தி கார்டியன் வீக்லீ

தி கார்டியன் வீக்லீ (The Guardian Weekly) இலண்டனிலிருந்து வெளிவருகின்ற, உலக அளவிலான ஆங்கில இதழாகும். இது உலகின் மிகப்பழமையான இதழ்களில் ஒன்றாகும். இதன் வாசகர்கள் 170க்கு மேற்பட்ட நாடுகளில் உள்ளனர். [1]

செய்திகள் தொகு

இவ்விதழுக்கான செய்திகள் இதன் சகோதர இதழ்களான தி கார்டியன், தி அப்சர்வர் ஆகியவற்றிலிருந்து எடுத்தாளப்படுகின்றன. இவ்விதழ்கள் அனைத்தும் கார்டியன் ஊடகப் பிரிவிற்குச் சொந்தமான டிரினிட்டி மிர்ரரால் பதிப்பிக்கப்படுகின்றன. இவ்விதழில் தி வாஷிங்டன் போஸ்ட் இதழில் வெளியாகும் கட்டுரையினையும் காணலாம்.

உலக அளவிலான வாசகர்கள் தொகு

பிரிட்டன், ஆஸ்திரேலியா, அமெரிக்கா மற்றும் கனடாவில் இவ்விதழுக்கான சந்தை அதிகம் உள்ளது. நியூசிலாந்து, பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியிலும் இதன் வாசகர்கள் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். [2]

குறிப்பிடத்தக்க வாசகர் தொகு

இவ்விதழை வாசிப்போரில் பல உலகத்தலைவர்கள் அடங்குவர். சிறைச்சாலையில் இருந்தபோது இவ்விதழை வாசித்த நெல்சன் மண்டேலா அகண்ட உலகிற்கான ஜன்னல் என்று இதற்குப் புகழாரம் சூட்டினார். [3]

இணைப்புகள் தொகு

சான்றுகள் தொகு

  1. staff, Guardian Weekly (2016-12-20). "A short history of the Guardian Weekly: celebrating our success" (in en-GB). The Guardian. https://www.theguardian.com/news/2016/dec/20/guardian-weekly-newspaper-history-editors-global-readers. 
  2. "Put yourself on the Guardian Weekly map". the Guardian. பார்க்கப்பட்ட நாள் 2017-03-01.
  3. "About the Guardian Weekly". The Guardian Weekly (London). https://www.theguardian.com/weekly/subscribe/about-guardian-weekly. பார்த்த நாள்: 2013-09-05. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தி_கார்டியன்_வீக்லீ&oldid=2475127" இலிருந்து மீள்விக்கப்பட்டது