தசுன் சானக்க

இலங்கை மட்டைப்பந்து வீரர்

தசுன் சானக்க (Dasun Shanaka, பிறப்பு: 9 செப்டம்பர் 1991), இலங்கை துடுப்பாட்ட வீரர் ஆவார்.[1] இவர் நீர்கொழும்பு புனித பிட்டர்சு கல்லூரி, மார்சி ஸ்டெல்லா கல்லூரி ஆகிய பாடசாலைகளில் கல்வி பயின்றவர். இவர் 2015 சூலை மாதத்தில் பாக்கித்தானுக்கு எதிரான இலங்கை அணியின் பன்னாட்டு இருபது20 அணியில் சேர்க்கப்பட்டார்.[2] 2015 ஆகத்து 1 இல் தனது முதலாவது இ20ப போட்டியில் கலந்து கொண்டார்.[3]

தசுன் சானக்க
Dasun Shanaka
தனிப்பட்ட தகவல்கள்
முழுப்பெயர்மதகமகமகே தசுன் சானக்க
பிறப்பு9 செப்டம்பர் 1991 (1991-09-09) (அகவை 32)
நீர்கொழும்பு, இலங்கை
உயரம்6 அடி 0 அங் (1.83 m)
மட்டையாட்ட நடைவலக்கை
பந்துவீச்சு நடைவலக்கை மத்திமம்
பங்குபல்-துறை
பன்னாட்டுத் தரவுகள்
நாட்டு அணி
ஒரே தேர்வு (தொப்பி 134)19 மே 2016 எ. இங்கிலாந்து
இ20ப அறிமுகம் (தொப்பி 58)1 ஆகத்து 2015 எ. பாக்கித்தான்
கடைசி இ20ப06 ஜூலை 2021 எ. இங்கிலாந்து
இ20ப சட்டை எண்7
உள்ளூர் அணித் தரவுகள்
ஆண்டுகள்அணி
2011–இன்றுசிங்கள விளையாட்டுக் கழகம்
வாழ்நாள் புள்ளிவிவரங்கள்
போட்டி வகை தே இ20ப மு.த ப.அ
ஆட்டங்கள் 6 29 42
ஓட்டங்கள் 140 542 1,374 360
மட்டையாட்ட சராசரி 24 16.12 38.16 18.94
100கள்/50கள் 0/1 0/2 4/6 0/1
அதியுயர் ஓட்டம் 66 54 127 60*
வீசிய பந்துகள் 762 227 1,219 348
வீழ்த்தல்கள் 13 11 29 7
பந்துவீச்சு சராசரி 33.15 20.62 26.20 34.00
ஒரு முறையில்
5 வீழ்த்தல்கள்
0 0 1 0
ஒரு போட்டியில்
10 வீழ்த்தல்கள்
0 n/a 0 n/a
சிறந்த பந்துவீச்சு 3/46 3/16 6/69 2/21
பிடிகள்/இலக்கு
வீழ்த்தல்கள்
0/– 0/– 25/– 24/–
மூலம்: CricketArchive, மே 27 2016

2016 மே மாதத்தில் இலங்கை அணியின் இங்கிலாந்து சுற்றுப்பயணத்தின் போது, லிசுட்டர்சயர் துடுப்பாட்ட அணிக்கு எதிராக முதல்-தர ஆட்டத்தில் கலந்து கொண்டு சதம் அடித்தார்.[4][5] 2016 மே 19 இல் தனது முதலாவது தேர்வுப் போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாடினார்.[6] இவர் இலங்கையின் 134வது தேர்வுத் துடுப்பாட்ட வீரர் ஆவார்.[7] இவர் தனது முதலாவது ஆட்டத்தில் இங்கிலாந்து தலைவர் அலஸ்டைர் குக்கின் இலக்கைக் கைப்பற்றினார். 2019 பாகிஸ்தான் அணிக்கு எதிரான இருபதுக்கு இருபது தொடரில் தலைவராக இருந்து இளம் அணியுடன் பாக்கிஸ்தானை வெள்ளையடிப்புச் செய்தார்.தற்போது மட்டுப்படுத்தபட்ட ஓவர் ஆட்டங்களில் இலங்கை கிரிக்கெட் அணி தலைவராக உள்ளார்.LPL தொடரில் தம்புள்ளை வைக்கிங் அணியின் தலைவராக உள்ளார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Dasun Shanaka". ESPN Cricinfo. பார்க்கப்பட்ட நாள் 23 July 2015.
  2. "Five uncapped players in SL squad for Pakistan T20s". ESPNcricinfo. ESPN Sports Media. 23 சூலை 2015. பார்க்கப்பட்ட நாள் 23 சூலை 2015.
  3. "Pakistan tour of Sri Lanka, 2nd T20I: Sri Lanka v Pakistan at Colombo (RPS), Aug 1, 2015". ESPNcricinfo. ESPN Sports Media. 1 ஆகத்து 2015. பார்க்கப்பட்ட நாள் 1 ஆகத்து 2015.
  4. "Sri Lanka's Dasun Shanaka scores hundred against Leicestershire". zeenews. 15 மே 2016. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.
  5. Mehta, Kalika (13 மே 2016). "Leicestershire v Sri Lanka: Dasun Shanaka rescues tourists". bbc.com. பார்க்கப்பட்ட நாள் 19 மே 2016.
  6. "Sri Lanka tour of England and Ireland, 1st Investec Test: England v Sri Lanka at Leeds, May 19-23, 2016". ESPNcricinfo. ESPN Sports Media. 19 May 2016. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.
  7. Gardner, Alan (18 மே 2016). "A new Test of resolve after T20 hiatus". ESPNcricinfo. பார்க்கப்பட்ட நாள் 19 May 2016.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தசுன்_சானக்க&oldid=3202203" இலிருந்து மீள்விக்கப்பட்டது