திருக்கை

விக்கிப்பீடியா:பட்டியலிடல்
திருக்கை
புதைப்படிவ காலம்:Triassic–Recent
Expression error: Unexpected < operator.

Expression error: Unexpected < operator.

[1]
தெற்குத் திருக்கை (Dasyatis americana)
உயிரியல் வகைப்பாடு
திணை:
தொகுதி:
வகுப்பு:
Chondrichthyes
துணைவகுப்பு:
குருத்தெலும்புகிளையி
இலாசுமோபிராங்க்கியி Elasmobranchii
பெருவரிசை:
Batoidea
Orders

Rajiformes - common rays and skates
Pristiformes - sawfishes
Torpediniformes - electric rays

திருக்கை (Batoidea) என்பது பெரும்பாலும் தட்டை வடிவ உடலும், நீள வாலும் கொண்ட ஓர் நீர்வாழ் உயிரினம் ஆகும். இதனை திருக்கை மீன் என்று அழைப்பர். இவ் விலங்குக்கு எலும்புக் கூட்டிற்கு மாறாக சுறா மீனைப் போன்ற வளையக்கூடிய அல்லது நீட்சிதரும் (நீண்மையுடைய) குருத்தெலும்பு கொண்டது. இவற்றுள் சில மின்சாரம் பாய்ச்சி தாக்கித் தன் எதிரிகளை தடுக்கவோ, கொல்லவோ வல்லவை இவை மின்திருக்கை எனப்படுகின்றன. சில திருக்கைகள் மாந்தனைக் கூட கொல்லும் அளவுக்கு வலிமையாகத் தாக்க வல்லன. பலவகையான திருக்கைகள் பற்றி தமிழில் நெடுங்காலமாக சொல்லப்பட்டுள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன. இன்று உயிரியல் அறிஞர்கள் அண்ணளவாக 500 வகையான திருக்கைகள் உள்ளன என்று கண்டுள்ளனர்.

மீன் இனத்தை சேர்ந்த இவை குஞ்சு பொரித்து இனப்பெருக்கம் செய்பவை. கடலின் அடியில் தங்கி வாழும் தன்மை கொண்டவை. மீன் இனமாக இருந்தாலும் இவற்றுக்கு செதில்கள் இருப்பதில்லை[2]. உடல் அமைப்புடன் கூடிய அகலமான விரிந்த பகுதியின் மூலம் நீந்தி செல்லும் (உகைத்துச் செல்லும்) தன்மை கொண்டது. பிற உயிரினங்களை வேட்டையாடும் மீன் இனங்களில் ஒன்றாகக் திருக்கைகள் கருதப்படுகின்றன. திருக்கை தான் செல்ல நினைக்கும் இலக்கு திசைக்கு தடுமாறாமல் செல்லவும், தன்னை வேட்டையாடுபவர்களிடம் இருந்த தப்பிக்கவும் தனது நீண்ட வாலை பயன்படுத்துகிறது.

சமையலில் திருக்கை தொகு

திருக்கையின் சதை மற்ற மீன்களின் சதையைவிட சற்றுக் கடினமாக இருக்கும். துடுப்புகளில் இருக்கும் மெல்லிய தண்டுகளுடன் கூடிய சதையைக் குழம்பு வைத்து உண்பார்கள். அந்தச் சதையை வேகவைத்து, உதிர்த்து, அதை வைத்துப் பிட்டு செய்வார்கள்.

 
புள்ளியுள்ள திருக்கை

ஆயுதம் தொகு

திருக்கையின் வால் உடலைவிட நீளமாகவும் இருக்கும். அந்த வாலில் மிக நுண்ணிய முட்கள் ஆயிரக்கணக்கில் இருக்கும். நம் கையில் வைத்து இழுத்தால் அறுத்துவிடும். ஆகவே அதை ஓர் ஆயுதமாகப் பயன்படுத்துகிறார்கள் சிலர். கைப்பிடியில் பொருத்திவைத்து சவுக்காகப் பயன்படுத்தினார்கள் என்றும் கூறுவார்கள்[மேற்கோள் தேவை]. அதை வைத்து அடிக்கும்போது தோலையும் சதையையும் பிய்த்துக்கொண்டு வரும். இந்தச் சவுக்கைத் 'திருக்கை வார்' என்றும் சொல்வார்கள்.

மறைந்திருந்து தாக்கும் திருக்கை மீன்கள் மன்னார் வளைகுடாவில் ஆர்வத்தைத்தூண்டும் ஓர் உயிரினமாக கருதப்படுகிறது. மன்னார் வளைகுடாவில் இவை உலா வருவதைக் காணலாம்.

உடல் முழுவதையும் மணலில் புதைந்து கொண்டு, கண்கள் மட்டும் வெளியில் தெரியும் படி ஒளிந்து கொள்ளும். உணவு தேடி அருகில் வரும் உயிரினங்களை மறைந்திருந்து வேட்டையாடும். கடல் அடியில் இருந்து பெருகும் உயிரினங்களை கட்டுப்படுத்துவதில் இவற்றுக்கு முக்கிய பங்கு உள்ளது[மேற்கோள் தேவை]. மன்னார் வளைகுடாவில் முள், வவ்வால், புள்ளி ஆகிய மூன்று வகை திருக்கைகள் உள்ளன.

இவை, மிகவும் பாதுகாக்கப்பட்ட உயிரினமாக கருதப்படுகிறது. இதை பிடிக்க தடை உள்ளது. இவற்றை பிடிப்பவர்களுக்கு மூன்று முதல் ஏழு ஆண்டு சிறை தண்டனை மற்றும் 25 ஆயிரம் ரூபாய் அபராதம் உண்டு. இறால்களுக்கு விரிக்கப்படும் மடிவலைகளிலும், ஆழமான கடலில் நடக்கும் மீன்பிடியிலும் திருக்கைகள் அதிகம் பிடிபடுகின்றன[3].

திருக்கை வகைகள் தொகு

தமிழில் கூறப்பட்டுள்ள திருக்கைகள் வகைகளில் சில:

  • புள்ளியந்திருக்கை, புள்ளித்திருக்கை
  • பெருந்திருக்கை (அட்டவண்ணைத் திருக்கை, Sting Ray)
  • முள்ளந்திருக்கை
  • கள்ளத்திருக்கை
  • செந்திருக்கை
  • சட்டித்தலையன்
  • வருக்கை
  • திருக்கை வெட்டியான்
  • தப்பக்குழி, தப்பக்கூலி, தப்பக்குட்டித் திருக்கை (சிறிய வகை 15 செ.மீ அகலம் 7.5 நீளம்)
  • திருக்கையாரல்
  • சோனகத்திருக்கை
  • கருவாற்றிருக்கை
  • கோட்டான் திருக்கை (3 மீட்டர் வரை வளர வல்லது)
  • ஒட்டைத்திருக்கை
  • மணற்த்திருக்கை
  • நெய்த்திருக்கை
  • குருவித்திருக்கை
  • பஞ்சாடு திருக்கை (பசுமை நிறம் கலந்த பழுப்பு நிறம்; Myliobatis maculata)
  • மட்டத்திருக்கை
  • செம்மன் திருக்கை (கொட்டும் திருக்கை வகை, செம்பழுப்பு நிறம்; அகலம் 60 செ.மீ, வால் 200 செ.மீ; Trygon bleekeri)
  • சப்பைத் திருக்கை
  • பூவாத் திருக்கை (வாலில் உள்ள முள் நச்சுத்தன்மையுடையது)[4]
  • யானைத் திருக்கை[5]

பெருந்திருக்கை தொகு

2014 பிப்ரவரி மாதம் கோடியக்கரை கடலில் 1.75 டன் எடை கொண்ட பெருந்திருக்கையை மீனவர்கள் பிடித்துள்ளனர்[6].

மேற்கோள்கள் தொகு

  1. Stevens, J. & Last, P.R. (1998). Paxton, J.R. & Eschmeyer, W.N.. ed. Encyclopedia of Fishes. San Diego: Academic Press. பக். 60. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:0-12-547665-5. https://archive.org/details/encyclopediaoffi00unse. 
  2. tஇவ்வினம் அடங்கி இருக்கும் துணைவகுப்பின் ஆங்கில அறிவியற்பெயரில் உள்ள பிராங்க்கியி (branchii) என்னும் சொல் செதில் என்னும் பொருள் கொண்டிருப்பினும்
  3. மறைந்திருந்து தாக்கும் திருக்கை மீன்கள், தினமலர்
  4. http://www.dailythanthi.com/News/Districts/Madurai/2015/02/26012239/Rare-Danushkodi-Sea-turbot-fishermen-caught-in-a-trap.vpf
  5. "பாம்பன் மீனவர்கள் வலையில் சிக்கிய ராட்சத யானை திருக்கை மீன்". இந்து தமிழ். https://www.hindutamil.in/news/tamilnadu/902161-giant-elephant-screw-fish-caught-on-pamban-fisherman-s-net.html. பார்த்த நாள்: 15 April 2023. 
  6. தினமலர் மதுரை பதிப்பு, பக்கம் 2, வெளியீட்டு நாள்: 01-03-2014
"https://ta.wikipedia.org/w/index.php?title=திருக்கை&oldid=3695709" இலிருந்து மீள்விக்கப்பட்டது