தாத்தேயசு அகேகியான்

தாத்தேயசு ஆர்த்தெம்யேவிச் அகேகியான் (Tateos Artemjevich Agekian, மே 12, 1913 - 2006) ஓர் ஆர்மேனியரும் புகழ்மிக்க சோவியத் வானியற்பியலாளரும் உடுக்கன இயக்கவியலில் உருசியா மட்டுமன்றி, உலகப் புகழ்பெற்ற முன்னோடிகளில் ஒருவரும் ஆவார். இவர் உடுக்கண படிமலர்ச்சியில் இரு படிமலர்ச்சி வரிசைவகைகளைக் கண்டார். அவற்றில் ஒன்று கோளவகையினதாகும்; மற்றொன்று தட்டைவகையினதாகும். நம் பால்வெளியாகிய பால்வழியின் கட்டமைப்பையும் இயக்கத்தையும் ஆய்வு செய்ய முற்றிலும் புதிய முறையை முன்மொழிந்தார்.விண்மீன் கொத்துகளின் சிதைவு வீத்த்துக்கான புதிய மதிப்பீட்டை உருவாக்கினார். விண்மீன்கலுக்கும் வளிம முகில்களுக்கும் இடையிலான ஒளியீர்ப்பு ஊடாட்டன் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். கோள் (3862, "அகேகியான்") இவரது பெயர் இடப்பட்டுள்ளது.[1][2]

தாத்தேயசு அகேகியான்
தாத்தேயசு ஆர்தெம்யேவிச் அகேகியான்
பிறப்பு(1913-05-12)மே 12, 1913
பத்தூமி, உருசியப் பேரரசு
இறப்பு16 சனவரி 2006(2006-01-16) (அகவை 92)
சென் பீட்டர்ஸ்பேர்க், உருசியா
தேசியம்ஆர்மேனியர்
துறைகோட்பாட்டு வானியற்பியல்

வாழ்க்கை தொகு

அகேகியான் ஆர்மேனியாவில் பாதும் எனும் இடத்தில் 1913 இல் பிறந்தார். இவர் 1938 இல் இலெனின்கிராது பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்ற பிறகு, பள்லி ஆசிரியராகப் பணிபுரிந்தார். சில ஆண்டுகலுக்குப் பின் தன் முதுபட்டப் படிப்பை மேற்கொண்டுள்ளார். எனினும் மாபெரும் நாட்டுப்பற்றுப் போரினால் அவரால் தொடரமுடியவில்லை. இவர் அதில் ஒரு காலாட்படையணியின் தலைவர்ராகப் பங்கேற்றுள்ளார். பின்னர் இடமாற்றம் பெறவே, இலெனின்கிராது பல்களைக்கழகத்தில் உடுக்கன இயக்கவியல் துறையில்தன் பணியைத் தொடர்ந்துள்ளார். இவர் 1947 இல் இயற்பியலிலும் கணிதவியலிலும் முதுவல் பட்டம் பெற்றுள்ளார். இவர் 1960 இல் இயற்பியலிலும் கணிதவியலிலும் முனைவர் பட்டம் பெற்றுள்ளார். பின்னர், இவர் பேராசிரியராக பதவி மாற்றம் பெற்றார். அண்மையில் இவர் புனித் பீட்டர்சுபர்கு பல்கலைக்கழகத்தில் உள்ல வானியல் நிறுவனத்தில் விண்வெளி, பால்வெளி இயக்கவியல் துறையில் தலைவராக இருந்துள்ளார். இவர் 2006 இல் இறந்தார்.

அறிவியல் செயல்பாடுகள் தொகு

விண்மீன் கொத்து அளபுருக்கள் தொகு

இவரது பெரும்பாலான பணிகள் உடுக்கண வானியலில் கணிதப் புள்ளியியல் முறைகளையும் தற்போக்கு நிகழ்வுக் கோட்பாட்டையும் பயன்படுத்துதலிலேயே அமைந்தன. குறிப்பாக, விண்மீன், பால்வெளி எண்ணிக்கைகளை அறிவதில் அமைந்தது. இவர் வின்மீன் கொத்து அளபுருக்களை மதிப்பிடும்போது, உண்மையான கொத்தாக்கத்தையும் உட்கவரும் அடுக்கின் ஒழுங்கற்ற கட்டமைப்பையும் தெளிவாகப் பிரித்துணர்ந்தார்.

விண்மீன் கொத்துகளும் உடுக்கண மோதலும் தொகு

இவர் உடுக்கண மோதல்களுக்கான கோட்பாட்டை உருவாக்கி, மோதல் வாய்ப்புகள் குறிப்பிட்ட விரைவுமாற்றத்தின்போதே நிகழ்தலைக் கண்டார். மேலும் பன்முக மோதல்களின் விளைவுகள் பற்றிய ஆய்வையும் மேற்கொண்டார். இம்முடிவுகள் இவருக்கு விண்மீன் கொதுகளின் புதிய சிதைவு வீதத்துக்கான புதிய மதிப்பீட்டை அடையும் வாய்ப்பைத் தந்தன.

சுழல் அமைப்புகளின் படிமலர்ச்சி தொகு

சுழல் அமைப்புகளின் படிமலர்ச்சி மீது உடுக்கண ஆவியாதலின் தாக்கம் குறித்த ஆய்வுகளில், இவர் இருவகை படிமலர்ச்சி துணையமைப்புகள் நிலவுவதைக் கண்டறிந்தார்: அவை கோளவகை, தட்டைவகை ந்பனவாகும்.

ஒளியீர்ப்பு ஊடாட்டம் தொகு

விண்மீன்களுக்கும் வளிம முகில்களுக்கும் இடையிலான ஒளியீர்ப்பு ஊடாட்டம் பற்றி விரிவாக ஆய்வு செய்தார். இந்த ஆய்வின் முடிவுகள் அகவை முதிரும்போது உடுக்கன விரைவு கூடும் நிகழ்வு பற்றிய விளக்கம் பெற உதவின.

பிற அறிவியல் பணிகள் தொகு

அகேகியான் மும்மை அமைப்புகளின் எண்ணியல் ஆய்வைத் தொடங்கிவைத்தார். முடிவுகளைப் புள்ளியியல் பகுப்பாய்வுக்கு உட்படுத்தினார். மற்ற பிற முடிவுகளோடு, அகேகியான்உம் அவரது உடன்பணியாளர்களும் கவர்தல், பரிமாற்றம் சார்ந்த நிகழ்தகவுகளைக் கண்டுபிடித்தனர். மேலும், மும்மை அமைப்பின் நிலைகளுக்கான வகைபாட்டை முன்மொழிந்தனர். அச்சுவழி சீரொரொமை வாய்ந்த பொதிவாற்றலில் அமையு இயக்கச் சிக்கலை ஆய்வுக்கு உட்படுத்தி புதிய முறைகளை உருவாக்கி நல்ல முடிவுகளையும் எய்தினார். பேராசிரியர் அகேகியான் உடுக்கண இயக்கவியல் முன்னோடிகளில் ஒருவராவார்.

1970 களில் இருந்தே இவர் அச்சுவழி சீரொரொமை வாய்ந்த பொதிவாற்றலில் அமையும் இயக்கச் சிக்கலாய்வில் ஈடுபட்டார். இந்த தலைப்பில் புதிய முறைகளை உருவாக்கி புதிய முடுகலுக்கும் வந்தார்.

மேற்கோள்கள் தொகு

  1. "Professor Tateos Artemjevich Agekian" (PDF). 20 December 2007. பார்க்கப்பட்ட நாள் 2015-08-26.
  2. Dictionary of Minor Planet Names. http://books.google.ca/books?id=uwGbkbhMVyAC&pg=PA21&lpg=PA21&dq=Tateos+Agekian+pioneer&source=bl&ots=ihXmfS93O8&sig=rPBIeigtDvYSiTtZPlxh1qGr3pg&hl=en&ei=yXKtTOy1DM61ngfp66GYBg&sa=X&oi=book_result&ct=result&resnum=7&ved=0CDEQ6AEwBg#v=onepage&q=Tateos%20Agekian%20pioneer&f=false. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தாத்தேயசு_அகேகியான்&oldid=2755528" இலிருந்து மீள்விக்கப்பட்டது