டோக்கியோ வளைகுடா

யப்பானிலுள்ள ஒரு குடா

டோக்கியோ வளைகுடா (Tokyo Bay, 東京湾, Tōkyō-wan) என்பது ஜப்பானின் தெற்கு காண்டோ பிடதேசத்தில் உள்ள ஒரு வளைகுடா. இது முன்னர் ஏடோ வளைகுடா (Edo Bay, 江戸湾, Edo-wan) என்று அழைக்கப்பட்டது. இதன் மொத்த பரப்பளவு 1320 கிமீ². இது 249 கிமீ² நிலப்பரப்பையும் கொண்டுள்ளது.

விண்ணில் இருந்து டோக்கியோ வளைகுடா

இதன் ஒரேயொரு இயற்கைத் தீவு சாரு தீவு (猿島, Saru-shima) ஆகும். இதைவிட பல செயற்கை தீவுகளும் இங்குள்ளன.

டோக்கியோவின் துறைமுகங்கள், சீபா, கவசாக்கி, யோக்கொஹாமா துறைமுகம், யோக்கோசூக்கா ஆகியன இவ்வளைகுடாவிலேயே அமைந்துள்ளன. ஜப்பானில் நிலை கொண்டுள்ள அமெரிக்கக் கடற்படைத் தளம் யோக்கோசூக்காவில் உள்ளது.

செப்டம்பர் 2, 1945: அமெரிக்க போர் விமானங்கள் மிசூரி கப்பலின் மேலும் டோக்கியோ வளைகுடாவின் வான்பரப்பின் மீதும் பறக்கின்றன.
செப்டம்பர் 2, 1945: அமெரிக்க போர் விமானங்கள் மிசூரி கப்பலின் மேலும் டோக்கியோ வளைகுடாவின் வான்பரப்பின் மீதும் பறக்கின்றன.

இரண்டாம் உலகப் போரின் போது ஜப்பானின் கடைசி அதிகாரபூர்வமான சரணடைதல் டோக்கியோ வளைகுடாவில் "மிசூரி" என்ற அமெரிக்கக் கப்பலில் செப்டம்பர் 2, 1945 ஆம் ஆண்டில் நிகழ்ந்தது. இதனையடுத்து பசிபிக் போரும், அதனுடன் சேர்ந்து இரண்டாம் உலகப் போரும் முடிவுக்கு வந்தன.

"https://ta.wikipedia.org/w/index.php?title=டோக்கியோ_வளைகுடா&oldid=2604593" இலிருந்து மீள்விக்கப்பட்டது