தமிழ்நாட்டின் மாநகராட்சிகள்

தமிழகத்தில் உள்ள பெரிய மாநகரங்களும் மற்றும் மாவட்ட தலைநகரம் ஆகும்

தமிழக மாநகராட்சிகள் இந்தியாவின் மாநிலமான தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளாக மாநகராட்சிகள் செயல்படுகின்றன. மாவட்டத் தலைநகரங்கள் மற்றும் முக்கிய நகரங்களில் மக்கள் தொகைக்கேற்ப மாநகராட்சிகள் அமைக்கப்பெற்றுள்ளன. தமிழகத்தில் உள்ள இருபத்து ஐந்து மாநகராட்சிகளில், முதலாவது மிகப்பெரிய மாநகராட்சி சென்னை ஆகும். இரண்டாவது கோயம்புத்தூர் மாநகராட்சியும், மூன்றாவது திருச்சிராப்பள்ளி மாநகராட்சியும் முறையே நான்காவது மதுரை மாநகராட்சியும் அடுத்த படியாக சேலம் மாநகராட்சியும் திருப்பூர் மாநகராட்சியும் உள்ளது. இந்த ஆறு மாநகராட்சிகள் மட்டுமே தமிழகத்தின் மிக முக்கியமான மாநகராட்சிகள் ஆகும். பிற மாநகராட்சிகள், திருநெல்வேலி, கடலூர் உட்பட சில மாநகராட்சிகள் அதற்கு அடுத்த நிலையில் காணப்படுகிறது. இந்த மாநகராட்சிகளின் தரவரிசை என்பது மக்கள் தொகை அடிப்படையிலும், மாநகராட்சி வருவாய் அடிப்படையிலும், மாநகராட்சி மண்டலங்கள் மற்றும் வார்டுகள் அடிப்படையிலும் வரிசைப்படுத்தப்படுகிறது

தமிழ்நாட்டில் அதிகமான மக்கள் தொகையுடன் மிக அதிக வருவாயுடைய ஊர்களை மாநகராட்சிகளாகப் பிரித்துள்ளனர். தமிழ்நாட்டில் மொத்தம் 25 மாநகராட்சிகள் இருக்கின்றன. இம்மாநகராட்சிகளுக்கு அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப வார்டுகள் பிரிக்கப்படுகின்றன. வார்டுகளில் வாக்காளர்களாக உள்ள மக்களால் மாநகராட்சி மன்றத்திற்கு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்படுகின்றனர். இந்த மாநகராட்சி மன்ற உறுப்பினர்களின் பதவிக்காலம் ஐந்து ஆண்டுகளாக இருக்கிறது. இந்த மாமன்ற உறுப்பினர்களில் இருந்து ஒருவர் மாமன்றத் தலைவராகவும், ஒருவர் மாமன்றத் துணைத் தலைவராகவும் தேர்வு செய்யப்படுகின்றார். மாநகராட்சியின் உறுப்பினர்களைக் கொண்டு நடத்தப்படும் மாநகராட்சி மன்றக் கூட்டங்களில் பெரும்பான்மையான உறுப்பினர்களைக் கொண்டு நிறைவேற்றப்படும் தீர்மானங்களின்படி மாநகராட்சி ஆணையாளர் அந்தப் பணிகளை தனக்கு கீழுள்ள அலுவலர் மற்றும் ஊழியர்களைக் கொண்டு செயல்படுத்துகிறார். இந்த உறுப்பினர் பதவிகளுக்கு அரசியல் கட்சி சார்பாக போட்டியிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தமிழக மாநகராட்சிகளின் ஆண்டு வரி வருவாய் தொகு

இதில் முதல் மூன்று இடங்களை சென்னை, கோயம்புத்தூர், திருச்சி மாநகராட்சிகள் கொண்டுள்ளது. இதில் 2021 ஆண்டு அடிப்படையில் மிகக்குறைந்த வரி வருவாயைக் வருவாயைக் கொண்ட மாநகராட்சி சிவகாசி ஆகும். புதிய ஆறு மாநகராட்சிகளின் வரம்பு நகர எல்லைக்கு சமமாக இருக்கும். எனவே பின்னர் நகர வரம்பு விரிவாக்கம், ஆண்டு வருமானம் அதிக உயரும்.

மாநகராட்சிகளின் பட்டியல் தொகு

வ. எண் மாநகர் மாவட்டம் மாநகராட்சி பெயர் மக்கள் தொகை (2011)[1] மக்கள் தொகை அடர்த்தி /கிமீ2 மாநகராட்சியாக ஆக்கப்பட்ட ஆண்டு நிர்வாக மண்டலங்களின் எண்ணிக்கை மண்டலம் வார்டுகளின் எண்ணிக்கை மாநகராட்சி பகுதி /கிமீ2
1 சென்னை சென்னை மாவட்டம் பெருநகர சென்னை மாநகராட்சி (இந்தியாவின் மிகப் பழமையான மாநகராட்சி மற்றும் லண்டனுக்குப் பிறகு, உலகின் இரண்டாவது பழமையான மாநகராட்சி ஆகும்.) 71,39,630 17,000 29 செப்டம்பர் 1688 15
  • திருவொற்றியூர்
  • மணலி
  • மாதவரம்
  • தண்டையார்பேட்டை
  • இராயபுரம்
  • திரு. வி. க. நகர்
  • அம்பத்தூர்
  • அண்ணா நகர்
  • தேனாம்பேட்டை
  • கோடம்பாக்கம்
  • வளசரவாக்கம்
  • ஆலந்தூர்
  • அடையாறு
  • பெருங்குடி
  • சோழிங்கநல்லூர்
200 426 சதுர கி.மீ
2 மதுரை மதுரை மாவட்டம் மதுரை மாநகராட்சி 18,38,252 12,832 01 மே 1971 4
  • மதுரை வடக்கு
  • மதுரை கிழக்கு
  • மதுரை தெற்கு
  • மதுரை மேற்கு
100 147.97 சதுர கி.மீ
3 கோயம்புத்தூர் கோயம்புத்தூர் மாவட்டம் கோயம்புத்தூர் மாநகராட்சி 34,58,045 9,175 01 சூலை 1981 5
  • கோயம்புத்தூர் வடக்கு
  • கோயம்புத்தூர் கிழக்கு
  • கோயம்புத்தூர் மத்தி
  • கோயம்புத்தூர் தெற்கு
  • கோயம்புத்தூர் மேற்கு
100 246.75 சதுர கி.மீ
4 திருச்சிராப்பள்ளி திருச்சிராப்பள்ளி மாவட்டம் திருச்சிராப்பள்ளி மாநகராட்சி 12,22,518 7,543 01 சூன் 1994 5
  • கோ-அபிஷேகபுரம்
  • அரியமங்கலம்
  • பொன்மலை
  • திருவரங்கம்
  • திருவெறும்பூர்
100 167 சதுர கி.மீ
5 சேலம் சேலம் மாவட்டம் சேலம் மாநகராட்சி 10,32,336 8,325 01 சூன் 1994 4
  • அஸ்தம்பட்டி
  • அம்மாபேட்டை
  • கொண்டலாம்பட்டி
  • சூரமங்கலம்
60 124 சதுர கி.மீ
6 திருநெல்வேலி திருநெல்வேலி மாவட்டம் திருநெல்வேலி மாநகராட்சி 9,68,874 5,127 01 சூன் 1994 5
  • தச்சநல்லூர்
  • பாளையங்கோட்டை
  • மேலப்பாளையம்
  • திருநெல்வேலி நகரம்
  • திருநெல்வேலி பேட்டை
55 189.9 சதுர கி.மீ
7 திருப்பூர் திருப்பூர் மாவட்டம் திருப்பூர் மாநகராட்சி 9,63,173 6,019 26 அக்டோபர் 2008 4
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் கிழக்கு
  • திருப்பூர் தெற்கு
  • திருப்பூர் மேற்கு
60 160 சதுர கி.மீ
8 ஈரோடு ஈரோடு மாவட்டம் ஈரோடு மாநகராட்சி 5,21,776 4,786 01 ஆகத்து 2008 4
  • சூரியம்பாளையம்
  • பெரியசேமூர்
  • சூரம்பட்டி
  • காசிப்பாளையம்
60 109.52 சதுர கி.மீ
9 வேலூர் வேலூர் மாவட்டம் வேலூர் மாநகராட்சி 6,87,981 7,907 01 ஆகத்து 2008 4
  • காட்பாடி
  • சத்துவாச்சாரி
  • வேலூர்க் கோட்டை
  • சேண்பாக்கம்
60 87.915 சதுர கி.மீ
10 தூத்துக்குடி தூத்துக்குடி மாவட்டம் தூத்துக்குடி மாநகராட்சி 4,31,628 4,550 5 ஆகத்து 2008 4
  • தூத்துக்குடி வடக்கு
  • தூத்துக்குடி கிழக்கு
  • தூத்துக்குடி மேற்கு
  • தூத்துக்குடி தெற்கு
60 90.663 சதுர கி.மீ
11 தஞ்சாவூர் தஞ்சாவூர் மாவட்டம் தஞ்சாவூர் மாநகராட்சி 3,22,406 3,300 19 பிப்ரவரி 2014 4
  • தஞ்சாவூர் வடக்கு
  • தஞ்சாவூர் கிழக்கு
  • தஞ்சாவூர் தெற்கு
  • தஞ்சாவூர் மேற்கு
62 128.02 சதுர கி.மீ
12 திண்டுக்கல் திண்டுக்கல் மாவட்டம் திண்டுக்கல் மாநகராட்சி 2,95,511 4,231 19 பிப்ரவரி 2014 4
  • திண்டுக்கல் வடக்கு
  • திண்டுக்கல் கிழக்கு
  • திண்டுக்கல் தெற்கு
  • திண்டுக்கல் மேற்கு
48 46.1 சதுர கி.மீ
13 நாகர்கோயில் கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோயில் மாநகராட்சி 3,45,849 5,334 14 பிப்ரவரி 2019 4
  • நாகர்கோயில் வடக்கு
  • நாகர்கோயில் கிழக்கு
  • நாகர்கோயில் தெற்கு
  • நாகர்கோயில் மேற்கு
52 49.10 சதுர கி.மீ
14 ஓசூர் கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மாநகராட்சி 3,45,000 4,407 14 பிப்ரவரி 2019 4
  • ஓசூர் வடக்கு
  • ஓசூர் கிழக்கு
  • ஓசூர் தெற்கு
  • ஓசூர் மேற்கு
45 72.41 சதுர கி.மீ
15 ஆவடி திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சி 4,45,996 5,323 19 சூன் 2019 4
  • ஆவடி வடக்கு
  • ஆவடி கிழக்கு
  • ஆவடி தெற்கு
  • ஆவடி மேற்கு
48 65 சதுர கி.மீ
16 தாம்பரம் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் மாநகராட்சி 14,27,591 10,588 4 நவம்பர் 2021[2] 7
  • தாம்பரம்
  • பல்லாவரம்
  • பம்மல்
  • செம்பாக்கம்
  • அனகாபுத்தூர்
  • பெருங்களத்தூர்
  • சிட்லபாக்கம்
100 126 சதுர கி.மீ
17 காஞ்சிபுரம் காஞ்சிபுரம் மாவட்டம் காஞ்சிபுரம் மாநகராட்சி 3,11,598 5,887 24 ஆகத்து 2021 4
  • காஞ்சிபுரம் வடக்கு
  • காஞ்சிபுரம் தெற்கு
  • காஞ்சிபுரம் கிழக்கு
  • காஞ்சிபுரம் மேற்கு
51 54.8 சதுர கி.மீ
18 கடலூர் கடலூர் மாவட்டம் கடலூர் மாநகராட்சி 2,80,263 2,847 24 ஆகத்து 2021 4
  • கடலூர் வடக்கு
  • கடலூர் கிழக்கு
  • கடலூர் தெற்கு
  • கடலூர் மேற்கு
45 82.83சதுர கி.மீ
19 கரூர் கரூர் மாவட்டம் கரூர் மாநகராட்சி 3,58,468 3,363 24 ஆகத்து 2021 4
  • கரூர் கிழக்கு
  • இனாம் கரூர்
  • கரூர் மேற்கு
  • தாந்தோணி
48 103.56 சதுர கி.மீ
20 கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் மாநகராட்சி 2,23,866 4,165 24 ஆகத்து 2021 4
  • கும்பகோணம் வடக்கு
  • கும்பகோணம் கிழக்கு
  • கும்பகோணம் தெற்கு
  • கும்பகோணம் மேற்கு
48 48.87 சதுர கி.மீ
21 சிவகாசி விருதுநகர் மாவட்டம் சிவகாசி மாநகராட்சி 2,60.047 5,348 24 ஆகத்து 2021 4
  • சிவகாசி மத்தி
  • சிவகாசி கிழக்கு
  • சிவகாசி மேற்கு
  • திருத்தங்கல்
48 53.67 சதுர கி.மீ

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. S. K. Kulshrestha (16 April 2018). Urban Renewal in India: Theory, Initiatives and Spatial Planning Strategies. SAGE Publishing India. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:9789352806386. https://books.google.com/books?id=wNJWDwAAQBAJ&dq=coimbatore+1%2C601%2C438&pg=PT88. பார்த்த நாள்: 17 September 2021. 
  2. தாம்பரம் மாநகராட்சி உதயமானது: அரசிதழில் வெளியீடு