தாசி அபரஞ்சி

தாசி அபரஞ்சி 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜெமினி ஸ்டூடியோ நிறுவனத்தினரால் வெளியிடப்பெற்ற இத்திரைப்படத்தில் கொத்தமங்கலம் சீனு, எம். கே. ராதா, புஷ்பவல்லி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படத்தில் நடித்து, கதை, உரையாடல்,பாடல்கள் போன்றவற்றை எழுதியதுடன் துணை இயக்குநராகவும் கொத்தமங்கலம் சுப்பு பணியாற்றினார்.

தாசி அபரஞ்சி
தயாரிப்புஎஸ். எஸ். வாசன்
பி. என். ராவ்
ஜெமினி ஸ்டூடியோ
கதைகொத்தமங்கலம் சுப்பு
இசைஎம். டி. பார்த்தசாரதி
எஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புகொத்தமங்கலம் சீனு
எம். கே. ராதா
கொத்தமங்கலம் சுப்பு
எம். வி. மணி
புஷ்பவல்லி
என். எஸ். சுந்தரம்
எம். எஸ். சுந்தரிபாய்
ஜெயலட்சுமி
எல். நாராயணராவ்
வெளியீடுஅக்டோபர் 16, 1944
நீளம்10980 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதைச்சுருக்கம் தொகு

மகதபுரி என்னும் ஊரில் அபரஞ்சி என்ற ஒரு தாசி இருந்தாள். அகங்காரம் மிக்கவளான அந்த தாசி யாராவது தன்னைப்பற்றி பேசினாலோ, நினைத்தாலோ ஆயிரம் பொன்னை அபராதமாக வசூலித்து விடுவாள். மகதபுரியில் உள்ள கோயிலில் ஒரு ஏழைப் பூசாரி (கொத்தமங்கலம் சுப்பு) இருந்தார். அவர் இந்த அபரஞ்சி மீது பெரும் மோகம் கொண்டிருந்தார். அவளை அடைய விரும்பிய பூசாரி, சர்க்கரைப் பொங்கலில் வசிய மருந்தைக் கலந்து, இந்தப் பிரசாதத்தை அபரஞ்சியிடம் கொடுக்குமாறு அவளின் வேலைக்காரியான சிங்காரியிடம் (எம். எஸ். சுந்தரிபாய்) கொடுத்தனுப்புகிறார். ஆனால் சர்க்கரைப் பொங்கலை அபரஞ்சியிடம் கொடுக்காத சிங்காரி அதைத் தானே சாப்பிட்டு எஞ்சியதை தனது ஆட்டுக்கு ஊட்டிவிடுகிறாள். வசிய மருந்தை சாப்பிட்ட சிங்காரி பிரேமை பிரேமை என்றும் ஆட்டுக்குட்டி மே மே என்றும் பூசாரியைத் தேடி ஒடுகின்றனர் இவ்வாறு கதை செல்கிறது.[2]

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (19 செப்டம்பர் 2008). "Dasi Aparanji (1944)". தி இந்து. Archived from the original on 25 அக்டோபர் 2008. பார்க்கப்பட்ட நாள் 2 சனவரி 2017. {{cite web}}: Check date values in: |date= (help)
  2. அறந்தை நாராயணன் (நவம்பர் 20 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-5 கொத்தமங்கலம் சுப்பு". தினமணிக் கதிர். 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாசி_அபரஞ்சி&oldid=3880976" இலிருந்து மீள்விக்கப்பட்டது