திபெத்திய சிறுமான்

திபெத்திய பீடபூமியில் காணப்படும் மான்
திபெத்திய சிறுமான்
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
வரிசை:
குடும்பம்:
Bovidae
துணைக்குடும்பம்:
Antilopinae
பேரினம்:
இனம்:
P. picticaudata
இருசொற் பெயரீடு
Procapra picticaudata
Hodgson, 1846

திபெத்திய சிறுமான் (Tibetan Gazelle) என்பது ஒரு மான் இனமாகும். இவை குறிப்பாக திபெத்திய பீடபூமியிலும், வடகிழக்கு லடாக், சிக்கிம் ஆகிய பகுதிகளிலும் வாழ்கின்றன.

விளக்கம் தொகு

இந்த மான்கள் சிறிய வகை மான்கள் ஆகும். ஆண், பெண் ஆகிய இருவகை மான்களும் தோராயமாக 13-16 கிலோ (29 -35 இராத்தல் ) எடை கொண்டவை. தோள்பட்டைவரை 54 முதல் 65 சென்டிமீட்டர் (21-26 அங்குலம்) உயரம் உடையவை. தலை முதல் உடல்வரை 91 முதல் 105 செ.மீ (36-41 அங்குலம்) நீளம் கொண்டவை. ஆண் மான்கள் பின் நோக்கி கூராக வளைந்த கொம்புகள் கொண்டவை. வால் குறுகியும் முனையில் கருமையாகவும் இருக்கும். பெண்மானுக்குக் கொம்புகள் கிடையாது.

மேற்கோள்கள் தொகு

  1. "Procapra picticaudata". பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கத்தின் செம்பட்டியல் பதிப்பு 2008. பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம். 2008. Database entry includes a brief justification of why this species is of near threatened.
"https://ta.wikipedia.org/w/index.php?title=திபெத்திய_சிறுமான்&oldid=2785574" இலிருந்து மீள்விக்கப்பட்டது