தானுந்து விளையாட்டுக்கள்

தானுந்து விளையாட்டுக்கள் என்று விரைவோட்டத் தானுந்துகள் கலந்து கொள்ளும் பல்வகை விளையாட்டுக்களை குறிப்பிடுகிறோம். இதை, மோட்டார்ப் பந்தயம், [1] கார்ப் பந்தயம் போன்ற பெயர்களாலும் அழைப்பதுண்டு. இது உலகில் மிக அதிகமாகத் தொலைக்காட்சியில் பார்க்கப்படும் விளையாட்டுக்களில் ஒன்று.இவற்றில் ஓரிருக்கை தானுந்துகள் போட்டியிடும் பார்முலா பந்தயங்கள், தொலைதூர நெடுஞ்சாலைப் போட்டிகள்,பொதுவாக பயன்படுத்தும் தானுந்துகளின் போட்டிகள் எனப் பலவாறாகப் பிரிக்கலாம்.

Juuso Pykälistö driving a Peugeot 206 World Rally Car at the 2003 Uddeholm Swedish Rally.

வரலாறு தொகு

தொடக்கம் தொகு

மிகப் பழைய காலத்தில் இருந்தே சில்லுகள் பூட்டிய வண்டிகளின் ஓட்டப்போட்டிகள் நிகழ்ந்து வந்திருக்கின்றன. மாட்டுவண்டிப் போட்டிகள், குதிரைவண்டிப் போட்டிகள் போன்றவை தற்போதும் நிகழ்வது உண்டு. பெட்ரோலில் இயங்கும் தானுந்துகள் பயன்பாட்டுக்கு வந்ததுமே தானுந்துப் போட்டிகளும் தொடங்கி விட்டன எனலாம். உலகின் முதல் தானுந்து ஓட்டப்போட்டியை பாரிஸ் வெளியீடான லெ வெலோசிப்பீட் என்பதன் சார்பில் அதன் தலைமை ஆசிரியர் மொன்சியர் போசியர் என்பவர் 1887 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 28 ஆம் தேதி ஒழுங்கு செய்தார். [2] இப்போட்டி 2 கிலோமீட்டர் ஓட்டத் தூரத்தைக் கொண்டிருந்தது. ஜார்ஜ் பூட்டன் என்பவர், ஆல்பர்ட் என்பவருடன் சேர்ந்து தானே உருவாக்கிய தானுந்துடன் கலந்து கொண்டு வெற்றி பெற்றார். எனினும், இப் போட்டியில் கலந்து கொள்வதற்கு இவர் மட்டுமே வந்திருந்ததால் இதனைப் போட்டி என்று சொல்ல முடியாது. 1894 ஜூலை 22 ஆம் தேதி முதலாவது போட்டி என்று சொல்லத்தக்கதான நிகழ்வு லெ பெட்டிட் ஜர்னல் என்னும் இன்னொரு பாரிஸ் சஞ்சிகையால் ஒழுங்கு செய்யப்பட்டது. இதுவும் ஒரு நம்பகத் தன்மைப் போட்டியாகவே ஒழுங்கு செய்யப்பட்டது. இதில் காம்டே டி டயன் என்பவர் முதலாவதாக வந்தாலும் பென்ஹார்ட் எட் லெவாசர் என்பவரே முதலிலில் வந்ததாகத் தீர்ப்பளிக்கப்பட்டது. ஓராண்டுக்குப் பின்னர் 1895 ஆம் ஆண்டில் உண்மையான தானுந்துப் போட்டி என்று சொல்லத்தக்க போட்டி பிரான்சில் இடம் பெற்றது. எமிலி லெவாசர் என்பவர் ஓட்டத்தூரத்தை முதலில் கடந்தபோதும் அவருடைய தானுந்து விதிகளின் படி நான்கு இருக்கைத் தானுந்தாக இல்லாததால் அவர் போட்டியிலிருந்து விலக்கப்பட்டார்.

தானுந்து போட்டிகளின் மீள்வரவு தொகு

1950-ல் முதல் பார்முலா 1 போட்டித் தொடரை இத்தாலியின் ஜிசப் பரின வென்றார். அவர் ஆல்பா ரோமியோ தானுந்தினை ஓட்டினார். முதல் தொடரில் அர்ஜெண்டினாவின் ஜுவான் மானுவேல் பேஞ்சியோ-வை வென்று கோப்பையைக் கைப்பற்றினார். எனினும் ஜுவான் மானுவேல் பேஞ்சியோ 1951, 1954, 1955, 1956 & 1957 ஆண்டுகளில் பார்முலா 1 வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினார். (இவரது 5 பார்முலா 1 தொடர் வெற்றிகள் 45 ஆண்டுகள் சாதனையாக இருந்தது. இச்சாதனை 2003-ஆம் ஆண்டு மைக்கேல் சூமாக்கர் தனது 6-வது தொடர் வெற்றியின் மூலம் உடைத்தார்.) 1952, 1953-ஆம் ஆண்டுகளில் பெராரியின் ஆல்பர்டோ அஸ்காரி பார்முலா 1 தொடர் வெற்றியாளர் ஆனார். இக்காலகட்டத்தில் ஐக்கிய ராச்சியத்தின் ஸ்டிர்லிங் மோஸ் ஒவ்வொரு ஆண்டும் வெற்றியாளர்களுக்கு கடும் போட்டியைக் கொடுத்தார். ஆனால் ஒருமுறையும் தொடர் வெற்றியாளரை ஆனதில்லை. ஆகவே, தொடர் வெற்றியாளர் ஆகாத மிகச் சிறந்த ஓட்டுனராக அவர் கருதப்படுகிறார். பேஞ்சியோ போட்டித் தொடர்களின் தொடக்க காலகட்டத்தில் மிகச் சிறந்தவராக விளங்கினார். பலரால், பார்முலா 1 "மகா அதிபதி" என கருதப்படுகிறார்.

தானுந்து விவரங்கள் தொகு

தொடக்க காலத்தில் பெருமளவு தானுந்து தயாரிப்பாளர்கள் பார்முலா 1-ல் பங்கேற்றனர். குறிப்பிடத்தக்கோர்- பெராரி, ஆல்பா ரோமியோ, மெர்சிடஸ் பென்ஸ், மாசராட்டி- இவர்கள் அனைவரும் உலகப் போருக்கு முன்னரும் இவ்வகைப் போட்டிகளில் பங்கேற்றோர் ஆவர். தொடக்க கால போட்டிகளில் உலகப் போருக்கு முந்தைய தானுந்து வடிவமைப்புகளே பயன்படுத்தப்பட்டன. எ-கா: ஆல்பா ரோமியோவின் 158. முன்பக்கத்தில் பொருத்தப்பட்ட எஞ்சினும் குறுகிய வட்டயங்களும் (டயர்கள்) பயன்படுத்தப்பட்டன. எஞ்சின்கள் மட்டின்றி அழுத்த மிகுதிப்படுத்தும் 1.5 லிட்டர் வடிவாகவோ, இயற்கையான காற்றை உறிஞ்சியிழுக்கும் 4.5 லிட்டர் வடிவாகவோ இருந்தன. 1952, 1953-ஆம் ஆண்டுகளில் பார்முலா 2 வகை தானுந்துகளே பயன்படுத்தப்பட்டன. ஏனெனில் அப்போது பார்முலா 1 தானுந்துகள் குறைவாகவே இருந்தன. அவை பார்முலா 1 தானுந்துகளை விட சிறியனவாகவும் ஆற்றலில் குறைந்தனவாகவும் இருந்தன. 1954-ஆம் ஆண்டு பார்முலா 1 விதிமுறைகளில் 2.5 லிட்டர் எஞ்சின் மட்டுமே பயன்படுத்த அனுமதிக்கப்பட்டது. அப்போது மெர்சிடஸ் பென்ஸ் தனது மிகவும் மேம்பட்ட வடிவமைப்பான W196 என்ஜினை வெளியிட்டது. இந்த எஞ்சின் நேரடியான எரிபொருள் உள்ளீடு, டேச்மொட்ராமிக் ஊடிதழ் (desmodromic valve) மற்றும் மூடப்பட்ட சீரிசையோட்ட உடல் வடிவமைப்பு போன்றவற்றைக் கொண்டிருந்தது. மெர்சிடஸ் ஓட்டுனர்கள் தொடர்ச்சியாக இரண்டு ஆண்டுகள் வெற்றிக் கோப்பைகளைக் கைப்பற்றினர். ஆனால் 1955-ஆம் ஆண்டிறுதியில் அனைத்து வகைத் தானுந்து போட்டிகளிலிருந்தும் மெர்சிடஸ் வெளியேறியது. 1955-ஆம் ஆண்டு நிகழ்ந்த லே மான்ஸ் பேரிடர் இதன் காரணமாக கூறப்படுகிறது.

தானுந்து தொழில்நுட்பங்ள் தொகு

இதுவரை தானுந்தில் பயன்படுத்தப்படும் பொறி (எஞ்சின்) 2.4 லிட்டருக்கு மிகாமல் இருக்கவேண்டும் என இருந்தது. 2014-ஆம் ஆண்டு முதல் அதிகபட்சமாக 1.6 லிட்டர் அதிரடி வேக சுழற்றி பொருத்தப்பட்ட பொறியாக இருக்கவேண்டும். இந்த தானுந்துகளில் பயன்படுத்தப்படும் எரிபொருள் பெரும்பாலும் சாதாரண மகிழுந்துகளில் பயன்படுத்தக்கூடிய எரிபொருளை சார்ந்தே இருக்கும். அதிகபட்ச நேர்கோட்டு வேகமான மணிக்கு 372.6 கி.மி. 2005-ஆம் ஆண்டு மெக்லேரன் மெர்சிடஸ் தானுந்து பயன்படுத்தி ஜுவான் பப்லோ மோன்டோயா இத்தாலிய கிராண்ட் ப்ரிக்ஸ் போட்டியிலு நிகழ்த்தியுள்ளார்

வகைகள் தொகு

தானுந்து போட்டிகள் பல வகைகளாக நடைபெறுகின்றன.அவை

கார்ட்டு பந்தயம் தொகு

கார்ட்டு பந்தயம் அல்லது கார்ட்டோட்டம் என்பது திறந்த சக்கர தானுந்து விளையாட்டில் கார்ட்,கோ-கார்ட் என்று குறிப்பிடப்படும் சிறிய திறந்த நான்கு சக்கர வண்டிகளிடையேயான போட்டியாகும். இவை வழக்கமாக கார்ட் சுற்றுச்சாலை எனப்படும் அளவு குறைந்த சுற்றுச்சாலைகளில் நடத்தப்படும். கார்ட்டோட்டம் பொதுவாக பிற செலவுமிகுந்த தானுந்துப் போட்டிகளில் பங்கேற்க முதற்படி எனக் கருதப்படுகிறது.

கார்ட்டுகள் அவற்றின் வேகத்தில் பெரிதும் வேறுபடுகின்றன. சூப்பர்கார்ட்டுகள் எனப்படும் சிலவகைகள் 160 மை/மணி (260 கி.மீ/மணி) வேகத்தில் விரையக்கூடியன.[3] பொதுமக்கள் மனமகிழ் மையங்களில் பயன்படுத்தும் கோ-கார்ட்டுகள் 15 மைல்/மணி (24 கி.மீ/மணி) வேகத்தினுள் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன. ஓர் KF1 கார்ட், 125 சிசி விசைஇயந்திரத்துடனும் 150 கிலோ எடையுடனும், 85 மைல்/மணி வேகத்தை அடைய முடிகிறது. மூன்றே வினாடிகளில் 0விலிருந்து 60 மைல்/மணி வேகத்தை அடைகிறது.

பார்முலா தானுந்து ஓட்டப்போட்டிகள் தொகு

இவகை உலகில் உள்ள மிக பிரபலமான ஒற்றை இருக்கை கொண்ட தானுந்துகளின் ஓட்டப் போட்டியாகும்.இவற்றில் வாகனங்களின் சக்கரங்கள் மூடப்படாமல் வெளியில் இருக்கும்.மேலும் அதன் பின்பகுதியில் தரையை நோக்கி புவியீர்ப்பு விசையை அதிகப்படுத்தும் அமைப்புகள் இருக்கும்.பொதுவாக திறந்த சக்கர தானுந்து விளையாட்டே பார்முலா பந்தயம் எனப்படுகிறது.இவற்றில் பார்முலா 1,2,3 என பல வகைகள் இருக்கின்றன.

 
ஓர் பார்முலா நிப்பன் லோலா தானுந்து

பார்முலாப் பந்தயங்கள் என்று பலவித திறந்த சக்கர ஓரிருக்கை தானுந்து விளையாட்டுக்களைக் குறிக்கிறோம். இதனை நடத்துகின்ற பன்னாட்டு தானுந்து கூட்டமைப்பு (FIA) இரண்டாம் உலகப் போர் பிந்தைய ஓரிருக்கை வண்டி நெறிமுறைகளை பார்முலா என்று குறிப்பிட்டதை ஒட்டி இப்பந்தயங்கள் பார்முலாப் பந்தயங்கள் என அழைக்கப்படுகின்றன. இவற்றில் பார்முலா ஒன்று,பார்முலா இரண்டு மற்றும் பார்முலா 3 புகழ்பெற்றவை. மேலும் இவை பிற ஓரிருக்கை தானுந்துப் போட்டிகளான GP2 வகைப் பந்தயங்களையும் பரவலாக குறிக்கின்றன.

பார்முலா ஒன்று மற்றும் பார்முலா இரண்டு (தற்போது இதனிடத்தைப் பிடித்துள்ள GP2) ஆகியன ஓர் பந்தய விளையாட்டு வீரரின் வாழ்வில் பார்முலா ஒன்று செல்ல வழிநடத்துவதால் இவற்றை வழிநடத்து பார்முலா (feeder formulae) என அழைக்கின்றனர். இத்தகைய பந்தயங்களில் இரு முதன்மையான பிரிவுகள் உள்ளன: திறந்த நெறிமுறையில் வண்டியின் உடற்பாகமும் (chassis) விசை இயந்திரமும் (engine) போட்டியாளரே முடிவு செய்யலாம். மற்ற குறிப்பீடு நெறிமுறையில் இரண்டையும் ஒரே தயாரிப்பாளர் வழங்குவார். பார்முலா 3 திறந்த நெறிமுறைப் பந்தயத்திற்கான எடுத்துக்காட்டு. குறிப்பீடு நெறிமுறைப் பந்தயத்திற்கு பார்முலா பிஎம்டபுள்யுவை காட்டாகக் கொள்ளலாம். சில நேரங்களில் இந்த இரண்டு வகைகளில் அடங்காத பந்தயங்களும் நடக்கின்றன: பார்முலா ஃபோர்ட் பந்தயத்தில் உடற்பாகம் ஏதேனும் இருக்கலாம் ஆனால் விசை இயந்திரம் ஒரே தயாரிப்பாளராக இருப்பார்.


சுற்றுலா தானுந்து ஓட்டப்போட்டிகள் தொகு

இவை பொதுவாக தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட ஒரே வகை வாகனங்களுக்கிடையே நடத்தப்படுபவையாகும்.ஒரே வகையை சேர்ந்தவையாதலால் அவை சிறிய அளவிலான வித்தியாசங்களையே கொண்டிருக்கும்.எனிவே இவ்வகை மிகவும் சுறுசுறுப்பாகவும் வெற்றி தோல்வி சிறிய வித்தியாசங்களை கொண்டதாகவும் இருக்கும்.

பந்தய வாகன ஓட்டம் தொகு

இந்தவகை ஓட்டப்போட்டிகள் பந்தயங்களுக்கென்றே உருவாக்கப்பட்டவையாகும். இந்தவகை போட்டிகள் கிராண்ட் டார்சர் என்ற பொருளில் ஜி.டி என்று குறிக்கப்படும். மேலும் இந்தவகை போட்டிகள் குறைந்தபட்சம் 1௦௦௦ கி.மீ அல்லது அதற்கு மேற்பட்ட தூரத்திற்கு நடத்தப்படும். மேலும் இதில் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட ஓட்டுனர்களை கொண்ட அணியினர் பங்கேற்பார்.

 
2010 மெர்சிடிஸ் ஜி.பி. பார்முலா 1 தானுந்து.

திறந்த சக்கர தானுந்து தொகு

திறந்த சக்கர தானுந்து அல்லது பார்முலா கார் என்பது தானுந்தின் உடல் அமைப்பிற்கு வெளியே சக்கரங்களைக் கொண்டதும், பெரும்பாலும் ஒரு இருக்கையைக் கொண்டதுமான கார்களைக் குறிக்கிறது. இந்த வகை திறந்த சக்கர தானுந்துகள் பொதுவாக பந்தயத்திற்காக பிரத்தியேகமாக கட்டமைக்கப்படுகின்றன.

ஓட்டுதல் தொகு

திறந்த சக்கர தானுந்து பந்தயம்தான் உலகிலேயே வேகமான தானுந்து பந்தயமாக உள்ளது. இந்த வகை பார்முலா 1 கார்கள் ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோமீட்டர் (220 மைல்கள்) வரை செல்ல முடியும். இந்த வகையில் பார்முலா 1, பி.எம்.டபிள்யு வில்லியம்ஸ் குழு மணிநேரத்திற்கு 369.9 கிலோமீட்டர் (229.8 மைல்கள்) ஒரு உயர் வேகத்தில் 2004 இத்தாலிய கிராண்ட் பிரீ போட்டித் தொடரில் தானுந்தைச் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது.

கொடிகளின் பயன்பாடு தொகு

பல வகையான தானுந்து விளையாட்டுகளிலும் குறிப்புத் தொடர்புக்காக பல வண்ணக் கொடிகள் பயன்படுத்தப்படுகின்றன. ஒவ்வொரு தனித்தனியான போட்டிகளுக்கும் தனித்தனியான கொடிகள் பயன்படுகின்றன.

கொடி தொடக்க கோபுரத்திலிருந்து காட்டப்படுவது கவனிப்பு கோபுரத்திலிருந்த இருந்து காட்டப்படுவது
  போட்டி ஒரு முழு சுற்று முடிவடைந்தது அல்லது நிறுத்துதலின் பின்னர் தொடங்கியது அல்லது மறுதொடக்கம் செய்யப்பட்டது. மோசமான வழித்தட எல்லை முடிவு.
 
  பாதை சிதைவடைந்துள்ளது, வெள்ளம் அல்லது வேறு வகையான இடர்பாடுகள் உள்ளது பாதை சிதைவடைந்துள்ளது, வெள்ளம் அல்லது வேறு வகையான இடர்பாடுகள் உள்ளது
 
  குறிப்பிட்ட எண்ணிடப்பட்ட தானுந்து இயந்திரக் கோளாறு ஏற்பட்டுள்ளது.
  குறிப்பிட்ட எண்ணிடப்பட்ட தானுந்தின் ஓட்டுநருக்கு தவறான நடத்தைக்காக தண்டிக்கப்பட்டார்.
  குறிப்பிட்ட எண்ணிடப்பட்ட தானுந்து ஓட்டுநர் போட்டியிலிருந்து நீக்கப்படுகிறார்
  வேகமான போக்குவரத்துக்கு வழிவகுக்க வேண்டும். தொடர்ச்சியைப் பொறுத்து இது கட்டளை அல்லது அறிவுரை மட்டுமே. நெருங்கி வரும் வேகமான தானுந்து வருவதற்கு வழி விடப் பரிந்துரைக்கப்படுகிறது.
  போட்டி நிறுத்தப்பட்டது. அனைத்து தானுந்துகளும் நிறுத்தப்பட்டு தொடக்கக் கோட்டிற்கு வரவும்
  தொடரினை பொறுத்து, எஞ்சியிருக்கும் அல்லது மெதுவாக வாகனம் பாதையில் உள்ளது. தடத்தில் குறைந்த வேகத்தில் தானுந்து வந்துகொண்டுள்ளது.
  போட்டி முடிந்தது


மேற்கோள்கள் தொகு

  1. Macmillan Dictionary
  2. "Isaac Watt Boulton". www.gracesguide.co.uk. பார்க்கப்பட்ட நாள் 2016-07-27.
  3. "Superkart at Magny-Cours - 2007". Archived from the original on 2009-04-14. பார்க்கப்பட்ட நாள் 2017-09-09.