திசை ஒவ்வா செயல்முறை

திசை ஒவ்வா செயல்முறை என்பது ஒரு மீளக்கூடிய வெப்பவியக்கவியல் செயல்முறை அது பின்வரும் தொடர்பை வெளிப்படுத்தும்:

இங்கு p என்பது அமுக்கம், V கனவளவு, திசை ஒவ்வா சுட்டெண் n என்பது யாதேனும் ஒரு மெய்யெண், C என்பது ஒரு மாறிலி. இந்தச் சமன்பாடானது சில வெப்பவியக்கவியல் தொகுதிகளின் செயல்முறைகளைத் துல்லியமாக விளக்கப் பயன்படுகிறது, குறிப்பாக வளிமத்தின் (சில சந்தர்ப்பங்களில் திரவம், திண்மங்களின்) நெருக்குகையை அல்லது விரிவை விளக்கப் பயன்படுகிறது.

செல்லுபடியாகுமை தொகு

செயல்முறையினை பகுதிநிலைச் செயல்முறை எனவும்   ஆனது சுழியமாகவோ முடிவிலியாகவோ இல்லாத நிலையில் தன்வெப்பக் கொள்ளளவுகளான  ,   ஆகியன மாறிலியாக இருக்குமெனவும் கொண்டால் இச்சமன்பாடு ஏற்புடையதாக இருக்கும்,(ஆனால் உண்மையில்  ,   ஆகியன வெப்பநிலையினதும் அமுக்கத்தினதும் சார்புகள், எனினும் சிறிய வெப்பநிலை மாற்றத்திற்கு மாறிலியாக இருக்கும்).

இலட்சிய செயல்முறைகளுக்கான தொடர்பு தொகு

சில குறித்த திசை ஒவ்வா சுட்டெண்களுக்கு செயல்முறையானது மற்றைய பொதுவான செயல்முறைகளை ஒத்ததாக இருக்கும். சில திசை ஒவ்வா சுட்டெண் மதிப்புக்களின் மாற்றத்தின் விளைவுகள்.

திசை ஒவ்வா சுட்டெண்   இன் மாறுகை
திசை ஒவ்வா < br />சுட்டெண் தொடர்பு விளைவுகள்
   — இது அன்றாட அமைப்புகளிற்கு பொருந்தாவிட்டாலும் மறை அடுக்கானது வெப்ப இடைவினை ஆதிக்கஞ் செலுத்தாத வானியற்பியலில் வரும் பிளாசுமாக்களின் செயல்முறை போன்ற சில சிறப்புச் சந்தர்ப்பங்களில் பொருளுடையதாக இருக்கிறது.[1]
   
(மாறிலி)
சம அழுத்தச் செயல்முறைக்குச் சமனானது
   
(மாறிலி)
சமவெப்பச் செயல்முறைக்குச் சமனானது
  வார்ப்புரு:Em dash உள் எரி பொறியில் நிகழும் விரிவடைதல் செயல்முறை அல்லது குளிராக்கலின் போது நிகழும் ஆவியமுக்கல் செயல்முறை, மையவிலக்கு அமுக்கியினூடாக வளிமத்தைச் செலுத்தி நெருக்கல் போன்ற திசை ஒவ்வாச் செயல்முறை இங்கு அமுக்கியிலிருந்தான வெப்பவிழப்பு நெருக்கல் செயல்முறையின் போது வளிமத்திற்கு வழங்கப்படும் வெப்பத்தை விடக் கூடியதாக இருத்தல் வேண்டும்.
   —    எனபது வெப்பஞ்சேரா சுட்டெண், வெப்பஞ்சேரா செயல்முறையாகிறது.
   — பொதுவாக திசையொவ்வா சுட்டெண்ணானது மையவிலக்கு அமுக்கிக்கூடாக வளிமத்தைச் செலுத்தல் போன்ற திசையொவ்வா செயல்முறைகளில் வெப்பஞ்சேரா சுட்டெண் (காமா) இனை விட உயர்வானதாக இருக்கும். மையநீக்கு அமுக்குகையின் திறனின்மை, வளிமத்தினுள் சேர்க்கப்பட்ட வெப்பத்தினை விட வளிமத்தால் சூழலிற்கு இழக்கப்பட்ட வெப்பம் அதிகமாயிருக்கும்.
  வார்ப்புரு:Em dash மாறாக் கனவளவு செயல்முறைக்குச் சமனானது

சான்றுகள் தொகு

  1. G. P. Horedt Polytropes: Applications In Astrophysics And Related Fields, Springer, 10/08/2004, pp.24.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திசை_ஒவ்வா_செயல்முறை&oldid=3299197" இலிருந்து மீள்விக்கப்பட்டது