தமிழ்நாடு பொதுப்பணித் துறை

தமிழ்நாடு பொதுப்பணித் துறை, தமிழக அரசின்கீழ் இயங்கும் துறையாகும். இது பொதுப்பணித் துறை அமைச்சகத்தால் நிர்வகிக்கப்படுகிறது. அரசுத் துறை கட்டுமானங்கள், பொதுத்துறை நிறுவனங்களின் பெரும்பாலான கட்டிடங்கள் பராமரிப்பு, பாலங்கள், சாலைகள், மற்றும் உள்கட்டமைப்பு கட்டுமானங்களை நிர்வகிக்கிறது.

தமிழ்நாடு பொதுப்பணித் துறைத் திணைக்களம்
துறை மேலோட்டம்
அமைப்பு1858
ஆட்சி எல்லைதமிழ்நாடு
தலைமையகம்
அமைச்சர்
அமைப்பு தலைமை
  • எஸ் கே பிரபாகர், ஐஏஎஸ், அரசு முதன்மைச் செயலர்
மூல அமைப்பு
வலைத்தளம்தமிழ்நாடு பொதுப்பணித் துறை

பொதுப்பணித் துறை தமிழ்நாட்டின் பழமையான துறை. 1800ஆண்டில், ஆங்கிலேயர் ஆட்சியின் போது நிறுவப்பட்டது. அது 1858 இல் அரசுடைமை ஆக்கப்பட்டது. 2021 ஆம் ஆண்டு இத்துறையிலிருந்து நீர்வளத்துறை தனி அமைச்சகமாகப் பிரிக்கப்பட்டது.

துறையின் குறிக்கோளும் பணிகளும் தொகு

அரசு செயலாளர் கட்டுப்பாட்டின் கீழ் பொதுப்பணித் துறை இயங்குகிறது. கட்டிடக்கட்டுமான அமைப்புக்களுக்கு அனைத்து கொள்கைகளையும் நிர்வகிக்கிறது

அமைப்புகள் தொகு

பெயர் வலைத்தளம்
கட்டிடக் கட்டுமானத் துறை http://www.tn.gov.in/ta/department/42
தமிழ்நாடு கொதிகலன் மேற்பார்வையகம் 

பொதுப்பணித்துறை அமைச்சர்கள் தொகு

தற்போதைய அமைச்சர்:

பொதுப்பணித்துறை முன்னாள் அமைச்சர்கள் தொகு

ஆண்டு பெயர்
2016-2021 எடப்பாடி க. பழனிசாமி
2013-2016 ஓ. பன்னீர்செல்வம்
2011-2013 கே. வி. இராமலிங்கம்
2006-2009,1996-2001,1989-1991 துரைமுருகன்
1980 எஸ்.ஆர். இராதா
1977-1989 ம. கோ. இராமச்சந்திரன்
1969,1971,1977 ப. உ. சண்முகம்
1967-1971,2009-2011 மு. கருணாநிதி
1962-1967 வி. இராமையா
1957-1962 பி. கக்கன்
1952-1957 சண்முக ராஜேஸ்வர சேதுபதி
1946-1952 மு. பக்தவத்சலம்
1937-1946 பி. கலிஃபுல்லா

யாக்கூப் அசன் சேத்

மேற்கோள்கள் தொகு