளாக இசைத்துறையில் ஈடுபட்ட கலைக்குடும்பதைச் சேர்ந்தவர்.[2] இவரது தந்தை டி. ஜி. விசுவநாத பாகவதர், கொச்சி மகாராசா அவையில் இசைக்கலைஞராக இருந்தவர்.[3] இவர் ஒரு வாய்ப்பாட்டுக்காரர் மட்டுமல்லாது வயலின் மற்றும் மிருதங்கம் வாசிப்பதிலும் தேர்ந்தவர்.[4] மிருதங்கத்தை தமது நான்காவது அகவையிலேயே வாசிக்கத் துவங்கி ஆறாம் அகவையில் திருப்புனித்துறை கொச்சி அரண்மனையில் அரங்கேற்றம் கண்டார்.[5] இவர் தமது கருநாடக இசையை செம்பை வைத்தியநாத பாகவதரிடம் பயின்றார்.[5]

கோபாலகிருஷ்ணன் தனது 9 ஆவது வயதில் செம்பை வைத்தியநாத பாகவதருக்கு பக்க வாத்தியம் வாசித்தார்.[6] இதுவே இவரின் முதல் முக்கியமான மேடை நிகழ்ச்சி.

இவரது மாணாக்கர்களாக இளையராஜா, ஏ. ஆர். ரகுமான், ராஜ்குமார் பாரதி, மற்றும் கத்ரி கோபால்நாத் இருந்துள்ளனர்.[5][7] மேற்கத்திய விபுணவிகலைஞரும் இசையமைப்பாளருமான பிராங்க்ளின் கீர்மையருடன் நிகழ்கலை நிகழ்ச்சிகளில் ஒருங்கிணைந்து பங்காற்றியுள்ளார்.[8]

விருதுகள் தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Massey, Reginald; Marcus Massey (1999). India's kathak dance, past present, future. Abhinav Publications. பக். 113. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8170173744. https://archive.org/details/indiaskathakdanc0000mass. பார்த்த நாள்: 2009-07-28. 
  2. Kumar, Raj (2003). Essays on Indian Music. Discovery Publishing House. பக். 205. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:8171417191. 
  3. "Profiles of Artistes, Composers, Musicologists". Indian heritage. பார்க்கப்பட்ட நாள் 2009-07-28.
  4. "Chembai award for T.V. Gopalakrishnan". தி இந்து. 17 August 2005 இம் மூலத்தில் இருந்து 2006-09-19 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20060919080333/http://www.hindu.com/2005/08/17/stories/2005081709750400.htm. பார்த்த நாள்: 2009-07-28. 
  5. 5.0 5.1 5.2 Jayakumar, G. (2 September 2005). "A maestro's music". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2006-11-18 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20061118071503/http://www.hinduonnet.com/thehindu/fr/2005/09/02/stories/2005090201460200.htm. பார்த்த நாள்: 2009-07-28. 
  6. 6.0 6.1 'குருவின் ஆசி' - ரமா ஈச்வரன் எழுதிய கட்டுரை, வெளியீடு: தினமணி - இசை விழா மலர் (2011 - 2012)
  7. Rajan, Anjana (12 January 2007). "A time to every purpose". தி இந்து இம் மூலத்தில் இருந்து 2012-11-05 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20121105052411/http://www.hindu.com/fr/2007/01/12/stories/2007011201040200.htm. பார்த்த நாள்: 2009-07-28. 
  8. "Pop and Jazz Guide". நியூ யார்க் டைம்சு. 21 May 2004. http://www.nytimes.com/2004/05/21/movies/pop-and-jazz-guide-668117.html?pagewanted=2. பார்த்த நாள்: 2009-07-28. 
  9. தமிழகத்தில் 7 பேருக்கு பத்ம விருதுகள் புதுவை விவசாயிக்கு பத்மஸ்ரீ[தொடர்பிழந்த இணைப்பு] தினமணி, சனவரி 26,2012
  10. ‘Naada Kovida’ title for T.V. Gopalakrishnan, தி இந்து, டிசம்பர் 15,2014

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டி._வி._கோபாலகிருஷ்ணன்&oldid=3606860" இலிருந்து மீள்விக்கப்பட்டது