தண்டி

விக்கிமீடியப் பக்கவழி நெறிப்படுத்தல் பக்கம்

தண்டி (Dandi), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் , நவ்சாரி நகரை ஒட்டி அமைந்த கடற்கரை கிராமம்.

தண்டி
வரலாற்று சிறப்பு மிக்க கிராமம்
நாடு இந்தியா
மாநிலம்குஜராத்
மாவட்டம்நவ்சாரி
மொழிகள்
 • அலுவலக மொழிகள்குஜராத்தி, இந்தி
நேர வலயம்IST (ஒசநே+5:30)
தண்டி கிராமத்தை நோக்கி உப்பு நடைப்பயணத்தில் காந்தி
உப்புச் சத்தியாகிரகம் முடிவில் தண்டி கடற்கரையில் உப்பை அள்ளும் காந்தியடிகள்
1930 ஆம் ஆண்டின் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது மகாத்மா காந்தி, மிதுபென் பெட்டிட் மற்றும் சரோஜினி நாயுடு

1930ஆம் ஆண்டில், உப்பு மீதான வரியை நீக்கக் கோரி, பிரித்தானிய அரசுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியடிகள் தலைமையில், அகமதாபாத் நகரத்திலிருந்து தண்டி கடற்கரை கிராமம் வரை தொடர்ந்து 24 நாட்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக நடந்து, தண்டி கடற்கரையில் உப்பை அள்ளினார்.[1]. காந்தியடிகளின் தண்டி யாத்திரை நினைவாக இந்திய அரசு, சபர்மதி முதல் தண்டி வரை செல்லும் சாலையைச் சுற்றுலா மையமாக்க முடிவு செய்துள்ளது.[2][3]

காந்தி அடிகளின் தண்டி உப்புச் சத்தியாகிரகம் போராட்டத்தினை நினைவுகூரும் வகையில் நினைவுச் சின்னம் எழுப்ப அரசு முடிவு செய்துள்ளது.[4]

மேற்கோள்கள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தண்டி&oldid=3215049" இலிருந்து மீள்விக்கப்பட்டது