தனஹு மாவட்டம்

தனஹு மாவட்டம் (Tanahun District) (நேபாளி: तनहुँ जिल्लाகேட்க), தெற்காசியாவின் நேபாள நாட்டின், மேற்கு வளர்ச்சி பிராந்தியத்தின், மாநில எண் 4-இல், கண்டகி மண்டலத்தில் அமைந்துள்ளது. இது நேபாளத்தின் எழுபத்தி ஐந்து மாவட்டங்களில் ஒன்றாகும். தனஹூ மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் தமௌலி நகரம் ஆகும்.

நேபாளத்தில் தனஹூ மாவட்டத்தின் அமைவிடம்

1,546 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு கொண்ட தனஹு மாவட்டத்தின் மக்கள் தொகை, 2011-ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி 3,23,288 ஆகும். நேபாள நாட்டின் நடுபகுதியில் அமைந்த தனஹு மாவட்டத்தின் அஞ்சல் குறியீட்டெண் 33900 ஆகும்.

மகாபாரத காவியத்தை இயற்றிய வேதவியாசர் சேட்டி மற்றும் மடி எனும் இரண்டு ஆறுகள் கூடுமிடமான தமௌலி நகரத்தில் பிறந்தவர் எனக் கருதப்படுகிறது. எனவே வேதவியாசர் நினைவாக தமௌலி நகரத்தின் நகராட்சி மன்றத்திற்கு வேதவியாசர் நகராட்சி மன்றம் எனப் பெயரிடப்பட்டுள்ளது. தமௌலியில் சேட்டி மற்றும் மடி எனும் இரண்டு ஆறுகள் கூடுமிடத்தில் உள்ள குகையில் வேதவியாசர் தியானம் செய்ததாக கூறப்படுகிறது.

புவியியல் மற்றும் தட்ப வெப்பம் தொகு

தனஹு மாவட்டம் கடல் மட்டத்திலிருந்து 300 மீட்டர் முதல் 2,000 மீட்டர் உயரம் வரை இமயமலையில் பரவியுள்ளது. எனவே இம்மாவட்டத்தின் தட்ப வெப்ப நிலை கீழ் வெப்ப மண்டலம், மேல் வெப்ப மண்டலம் மற்றும் மிதவெப்ப வளையம் என மூன்று காலநிலைகளில் காணப்படுகிறது. [1]

ஆன்மிகத் தலங்கள் தொகு

தனஹு மாவட்டத்தில் வியாச குகை, பஞ்சபாண்டவர் கோயில், நிர்ஜல மாய் கோயில்கள் உள்ளது.

கிராம வளர்ச்சி மன்றங்களும், நகராட்சிகளும் தொகு

 
தனஹூ மாவட்ட கிராம வளர்ச்சி மன்றங்களையும், நகராட்சிகளையும் காட்டும் வரைபடம்

தனஹு இம்மாவட்டம் முப்பத்தி ஒன்பது கிராம வளர்ச்சி மன்றங்களும், மூன்று நகராட்சிகளையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Map of Potential Vegetation of Nepal - a forestry/agroecological/biodiversity classification system (PDF), Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 89 (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தனஹு_மாவட்டம்&oldid=3368994" இலிருந்து மீள்விக்கப்பட்டது