டெத் ஒஃப் எ பிரசிடண்ட்

டெத் ஒஃப் எ பிரசிடண்ட் (Death of a President) 2006 ஆம் ஆண்டு வெளிவந்த விபரணத் திரைப்படமாகும். கேப்ரியல் ரேஞ் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இத்திரைப்படத்தில் ஹண்ட் அயோப், பிரயன் பொலாண்ட் மற்றும் பலரும் நடித்துள்ளனர்.

டெத் ஒஃப் எ பிரசிடண்ட்
(ஆவணத் திரைப்படம்)
இயக்கம்கேப்ரியல் ரேஞ்
கதைகேப்ரியல் ரேஞ்
சைமன் பின்ச்
இசைரிச்சர்ட் ஹர்வே
நடிப்புஹெண்ட் அயோப்
பிரயன் பொலாண்ட்
பெக்கி ஆன் பேக்கர்
ஒளிப்பதிவுகிரஹாம் ஸ்மித்
படத்தொகுப்புபிராண்ட் துமிம்
விநியோகம்Newmarket Films
வெளியீடுசெப்டம்பர் 10, 2006
ஓட்டம்93 நிமிடங்கள்
நாடுஜக்கிய இராச்சியம்
மொழிஆங்கிலம், அரபு ஒழி

வகை தொகு

விபரணப்படம்

கதை தொகு

கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும்/அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.

2007 ஆம் ஆண்டு அமெரிக்காவில் சிகாகோவில் மக்கள் அதிபர் ஜோர்ஜ் புஷ் பல நாடுகளில் போர்ச்சூழலை உருவாக்கிய காரணத்தினால் சீற்றம் அடையும் மக்கள் போராட்டம் நடத்துகின்றனர். அப்போராட்டத்தில் பல்கழைக்கழகத்திலிருந்து வெளியேற்றப்பட்ட மாணவர் ஒருவர் தலைமைப் பொறுப்பினை ஏற்கின்றார்.ஜோர்ஜ் புஷும் சுட்டு வீழ்த்தப்பட்டு இறக்கின்றார். பின்னர் அம்மாணவராலேயே ஜோர்ஜ் புஷ் அடுக்குமாடிக்கட்டிடத்திலிருந்து சுட்டுவீழ்த்தப்படுகின்றார் என நினைத்து அவரைக் கைது செய்கின்றனர் காவல்துறையினர். ஆனால் சீரியா நாட்டில் விடுமுறைக்காகச் சென்ற சிக்ரி என்ற அமெரிக்காவைப் பிறப்பிடமகக் கொண்ட இஸ்லாமியரே அல் கொய்தா இயக்கத்துடன் தொடர்புகொண்டு இத்தாக்குதலை நடத்தியிருக்க வேண்டுமென்ற பொய்க்குற்றச்சாட்டுக்களை சுமத்தி தீர்ப்பளிக்கின்றனர் அமெரிக்க நீதிபதிகள். இதற்கிடையில் அமெரிக்காவிற்காக போர் செய்த முன்னாள் படையினர் அக்கொலைச் சம்பவத்தின் போது கைது செய்யப்பட்டு பின்னர் விடுதலையும் செய்யப்படுவது குறிப்பிடத்தக்கது.

துணுக்குகள் தொகு

  • அதிபர் ஜோர்ஜ்புஷ் சிகாகோவில் பங்குபெற்றிய உரையாடல்கள் இவ்விபரணத் திரைப்படத்தில் சேர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெத்_ஒஃப்_எ_பிரசிடண்ட்&oldid=2905923" இலிருந்து மீள்விக்கப்பட்டது