தாராபுரம் வட்டம்

இது தமிழகத்தில் திருப்பூர் மாவட்டத்தில் அமைந்துள்ள ஒன்பது தாலுக்காக்களில் இதுவும் ஒரு வட்டம

தாராபுரம் வட்டம் , தமிழ்நாட்டின் திருப்பூர் மாவட்டத்தில் உள்ள 9 வட்டங்களில் ஒன்றாகும். மாவட்டத்திலே இதுதான் மிகப்பெரிய வட்டம் ஆகும். [1] இந்த வட்டத்தின் தலைமையகமாக தாராபுரம் நகரம் உள்ளது. தாராபுரம் வட்டத்திற்கு உட்பட்ட குண்டடம் பகுதிகளில் புகழ்பெற்ற கோவில்கள் அமைந்துள்ளன.

இந்த வட்டத்தின் கீழ் 7 உள்வட்டங்களும், 71 வருவாய் கிராமங்களும் உள்ளது.[2]

இவ்வட்டத்தில் தாராபுரம் ஊராட்சி ஒன்றியம், குண்டடம் ஊராட்சி ஒன்றியம் மற்றும் மூலனூர் ஊராட்சி ஒன்றியம் உள்ளது.


தாராபுரம் வட்டம் கோயம்புத்தூர் , திண்டுக்கல் , கரூர் என்று மூன்று மாவட்டங்களுடன் எல்லை பகிர்வு உள்ளது

தொடக்க காலத்தில் ஒருங்கிணைந்த கோயம்புத்தூர் மாவட்டத்தில் இருந்த 10 தாலுக்காவில் இதுவும் ஒன்று.

ஒருங்கிணைந்த தாராபுரம் தாலுகா இப்போது உள்ள காங்கேயம் தாலுகா தாராபுரம் தாலுகா சேர்ந்த பகுதிகள் ஆகும்.

மக்கள்தொகை பரம்பல் தொகு

2011-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி இவ்வட்டம் 282,752 மக்கள்தொகை கொண்டது. மக்கள்தொகையில் 140,576 ஆண்களும், 142,176 பெண்களும் உள்ளனர். 86,520 குடும்பங்கள் கொண்ட இவ்வட்ட மக்கள்தொகையில் கிராமப்புறங்களில் 60.5% வாழ்கின்றனர். இவ்வட்டத்தின் எழுத்தறிவு 71.34% மற்றும்பாலின விகிதம் 1,000 ஆண்களுக்கு, 1,011 பெண்கள் வீதம் உள்ளனர். 6 வயதிற்குட்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை 21502 ஆகவுள்ளது. குழந்தைகள் பாலின விகிதம், 1000 ஆண் குழந்தைகளுக்கு, 937 பெண் குழந்தைகள் வீதம் உள்ளனர். பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 73,742 மற்றும் 78 ஆகவுள்ளனர். மக்கள்தொகையில் இந்துக்கள் 92.6%, இசுலாமியர்கள் 4.9%, கிறித்தவர்கள் 2.14% மற்றும் பிறர் 0.35% ஆகவுள்ளனர்.[3]

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தாராபுரம்_வட்டம்&oldid=3922263" இலிருந்து மீள்விக்கப்பட்டது