டொனால்டு இலிண்டன்-பெல்

ஆங்கிலேய வானியற்பியலாளர்

டொனால்டு இலிண்டன்-பெல் (Donald Lynden-Bell) (பிறப்பு: 5 ஏப்பிரல் 1935) ஓர் ஆங்கிலேய வானியற்பியலாளர் ஆவார். பால்வெளிகள் தம் மையத்தில் பாரியக் கருந்துளைகளைக் கொண்டுள்ளன எனும் கோட்பாட்டுக்குப் பெயர்பெற்றவர். இந்த கருந்துளைகளே குவேசார்களுக்கு முதன்மை ஆற்றல் வாயிகள் ஆகும்.[2] இவர் மார்ட்டன் சுகிமிடு பரிசை மற்றவரோடு இணைந்து பெற்றுள்ளார். இவர் வானியற்பியலுக்கான காவ்லி பரிசு 2008 இல் பெற்றுள்ளார். இவர் அரசு வானியல் கழகத்தின் தலைவராக இருந்துள்ளார். அண்மையில் இவர் கேம்பிரிட்ஜ் வானியல் நிறுவனத்தில் பணி செய்கிறார்; இவர்தான் அந்நிறுவனத்தின் முதல் இயக்குநரும் ஆவார்.

டொனால்டு இலிண்டன்-பெல்
Donald Lynden-Bell
பிறப்பு(1935-04-05)5 ஏப்ரல் 1935
டோவர், பெரும்பிரித்தானியா[1]
துறைவானியற்பியல்
பணியிடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
கல்வி கற்ற இடங்கள்கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகம்
ஆய்வேடுவிண்மீன், பால்வெளி இயக்கவியல் (1961)
ஆய்வு நெறியாளர்இலியோன் மெசுட்டெல்
முனைவர் பட்ட 
மாணவர்கள்
சைமன் வைட்
சோமக் இராய்சவுத்ரி
விருதுகள்
  • எடிங்டன் பதக்கம் (1984)
  • அரசு வானியல் கழகப் பொற்பதக்கம் (1993)
  • புரோவுவர் விருது]] (1991)
  • கார்ல் சுவார்சுசைல்டு பதக்கம் (1983)
  • புரூசு பதக்கம் (1998)
  • அறிவியல் வளர்ச்சிக்கான ஜான் ஜே. கார்ட்டி விருது (2000)
  • என்றி நோரிசு இரசல் விரிவுரைத் தகைமை]] (2000)
  • வானியற்பியலுக்கான காவ்லி பரிசு (2008)

கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் கல்விபெற்ற இவர், 1962 இல் ஒலின் ஏகன், ஆலன் சாந்தேகு ஆகியோருடன் இணைந்து ஆய்வுரை வழங்கியுள்ளார்.[3] இதில் நமது பால்வெளியாகிய பால்வழி ஒரு மாபெரும் வளிம முகிலின் குலைவில் ஏற்பட்டது எனக் கூறுகிறார்.[4] இவர் 1969 இல் பாரியக் கருந்துளைகளின் அகந்திரளும் பொருளால் அவை ஆற்றல் பெறுகின்றன எனும் கோட்பாட்டை வெளியிட்டார். அழிந்த குவேசார்களை எண்ணி, பெரும்பாலான பாரியப் பால்வெளிகள் தம் மையத்தில் கருந்துளைகளைப் பெற்றுள்ளன எனக் கோட்பாட்டியலாக நிறுவினார்.

இவர் ஏழு சாமுராய் வானியலாளர் குழுவில் ஒருவர். இந்தக் குழுவின் மற்ற வானியலாளர்களில் சந்திரா பேபர், டேவிடு பர்சுட்டைன், ஆலன் டிரெசியர், உரோஜர் டேவீசு, உரோபட்டோ தெர்லேவிச், காரி வேக்னர் ஆகியோர் அடங்குவர்.[5] இவர்கள் மாபெரும் ஈர்ப்பி நிலவுகிறது என்ற எடுகோளின் ஆசிரியர்கள் ஆவர். மாபெரும் ஈர்ப்பி என்பது மிகப்பெரிய பொருள்விரவல் பகுதி ஆகும். இது 250 மில்லியன் ஒளியாண்டுகட்கு அப்பால் உள்ளது. இந்த ஈர்ப்பி தான் களப் பால்வெளிக் கொத்துகளின் இயக்கத்துக்குக் காரணமாகும்.

இவரது மனைவி கேம்பிரிட்ஜ் வேதியியல் பேராசிரியரான உரூத் இலிண்டன் பெல் ஆவார்.

இவரது நடப்பு ஆய்வு பொது சார்பியல் கோட்பாட்டிலும் வானியற்பியல் தாரைகளிலும் [எப்போது?] முதன்மையாக கவனம் குவிக்கிறது.

காலநிரல் பணிப்பட்டியல் தொகு

  • 1953–1956: (பட்டப்படிப்பு மானவர்கள்) மேக்கின் நெறிமுறை; சார்பியல்; குவைய இயக்கவியல்; புள்ளியியல் இயக்கவியல்
  • 1957–1960: காந்தப் பாய்ம இயங்கியல் வகை X வகை நொதுமல் புள்ளிகள், கதிர்வீச்சு வானியல், உடுக்கண இயக்கவியலிலும் இயங்கியலிலும் இயக்கத் தொகையங்கள், பிரிதகவு அமைப்புகள் ; அகந்திரள் வட்டுகள், அச்சுச் சீரொருமையில் ஆற்றல் நெறிமுறை; சுருளிக் கட்டமைப்புகள், பால்வெளிகள்
  • 1960 களில்: பால்வெளி உருவாக்கமும் அதன் வேதியியல் படிமலர்ச்சியும் (ELS); வன்னிலை ஓய்வு, எதிர்மறைத் தன்வெப்பம்,
ஈர்ப்புவெப்பப் பேரழிவு; வியாழன் அயோ நிலாவும் கதிர்வீச்சு உமிழ்வும்; பால்வெளிக்கருவின் கருந்துளைகள்;  காந்த அகந்திரள் வட்டுகள்; குவாசார்கள்.
  • 1970s: குவாசாரின் ஒளிர்திறம், அடர்த்திச் சார்பு, புள்ளியியலில் சி-முறை; டி. தவுரி விண்மீன்களைச் சுற்றியமையும் அகந்திரள் வட்டுகள்; சார்பியலான தன் -ஈர்ப்பு மெசுட்டெல் வட்டுகள்; பேரியல் பால்வெளிக் கொத்து அகட்டுக் குலைவின் தன் – ஒப்புப் படிமலர்ச்சி
  • 1980s: பாய்ம இயக்கவியலில் ஆற்றல் நெறிமுறைகள்; சமச்சுழற்சி அமைப்புகளும் கெல்வின் தேற்றமும்; மெகல்லானிய ஓடையும் களக்குழு இயங்கியலும்; கறுப்புப் பொருள்: பேரியல் ஓடை இயக்கங்களும் பால்வெளி பரவலாக்கமும்
  • 1990s: புறப் பால்வெளி ஒளியின் இருமுனைமை; சார்பியலுக்கான துல்லியத் தீர்வுகள்; பொதுச் சார்பியலில் மேக் நெறிமுறை; தனிநிலை வெளியற்ற நியூட்டனிய இயக்கவியல்; காந்தப் பாய்ம இயங்கியலில் சரிநிலைத் தன்னொப்புத் தீர்வு; வானியற்பியலிலும் வான்வேதியியலிலும் எதிர்மரைத் தன்வெப்பம்; செவ்வியல், குவைய இயக்கவியலில் சரிநிலை N பொருள்(பிண்டத்) தீர்வு; பால்வழிப் பேரோடைகள்
  • 2000s: மின்காந்தப் புலங்களில் இயக்கப் பிரிதகவு; பரப்பு, கோளப் பிறழ்வற்ற துல்லிய ஒளியியல்; சார்பியல் சுழல்மின்னூட்ட வட்டும் கோளமும்; அகந்திரள் வட்டுகளில் இருந்துவரும் காந்தப் பாய்வு இயக்கத் தாரைகள்

இவரது நடப்பு ஆய்வு பொது சார்பியல் கோட்பாட்டிலும் வானியற்பியல் தாரைகளிலும் [எப்போது?] முதன்மையாகக் கவனம் குவிக்கிறது

தகைமைகள் தொகு

விருதுகள்

இவர் பெயர் இடப்பட்டவை

மேற்கோள்கள் தொகு

  1. "The Astronomers". Star Men. Inigo Athenaeum Enterprise Inc. 2015. பார்க்கப்பட்ட நாள் 25 October 2016.
  2. Lynden-Bell, D. (1969). "Galactic Nuclei as Collapsed Old Quasars". Nature 223 (5207): 690. doi:10.1038/223690a0. Bibcode: 1969Natur.223..690L. http://www.nature.com/nature/journal/v223/n5207/abs/223690a0.html. 
  3. Donald Lynden-Bell; Schweizer, François (2012). "Allan Rex Sandage. 18 June 1926 -- 13 November 2010". Biographical Memoirs of Fellows of the Royal Society. doi:10.1098/rsbm.2011.0021. 
  4. Eggen, O. J.; Lynden-Bell, D.; Sandage, A. R. (1962). "Evidence from the motions of old stars that the Galaxy collapsed". The Astrophysical Journal 136: 748. doi:10.1086/147433. Bibcode: 1962ApJ...136..748E. https://archive.org/details/sim_astrophysical-journal_1962-11_136_3/page/748. 
  5. Dennis Overbye, "Lonely Hearts of the Cosmos," 1st. ed., p. 410, Harper Collins, 1991
  6. "John J. Carty Award for the Advancement of Science". National Academy of Sciences. Archived from the original on 29 December 2010. பார்க்கப்பட்ட நாள் 15 February 2011.
  7. "Gruppe 2: Fysikkfag (herunder astronomi, fysikk og geofysikk)" (in Norwegian). Norwegian Academy of Science and Letters. Archived from the original on 27 செப்டம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 7 October 2010. {{cite web}}: Check date values in: |archive-date= (help)CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=டொனால்டு_இலிண்டன்-பெல்&oldid=3930572" இலிருந்து மீள்விக்கப்பட்டது