திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி

திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதி (ஆங்கில மொழி: Thrikaripur State Assembly constituency, மலையாளம்: തൃക്കരിപ്പൂർ നിയമസഭാമണ്ഡലം), முன்பு நீலேசுவரம் தொகுதி கேரளத்தின் 140 தொகுதிகளில் ஒன்று. இது காசர்கோடு மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[1] 2021 சட்டமன்றத் தேர்தலின்படி, தற்போதைய சட்டமன்ற உறுப்பினராக இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) கட்சியின் எம். ராஜகோபாலன் உள்ளார்.[2]

உட்பட்ட பகுதிகள் தொகு

திருக்கரிப்பூர் சட்டமன்றத் தொகுதியின் தற்போதுள்ள உள்ளூராட்சி பிரிவுகளை பின்வரும் பட்டியல் கொண்டுள்ளது: [3][4]

எண். பெயர் நிலை (கிராம ஊராட்சி/நகராட்சி) வட்டம்
1 நீலேசுவரம் நகராட்சி ஹோஸ்‌துர்க்
2 செறுவத்தூர் கிராம ஊராட்சி ஹோஸ்‌துர்க்
3 படன்ன கிராம ஊராட்சி ஹோஸ்‌துர்க்
4 பீலிக்கோடு கிராம ஊராட்சி ஹோஸ்‌துர்க்
5 திருக்கரிப்பூர் கிராம ஊராட்சி ஹோஸ்‌துர்க்
6 வலியபறம்பு கிராம ஊராட்சி ஹோஸ்‌துர்க்
7 கய்யூர்-சீமேனி கிராம ஊராட்சி ஹோஸ்‌துர்க் மற்றும் வெள்ளரிக்குண்டு
8 கிழக்கு எளேரி கிராம ஊராட்சி வெள்ளரிக்குண்டு
9 மேற்கு எலேரி கிராம ஊராட்சி வெள்ளரிக்குண்டு

2008-ஆம் ஆண்டு மறுசீரமைப்பிற்கு முன்பு திருக்கரிப்பூர், கிழக்கு எளேரி, மேற்கு எளேரி, கய்யூர்-சீமேனி, பீலிக்கோடு, படன்ன, வலியபறம்பு ஆகிய ஊராட்சிகளும், கண்ணூர் மாவட்டத்தில் தளிப்பறம்பு வட்டத்தில் உள்ள கரிவெள்ளூர்-பெரளம், பெரிங்ஙோம்-வயக்கரை, காங்கோல்-ஆலப்படம்பு ஆகிய ஊராட்சிகளையும் கொண்டிருந்தது. [5]

சட்டமன்ற உறுப்பினர்கள் தொகு

இத்தொகுதியின் கேரள சட்டமன்ற உறுப்பினராக இருந்த அனைவரும் பின்வருமாறு:

நீலேசுவரம் தொகுதி

தேர்தல் சட்டமன்றம் உறுப்பினர் கட்சி பதவிக்காலம்
1957 1வது ஏலங்குளம் மனக்கல் சங்கரன் நம்பூதிரிப்பாடு இந்தியப் பொதுவுடைமைக் கட்சி 1957 – 1960
1960 2வது சி. குன்கி கிருஷ்ணன் நாயர் இந்திய தேசிய காங்கிரசு 1960 – 1965
1967 3வது வி. வி. குஞ்சம்பு இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1967 – 1970
1970 4வது 1970 – 1977

திருக்கரிப்பூர் தொகுதி

தேர்தல் சட்டமன்றம் உறுப்பினர் கட்சி பதவிக்காலம்
1977 5வது பி. கருணாகரன் இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) 1977 – 1980
1980 6வது 1980 – 1982
1982 7வது ஓ. பரதன் 1982 – 1987
1987 8வது எ. கி. நாயனார் 1987 – 1991
1991 9வது 1991 – 1996
1996 10வது கே. பி. சதீசு சந்திரன் 1996 – 2001
2001 11வது 2001 – 2006
2006 12வது கே. குஞ்ஞிராமன் 2006 – 2011
2011 13வது 2011 – 2016
2016 14வது எம். ராஜகோபாலன் 2016 - 2021
2021 15வது பதவியில்

தேர்தல் முடிவுகள் தொகு

(±%) என்பது முந்தைய தேர்தலின் வாக்கு எண்ணிக்கையில் ஏற்பட்ட மாற்றத்தைக் குறிக்கிறது.

2021 தொகு

2021 கேரள சட்டமன்றத் தேர்தல்: திருக்கரிப்பூர்[6]
கட்சி வேட்பாளர் வாக்குகள் % ±%
இந்தியப் பொதுவுடமைக் கட்சி (மார்க்சிஸ்ட்) எம். ராஜகோபாலன் 86151 53.71  2.78
கேரள காங்கிரசு எம். பி. ஜோசப் 60014 37.41
பாரதிய ஜனதா கட்சி சிபின் டி வி 10961 6.83  0.09
இந்திய சமூக மக்களாட்சி கட்சி லியாகதலி பி 1211 0.75
இந்திய நலன் கட்சி டி. மகேசு 817 0.51
நோட்டா நோட்டா 558 0.35
வெற்றி விளிம்பு 26137 16.3  5.41
பதிவான வாக்குகள் 1,60,408 78.95  2.21

2006-2011 தொகு

ஆண்டு மொத்த வாக்காளர்கள் வாக்களித்தோர் வென்றவர் பெற்ற வாக்குகள் முக்கிய எதிராளி பெற்ற வாக்குகள் மற்றவர்கள்
2006 [7] 185121 144994 கே. குஞ்ஞிராமன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் 81050 ஏ. வி. வாமனகுமார், காங்கிரசு 57222 டி. குஞ்ஞிராமன், BJP
2011 [8] 169019 135988 கே. குஞ்ஞிராமன், மார்க்சிஸ்ட் 67871 கே. வி. கங்காதரன், காங்கிரசு 59106 டி. ராதாகிருஷ்ணன், பி.ஜே.பி

இதையும் காண்க தொகு

சான்றுகள் தொகு

  1. "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-12-04.
  2. "Members Profile". www.niyamasabha.nic.in. Archived from the original on 2024-01-05. பார்க்கப்பட்ட நாள் 2024-02-22.
  3. Changing Face of Electoral India Delimitation 2008 - Volume 1 Page 719
  4. "Local Self Governments in Assembly Constituencies of Kasaragod District".
  5. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2008-11-21. பார்க்கப்பட்ட நாள் 2014-07-19.
  6. "Trikaripur Assembly Election Results 2021".
  7. http://www.keralaassembly.org/kapoll.php4?year=2006&no=5
  8. http://www.keralaassembly.org/election/assemblypoll.php?year=2011&no=5[தொடர்பிழந்த இணைப்பு]