டேனியல் ஆன்னி போப்

டேனியல் ஆன்னி போப் (பிறப்பு 1 ஜூன் 1990) என்பவர் தமிழ் திரைப்பட நடிகராவார். இவர் இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) திரைப்படத்தின் மூலம் அறியப்படுகிறார்.[1][2][3] விஜய் தொலைக்காட்சி நடத்திய பிக்பாஸ் தமிழ் 2 என்ற நிகழ்ச்சியில் பங்குபெற்றார். சன் லைப் தொலைக்காட்சியில் மசாலா கபே என்ற நிகழ்ச்சியின் நடுவராக பணியாற்றினார்.

டேனியல் ஆன்னி போப்
பிறப்பு1 சூன் 1990 (1990-06-01) (அகவை 33)
தமிழ்நாடு, இந்தியா
மற்ற பெயர்கள்டேனி
பணிநடிகர், நகைச்சுவையாளன்
செயற்பாட்டுக்
காலம்
2007– தற்போது
வாழ்க்கைத்
துணை
டெனிசா (m. 2018)

சென்னை லயோலாக் கல்லூரியில் விஸ்வல் கம்யூனிக்கேசன் படித்துள்ளார். இவர் வெற்றிமாறன் இயக்கிய பொல்லாதவன் (2007), பையா (2010) மற்றும்ரொத்திரம் (2011) போன்ற திரைப்படங்களில் நடித்திருந்தாலும், மக்களால் கவனிக்கப்படவில்லை. கோகுல் இயக்கத்தில்2013 இல் வெளியான நகைச்சுவைத் திரைப்படமான இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா (2013) என்பதில் விஜய் சேதுபதிக்கு நண்பராக வந்தார். அத்திரைப்படத்தில் மக்களால் நன்கு அறியப்படும் நகைச்சுவை நடிகரானார்.[4]

திரைப்படங்கள் தொகு

திரைப்படங்கள்
ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் குறிப்பு
2007 பொல்லாதவன்
2010 பையா (திரைப்படம்)
2011 ரௌத்திரம் (திரைப்படம்)
2013 இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா ரொம்ப சுமார் மூஞ்சி குமாரு
2015 மாசு என்கிற மாசிலாமணி பேய்
2016 கவலை வேண்டாம் பிளாக் தங்கப்பா
2017 மரகத நாணயம் இளங்கோ
2017 ரங்கூன் டிப் டாப்
2017 திரி ஜீவாவின் நண்பன்
2017 ஆயிரத்தில் இருவர்
2017 சக்க போடு போடு ராஜா
2018 ஒரு நல்லநாள் பாத்து சொல்றேன் சதீஸ்
2018 காத்தாடி துப்பாக்கி
2018 ஜருகண்டி பாரி
2018 சைனா ஐயப்பா
தொலைக்காட்சியில்
ஆண்டு நிகழ்ச்சி தொலைக்காட்சி குறிப்பு
2017-2018 காமெடி கில்லாடிஸ் ஜீ தமிழ் நடுவர்
2018 பிக் பாஸ் தமிழ் 2 விஜய் தொலைக்காட்சி பங்கேற்பாளர்
2018-present மசாலா கேப் சன் லைப் நடுவர்
2018 தாயா தாரமா சன் தொலைக்காட்சி பங்கேற்பாளர்
2018 காதலிக்க நேரமில்லை சன் லைப் பங்கேற்பாளர்

ஆதாரங்கள் தொகு

  1. "Bigg Boss Tamil 2 Live Updates: Reality Show Starts with 16 Contestants & Oviya as a guest | Latest News" (in en-US). Latest News. 2018-06-17 இம் மூலத்தில் இருந்து 2018-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20180617215945/http://www.keralanews247.com/bigg-boss-tamil-2-live-updates/. 
  2. BehindwoodsTV (15 October 2014). "Daniel Annie Pope - "After Polladavan, I was called to fill the gaps in frame" - BW". பார்க்கப்பட்ட நாள் 29 April 2017 – via YouTube.
  3. "Let's make peace, not war". deccanchronicle.com. 28 September 2015. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.
  4. "Daniel Annie Pope - Interview". behindwoods.com. பார்க்கப்பட்ட நாள் 29 April 2017.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டேனியல்_ஆன்னி_போப்&oldid=3214705" இலிருந்து மீள்விக்கப்பட்டது