திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில்

திருக்களர் பாரிஜாதவனேசுவரர் கோயில் தேவாரப் பாடல் பெற்ற தலங்களில் காவிரி தென்கரைத் தலங்களில் 105ஆவது சிவத்தலமாகும்.

தேவாரம் பாடல் பெற்ற
திருக்களர் பாரிஜாதவனேசுவரர் திருக்கோயில்
பெயர்
புராண பெயர்(கள்):திருக்களர்
பெயர்:திருக்களர் பாரிஜாதவனேசுவரர் திருக்கோயில்
அமைவிடம்
ஊர்:திருக்களர்
மாவட்டம்:திருவாரூர்
மாநிலம்:தமிழ்நாடு
நாடு:இந்தியா
கோயில் தகவல்கள்
மூலவர்:பாரிஜாதவனேசுவரர்,களர் முளை நாதர்
தாயார்:அழகேஸ்வரி, இளங்கொம்பன்னாள், அமுதவல்லியம்மை
தல விருட்சம்:பாரிஜாதம்(பவளமல்லி)
தீர்த்தம்:துர்வாசர் தீர்த்தம், பிரமதீர்த்தம், (சிந்தாமணி தீர்த்தம்) ருத்திர தீர்த்தம், ஞானதீர்த்தம்
பாடல்
பாடல் வகை:தேவாரம்
பாடியவர்கள்:திருஞானசம்பந்தர்

அமைவிடம் தொகு

சம்பந்தர் பாடல் பெற்ற இத்தலம் திருவாரூர் மாவட்டத்தில் மன்னார்குடி வட்டத்தில் மன்னார்குடி - திருத்துறைப்பூண்டி சாலை வழியில் மன்னார்குடியில் இருந்து தெற்கே 21 கி.மி. தொலைவிலும், திருத்துறைப்பூண்டியில் இருந்து வடமேற்கே 10 கி.மி. தொலைவிலும் அமைந்துள்ளது.

வழிபட்டோர் தொகு

இத்தலத்தில் பராசர முனிவன், கால பைரவர், துர்வாசர் ஆகியோர் வழிபட்டனர் என்பது தொன்நம்பிக்கை.

பெயர்க்காரணம் தொகு

களர் = சபை, அரங்கம். துர்வாசருக்கு இறைவன் திருநடனக்காட்சி காட்டிய திருத்தலம்.[1]

அருகிலுள்ள ஆண்டவர் கோயில் தொகு

கோவிலூர் மடாலயத்தின் வீரகேசர ஞான தேசிக சுவாமிகளின் சமாதிக் கோயில் அருகிலுள்ளது. இது ஆண்டவர் கோயில் என்றழைக்கப்படுகிறது.

மேற்கோள்கள் தொகு

  1. தமிழகச் சிவாலயங்கள்-308; திருமகள் நிலையம்;பக்கம் 263,264

இவற்றையும் பார்க்க தொகு