திறந்தவுலகம்

திறந்தவுலகம் என்பது கணிப்பொறி விளையாட்டின் ஒரு வகையாகும். இதில் கதைத்தலைவன் மெய்நிகர் உலகம் முழுவதும் சுற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டிருக்கும். இருப்பினும் இதில் தொழில்நுட்ப ரீதியில் சில கட்டுப்பாடுகள் உள்ளன. அதாவது கதைத்தலைவனால் ஒரு கட்டதிற்கு மேல் செல்லவியலாதது போன்றவையாகும். இவ்வகை விளையாட்டின் முதன்மை குறிக்கோளானது மெய்நிகர் உலகில் நாயகனை விட்டு அவர் எடுக்கும் முடிவுகளை விளையாடுபவரை எடுக்கவிடுவதில் உள்ளது. இதில் முடிவு என்பது பெரும்பாலும் இருக்காது, கதை முடிந்தபின்னும் நம்மால் விளையாட முடியும். கதையின் முடிவு விளையாடுபவரின் கைகளில் இருக்கலாம், இல்லாமலும் இருக்கலாம்.

விளையாட்டு முறை தொகு

திறந்தவுலகத்தில் வரும் சுற்றுகள் பல வழிகளில் சென்றடையக்கூடியதாக இருக்கும். மெய்நிகர் உலகம் சில சமயங்களில் உண்மையான நகரையே மையமாகக்கொண்டு உருவாக்கப்படும். எடுத்துக்கட்டாக அசாசின்சு கிரீடு போன்ற விளையாட்டுகளில் உண்மையான நகரங்களே இடம்பெறும். இவ்வகை விளையாட்டுகளின் பெரிய சிக்கல் என்னவெனில் விளையாடுபவர் பல சமயங்களில் விளையாட்டு வடிவமைப்பாளர் எண்ணிப்பார்க்காத பலவற்றை செய்வார் என்பதாம். பல விளையாட்டுகள் விளையாட்டை மேலும் சிறப்பூட்ட துணை வேலைகளை செய்யத்தூண்டும். கதை நாயகனுக்குப் பொதுவாக எண்ணிலடங்கா அளவில் தொடர வாய்ப்பு அளிக்கப்படும்.

இருபத்தோராம் நூற்றாண்டில் திறந்தவுலக விளையாட்டுகள் தொகு

கிராண்ட் தெஃப்ட் ஆட்டோ போன்ற விளையாட்டுகள் மிகப்பெரிய கலாசார தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. அதன் முன்னாள் விளையாட்டை விட ஒவ்வொன்றும் அளவிலும் தரத்திலும் உயர்கின்றன. கிராண்டு தெஃப்ட் ஆட்டோவை தொடர்ந்து பல விளையாட்டுகள் வெளிவந்தன. அசாசின்சு கிரீடு போன்ற விளையாட்டுகள் சரித்திர கால நியூ யார்க், உரோமாபுரி, பாரிசு, இலண்டன் போன்ற நகர்களை நினைவுகூரும்.

முதன்மைத்துவம் தொகு

இன்று திறந்தவுலக விளையாட்டுகளுக்கு வரவேற்பு மிகப்பெரிய அளவில் உள்ளது, ஆகவே இவ்வகை விளையாட்டுகள் கணிப்பொறி விளையாட்டுகளில் மிகவும் முதன்மையான வகையாகப் பார்க்கப்படுகிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறந்தவுலகம்&oldid=2083884" இலிருந்து மீள்விக்கப்பட்டது