டெல்நெட் (Telnet) என்பது வலையமைப்பில் மிக முக்கியமான ஒரு தகவல்தொடர்பு நெறிமுறை (Network Protocol) ஆகும். இது இணையத்திலும் சாதாரண குறும்பரப்பு வலையமைப்புகளிலும் எழுத்து வடிவிலான செயற்பாட்டுக் கட்டளைகளையும் தகவலையும் பரிமாற்றிக்கொள்வதற்கு பயன்படுகிறது. இதன் மூலம் ஒரு தடவையில் 8 Byte தகவலை அனுப்ப மற்றும் பெற முடியும் (இணையம் ஆனாலும் சரி வலையமைப்பு ஆனாலும் சரி அனைத்துவகை தகவல் தொடர்பும் பரப்புகை கட்டுப்பாடு நெறிமுறை (Transmission Control Protocol) மூலம் பரிமாற்றப்படுகிறது.

டெல்நெட் ஆனது 1969 இல் அறிமுகப்படுத்தப்பட்டது. இது Internet Engineering Task Force (IETF) எனும் பிரிவினுள் வகைப்படுத்தப்பட்டுள்ளது. இது ஆரம்ப காலங்களில் CMD (command method) மூலமாகவே பயன்படுத்தப்பட்டது. பிற்காலங்களில் ஏற்பட்ட பாதுகாப்புப் பிரச்சனைகள் காரணமாகவும் GUI மென்பொருள் வளர்ச்சியின் காரணமாகவும் CMD பாவனை காலப்போக்கில் குறைவடைந்து தற்பொழுது Server இலிருந்து தகவலைப் பரிமாற்றம் செய்வதற்கு உதவியாக Client கணினிகளில் செயற்படுகிறது.

டெல்நெட் கீழ் வரும் பயன்பாடுகளில் பிரபலமாக உள்ளது:

  • எமது கணினியில் இருந்து Host/Server இனை அணுகுவதற்கு.
  • வலையமைபில் கணினிகளை முகாமைத்துவப்படுத்துவதற்கு.
  • மின்னஞ்சலை கையாள்வதற்கு.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டெல்நெட்&oldid=3214694" இலிருந்து மீள்விக்கப்பட்டது