திரேஸ் நாட்டுக் குதிரைகள்

கிரேக்கத் தொன்மங்களில் குறிப்பிடப்படும் குதிரைகள்

திரேஸ் நாட்டுக் குதிரைகள் (Mares of Diomedes, கிரேக்கம்: Διομήδους ἵπποι ) என்பவை கிரேக்கத் தொன்மவியலில் குறிப்பிடப்படும் மனிதனை உண்ணும் குதிரைகளைக் குறிப்பிடுவதாகும். இவை எரிஸ் மற்றும் சிரீனின் மகனும் கருங்கடலின் கரையில் வாழ்ந்த திரேசின் மன்னரான தயோமிடிசின் குதிரைகள் ஆகும். பேரரசர் அலெக்சாந்தரின் குதிரையான புசெபெலஸ் இந்தக் குதிரைகளின் வழித்தோன்றல் என கூறப்பட்டது.

திரேஸ் நாட்டுக் குதிரைகள்
திரேஸ் நாட்டுக் குதிரைகளைக் கைப்பற்றுவதற்கு முன் ஹெராக்கிள்ஸ். ரோமன் மொசைக் கல், கி.பி 3 ஆம் நூற்றாண்டு
குழுபழங்கதை உயிரினம்
உப குழுமனிதரை உண்ணும் குதிரைகள்
தொன்மவியல்கிரேக்கத் தொன்மவியல்
நாடுகிரேக்கம்
பிரதேசம்திரேசு

தொன்மவியல் தொகு

எர்க்குலிசின் பன்னிரு வேலைகளில் எட்டாவது வேலையாகவும், கிரேக்கத்தின் பெலோபொன்னேசியன் பிராந்தியத்துக்கு அப்பால் செய்யப்பட்ட இரண்டாவது வேலையாக வகைப்படுத்தப்பட்ட வேலையாக இக்குதிரைகளை ஹெராக்கிள்ஸ் பிடித்துவர யூரிஸ்தியஸ் மன்னரால் அனுப்பப்பட்டார். இக்குதிரைகளை திரேஸ் நாட்டின் கொடிய மன்னான தயோமிடிஸ் மனித உடல்களைக் கிழித்து உண்ணப் பழக்கியிருந்தார். திரேஸ் பிரதேசத்துக் கடற்கரை அருகில், கப்பலுடைந்து உயிர் தப்பி வரும் மாலுமிகளையும், தன்னை நாடிவரும் விவரம் தெரியாத மக்களையும் பிடித்து இந்தக் குதிரைகளுக்கு உணவாக அளித்து மகிழ்ந்தார். [1] தொன்மக் கதையின் சில பதிப்புகளின்படி, இந்தக் குதிரையின் மூச்சில் தீச்சுவாலைகள் வெளிப்பட்டன. [2] . இந்தப் பயங்கரக் குதிரைகளை திரேசின் மறைந்துபோன நகரமான டிரிடாவில் ஒரு வெண்கல அழி உள்ள காப்பரணில் தயோமிடிஸ் இவைகளை இருப்புச் சங்கிலிகளில் கட்டி வைத்திருந்தார். இந்தக் குதிரைகளானது போடர்கோஸ் (ஸ்விஃப்ட்), லம்பன் (பிரகாசிக்கும்), சாந்தோஸ் (மஞ்சள்), டீனோஸ் (அல்லது டீனஸ்) எனும் நான்கு குதிரைகளாகும்.

ஒரு பதிப்பின்படி, இக்கொடிய குதிரைகளைப் பிடிக்க ஹெராக்கிள்ஸ் தன்னுடன் பல தன்னார்வலர்களையும் அழைத்துச் சென்றதாக குறிப்படுகிறது [3] . ஹெராக்கிள்சும் அவரது தோழர்களும் தயோமெடிசின் காவலர்களை வென்று, குதிரைகளை அவற்றைக் கட்டபட்ட சங்கிலிகளை உடைத்து, கடற்கரைக்கு விரட்டிச் சென்றார். இந்தக் குதிரைகள் மனிதர்களை உண்ணக்கூடியவை என்றும் அடக்க இயலாதவை என்பதை அறியாத ஹெராக்கிள்ஸ், தயோமெடிசுடன் சண்டையிட புறப்பட்டபோது, தனக்கு விருப்பமான தோழரான அப்டெரசின் பொறுப்பில் இவைகளை விட்டுவிட்டுச் சென்றார். அவர் திரும்பி வந்ததபோது, அந்த இளைஞனை குதிரைகள் சாப்பிட்டுவிட்டதை அறிந்தார். இதனால் இதற்கு பழிவாங்கும் விதமாக, ஹெராக்கிள்ஸ் தயோமெடிசை அவரது சொந்த குதிரைகளுக்கே உணவாக்கினார்.[1] .

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 "Myths and Legends of Ancient Greece and Rome". www.gutenberg.org. பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  2. "Mares of Diomedes". www.greekmythology.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2020-03-24.
  3. . 

வெளி இணைப்புகள் தொகு