திறந்த சக்கர தானுந்து

திறந்த சக்கர தானுந்து அல்லது பார்முலா கார் என்பது தானுந்தின் உடல் அமைப்பிற்கு வெளியே சக்கரங்களைக் கொண்டதும், பெரும்பாலும் ஒரு இருக்கையைக் கொண்டதுமான கார்களைக் குறிக்கிறது. இந்த வகை திறந்த சக்கர தானுந்துகள் பொதுவாக பந்தயத்திற்காக பிரத்தியேகமாக கட்டமைக்கப்படுகின்றன.

2010 மெர்சிடிஸ் ஜி.பி. பார்முலா 1 தானுந்து.

ஓட்டுதல் தொகு

திறந்த சக்கர தானுந்து பந்தயம்தான் உலகிலேயே வேகமான தானுந்து பந்தயமாக உள்ளது. இந்த வகை பார்முலா 1 கார்கள் ஒரு மணி நேரத்திற்கு 360 கிலோமீட்டர் (220 மைல்கள்) வரை செல்ல முடியும். இந்த வகையில் பார்முலா 1, பி.எம்.டபிள்யு வில்லியம்ஸ் குழு மணிநேரத்திற்கு 369.9 கிலோமீட்டர் (229.8 மைல்கள்) ஒரு உயர் வேகத்தில் 2004 இத்தாலிய கிராண்ட் பிரீ போட்டித் தொடரில் தானுந்தைச் செலுத்தி உலக சாதனை படைத்துள்ளது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=திறந்த_சக்கர_தானுந்து&oldid=2757607" இலிருந்து மீள்விக்கப்பட்டது