தமாஜி ராவ் கெயிக்வாட்

தமாஜி ராவ் கெய்க்வாட் (Damaji Rao Gaekwad) 1732 முதல் 1768 வரை தான் இறக்கும் வரை பரோடாவின் இரண்டாவது மன்னனாக இருந்தார்.

தமாஜி ராவ் கெயிக்வாட்
சேனா காஸ் கேல்
தமாஜி ராவ் கெயிக்வாட்டின் ஓவியம்
பரோடா அரசு
ஆட்சிக்காலம்1732 – 1768
முன்னையவர்பிலாஜி ராவ் கெயிக்வாட்
பின்னையவர்கோவிந்த ராவ் கெயிக்வாட்
இறப்பு1768
பதான்
மரபுகெயிக்வாட்
தந்தைபிலாஜி ராவ் கெயிக்வாட்
மதம்இந்து சமயம்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

இரண்டாம் தமாஜி என்றும் அழைக்கப்படும் இவர், பிலாஜி ராவ் கெய்க்வாட்டின் மூன்றாவது மகனாவார். இவரது தந்தை சத்ரபதி சாகுஜியிடம் "சம்சேர் பகதூர்" என்ற பரம்பரை பட்டத்தைப் பெற்ற முதலாம் தமாஜியின் வளர்ப்பு மகன் ஆவார். [1] பிலாஜியும் சேனா காஸ் கேல் என்ற மற்றொரு பரம்பரை பட்டத்தைப் பெற்றிருந்தார். [2]

பேஷ்வாவுக்கு எதிரான கிளர்ச்சி தொகு

கெய்க்வாட்கள் முதலில் தபாதே குடும்பத்தின் படைத்தலைவர்களாக இருந்தனர். குசராத்தின் மராட்டிய தலைவர்கள் மற்றும் படைத் தளபதி-என்ற பட்டத்தை பெற்றவர்கள். 1731 ஆம் ஆண்டில், பேஷ்வா பாஜிராவிற்கு எதிராக கிளர்ச்சி செய்ததற்காக திரியம்பக் ராவ் தபாத என்பவர் கொல்லப்பட்டார். தங்களது வருவாயின் பாதியை மராட்டியக் கருவூலத்திற்கு அனுப்பவேண்டும் என்ற நிபந்தனையின் பேரில் குசராத்தில் தங்களது பட்டத்தையும் பிரதேசங்களையும் தக்க வைத்துக் கொள்ள பேஷ்வா அனுமதித்தார் .

சேனாபதியாக நியமிக்கப்பட்ட இவரது சிறுவயது சகோதரர் யசுவந்த் ராவ் தபாதேவின் தாயார் உமாபாய் தபாதே நிர்வாக அதிகாரங்களைப் தனது கையில் எடுத்துக் கொண்டார். பிலாஜி, மற்றும் 1732 இல் அவரது மரணத்திற்குப் பிறகு, யஷ்வந்த் ராவ் ஒரு சிறியவராக இருந்ததால் தமாஜி உண்மையான இராணுவ சக்தியைக் கொண்டிருந்தார். அவர் வளர்ந்தபோதும், யஷ்வந்த் ராவ் மது மற்றும் அபினிக்கு அடிமையாகிவிட்டார். இந்த நேரத்தில் தமாஜி படிப்படியாக தனது சக்தியை அதிகரித்துக் கொண்டார். [3]

உமாபாய் தனது ஆரம்பத்தில் பேஷ்வா பாஜிராவுடன் நல்லிணக்கத்தைக் கொண்டிருந்தார். ஆனால் தனது மகனைக் கொன்றதற்காக அவருக்கு எதிராக ஒரு கோபத்தை வைத்திருந்தார். பாஜிராவ் இறந்த பிறகு, புதிய பேஷ்வா பாலாஜி பாஜி ராவ்விடம், வருவாயைப் பகிர்ந்து கொள்ளும் உடன்படிக்கையிலிருந்து தங்களை விடுவிக்குமாறு கேட்டுக்கொண்டார். அவர் அவ்வாறு செய்ய மறுத்தபோது, பேஷ்வாவுக்கு எதிரான கிளர்ச்சியில் தாராபாய்க்கு பக்கபலமாக இருந்தார். பாலாஜி பாஜி ராவ் முகலாய எல்லைக்குச் சென்றபோது, தாராபாய் சதாராவின் இரண்டாம் இராஜாராம் சிறையில் அடைக்கப்பட்டார். உமாபாய் தமாஜி கெய்க்வாட்டை 15,000 பேர் கொண்ட படையுடன் அனுப்பினார். [4]

குஜராத் மாநிலத்தின் பதான் என்ற இடத்தில் 1768 ஆகத்து 18 அன்று கெயிக்வாட் இறந்தார்.

குறிப்புகள் தொகு

வெளி இணைப்புகள் தொகு

External links தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தமாஜி_ராவ்_கெயிக்வாட்&oldid=3215152" இலிருந்து மீள்விக்கப்பட்டது