தபோசிரிஸ் மக்னா

தபோசிரிஸ் மக்னா (Taposiris Magna), பண்டைய எகிப்தை கிமு 280 முதல் 270 முடிய ஆண்ட கிரேக்க தாலமிப் பேரரசர் இரண்டாம் தாலமியால், வடக்கு எகிப்தில் நிறுவப்பட்ட பண்டைய நகரம் ஆகும். இந்நகரத்தில் எகிப்தியக் கடவுள் ஒசிரிசு கோயில் உள்ளது. தபோசிரிஸ் மக்னா என்பதற்கு ஒசிரிஸ் கடவுளின் கோயில் எனப்பொருளாகும். இந்நகரம் எகிப்திய கிரேக்க மன்னர்கள் இரண்டாம் தாலமி மற்றும் நான்காம் தாலமிகளால் கிமு 280 - 270களில் நிறுவப்பட்டதாகும்.

தபோசிரிஸ் மக்னா
எகிப்தியக் கடவுள் ஒசிரிசு கோயில், தபோசிரிஸ் மக்னா
தபோசிரிஸ் மக்னா is located in Egypt
தபோசிரிஸ் மக்னா
Shown within Egypt
மாற்றுப் பெயர்அபோவ்சிர்
இருப்பிடம்அலெக்சாண்டிரியா ஆளுநரகம், எகிப்து
பகுதிஅலெக்சாந்திரியா
ஆயத்தொலைகள்30°56′46.2″N 29°31′7.3″E / 30.946167°N 29.518694°E / 30.946167; 29.518694
வகைகுடியிருப்பு, கோயில்
வரலாறு
கட்டுநர்இரண்டாம் தாலமி, நான்காம் தாலமி
கட்டப்பட்டதுகிமு 280 – 270
காலம்எகிப்தின் தாலமி பேரரசு

கிமு 332-இல் எகிப்தை வென்ற பேரரசர் அலெக்சாந்தர் இப்பகுதியில் தனது பெயரில் அலெக்சாந்திரியா எனும் நகரத்தை நிறுவினார். அலெக்சாந்திரியா நகரத்திற்கு வெளிப்புறத்தில் நிறுவப்பட்ட தபோசிரிஸ் மக்னா நகரம், தாலமி வம்ச அரச குடும்பத்தினர் சமயச் சடங்குகள் செய்யும் மையமாகவும், எகிப்தியக் கடவுள் ஒசிரிசு கோயிலாகவும் விளங்கியது.

அண்மைய அகழாய்வுகள் தொகு

பிப்ரவரி, 2021-இல் அலெக்சாந்திரியா நகரத்திற்கு வெளிப்புறத்தில் அமைந்த பண்டைய தபோசிரிஸ் மக்னா நகரத்தில் நடைபெற்ற அகழாய்வில், 2,000 ஆண்டுகள் பழமையான, தாலமி வம்ச காலத்து, 16 மம்மிகள் கண்டுபிடிக்கப்பட்டது. இதில் இரண்டு மம்மிகளின் வாயில் தங்க நாக்குகள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. பண்டைய எகிப்தியர்கள் இறப்பிற்கு பிந்தைய வாழ்க்கையின் போது எகிப்தியக் கடவுள் ஒசிரிசுடன் பேசுவதற்காக இந்த நாக்கு பொருத்தியதாக அறியப்படுகிறது. [1][2][3][4]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தபோசிரிஸ்_மக்னா&oldid=3109664" இலிருந்து மீள்விக்கப்பட்டது