திரைட்டிகேல்

திரைட்டிகேல்
உயிரியல் வகைப்பாடு
திணை: தாவரம்
தரப்படுத்தப்படாத: பூக்கும் தாவரம்
தரப்படுத்தப்படாத: ஒருவித்திலையி
வரிசை: Poales
குடும்பம்: Poaceae
துணைக்குடும்பம்: Pooideae
சிற்றினம்: Triticeae
பேரினம்: கோதுமை
இனம்: T. polonicum
இருசொற் பெயரீடு
Triticum polonicum
L.

திரைட்டிகேல் என்பது ஒரு தானியம் இதைப் பொலிஸ் கோதுமை (Polish Wheat) என்றும் அழைப்பார்கள். இது உலக மக்கள் பசியைப் போக்கவந்த புதிய தானியம்.இது பழங்கால தானியம் அல்ல.மனிதனால் உருவாக்கப்பட்ட புத்தம் புது தானியம்.மற்ற தானியங்களில் உருவான கலப்பினம் போன்றதல்ல இந்தத் தானியம்.

பொதுவாக ஒரே சிற்றினத்தில் உள்ள இரண்டு தாவரங்களைக் கொண்டு கலப்பினங்களை உருவாக்குவார்கள். ஆனால் இந்த திரைட்டிகேல் இரண்டு வேறுபட்ட தானிய இனங்களைக் கலந்து உருவாக்கப்பட்ட கலப்பினமாகும்.

தோற்றம் தொகு

கோதுமையும் ராய் என்ற இரு வேறு தனித்தனி தானியங்கள். இவை இரு வேறு இனத்தைச் சேர்ந்தவை.இந்த இரண்டு தானியப் பயிர்களைக் கலப்பு செய்து உருவாக்கப்பட்டதுதான் இந்தத் திரைட்டிகேல். டுரம் கோதுமை (Durum Wheat Triticum aestiuam)யையும் ராய்(Scale cereale)யையும் செயற்கை முறையில் ஆய்வுக் கூடத்தில் 19 ஆம் நூற்றாண்டின் இறுதியில் கலப்பு செய்யப்பட்டது. இந்தக் கலப்பில் கோதுமை பெண்ணாகவும், ரை ஆணாகவும் இருந்தன. இப்படி கலந்து உருவான தானியத்துக்குத் திரைட்டிகேல் என்று பெயர் வைத்தனர்.

வரலாறு தொகு

கோதுமையின் தாவர இனப்பெயரான திரைட்டிகம் (Triticum) மற்றும் ராயின் தாவர இனப்பெயரான சிகேல் (Secale) ஆகிய இரண்டு பெயர்களை இணைத்து அதாவது (Triticum + Secale) திரைட்டிகேல் (Triticale) என்று பெயர் வைத்தனர். இப்படி உருவாக்கப்பட்ட இந்த தானியம் முளைப்புத் திறனற்ற மலட்டு விதையாகும். இதனை உருவாக்கியம் ஸ்காட்லாந்து மற்றும் ஸ்வீடன் நாட்டில்தான். மேலும் திரட்டிகேல் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது இதன் பயனாக முளைப்புத்திறன் கொண்ட விதைகள் கண்டுபிடிக்கப்பட்டன.1875-ஆம் ஆண்டு முதல் பயிர் செய்யப்பட்டன.1930வரை திரட்டிகேல் முழு வெற்றிபெற்ற தானியமாக மாறவில்லை.30ஆண்டுகள் மேலும் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டன திரைட்டிகேல்லில் சிறந்த தானியங்களை இவற்றுக்குள்ளே கலப்பு செய்யப்பட்டன.இந்த இரண்டாவது கலப்பின் வழியாக மிகச்சிறந்த தானியங்கள் கிடைத்தன.1969-இல் தான் திரட்டிகேல் வியாபார பயிராக மாறியது.

பண்புகள் தொகு

இந்தத் திரட்டிகேல் தானியமானது தனது பெற்றோர்களான கோதுமை, ராய் போன்றே இருந்தது.ஆனால் கோதுமையைவிட நீளமாகவும், ராயைவிட உருளையாகவும் உள்ளது.இத்தானியத்தில் கோதுமை,ராயைவிட புரோட்டின் கூடுதலாக உள்ளது. கோதுமை,ராயைவிட கூடுதலாக விளைச்சல் கொடுக்கிறது.வறட்சியான,மண்வளம் குறைந்த பகுதிகளிலும் நன்கு விளைகிறது.

உசாத்துணை தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரைட்டிகேல்&oldid=2031598" இலிருந்து மீள்விக்கப்பட்டது