திமிசுத்தாரை

திமிசுத்தாரை (Ramjet) எனப்படுபவை ஒருவகை காற்றெரி தாரைப் பொறிகளாகும். இவை வழமையான சுழலும் அமுக்கிகள் ஏதுமற்று, பொறியின் முன்னேறும் இயக்கத்தை வைத்தே உள்வரும் காற்றை அமுக்குகின்றன. இவை சுழிய வேகத்தில் உந்துவிசையை உருவாக்குவதில்லை, எனவே நிலையாயிருக்கும் ஒரு வானூர்தியை இவற்றால் நகர்த்தவியலாது. ஆகையால் இப்பொறிகள் செயல்பட ஆரம்பிக்கும் வேகம் வரைக்கும் வேறுவகையான உந்துகைத் தொகுதிகள் பயன்படுத்தப்படுகின்றன. திமிசுத்தாரைகள் சிறப்பாகச் செயல்புரிய குறிப்பிட்ட அளவு வேகம் தேவை, பொதுவாக மாக் 3 வேகத்துக்கருகில் இவை மிகச் சிறப்பாகச் செயல்புரிகின்றன. பொதுவாக திமிசுத்தாரைகள் மாக் 6 வேகம் வரையிலும் பயன்படுத்தப்படுகின்றன.

ஒரு வழமையான திமிசுத்தாரை

அதிவேகப் பயன்பாடுகளுக்காக சிறிய மற்றும் எளிமையான வடிவமைப்பு கொண்ட பொறிகள் தேவைப்படும் இடங்களில் திமிசுத்தாரைகள் பயன்படுத்தப்படுகின்றன, எ-கா: ஏவுகணைகள். பலநேரங்களில் திமிசுத்தாரைகள், துடிப்புத்தாரைகளோடு (Pulsejet) குழப்பிக்கொள்ளப்படுகின்றன; இவற்றுக்கிடையேயான முக்கிய வேறுபாடு - திமிசுத்தாரைகள் தொடர்ச்சியாக எரிதல் செயல்முறையுடையவை, ஆனால் துடிப்புத்தாரைகள் விட்டுவிட்டு எரியும் செயல்முறை உடையவை.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திமிசுத்தாரை&oldid=1989360" இலிருந்து மீள்விக்கப்பட்டது