துடுப்பு வால் கரிச்சான்

ஒரு பறவை இனம்

துடுப்பு வால் கரிச்சான் (greater racket-tailed drongo) என்பது நடுத்தர அளவிலான ஒரு ஆசிய பறவை ஆகும். இது நீண்ட துடுப்பு போன்ற வாலைக் கொண்டுள்ளதால் இப்பெயரைப் பெற்றது. இவை பெரும்பாலும் மலையை ஒட்டிள்ள காடுகளில் காணப்படும். இவை எப்போதும் சத்தம் எழுப்பிக்கொண்டே இருக்கக்கூடியன. மேலும் இது ராஜாளி, வல்லூறு போன்ற பறவைகளைப் போல ஒலியெழுப்பும் ஒப்புப்போலிப் பண்பையும் கொண்டது. இது பூச்சிகளை வேட்டையாடி உண்பதால், இயற்கை பூச்சிக் கட்டுப்படுத்தியாக வேளாண்மைக்கு உதவுகிறது.[2]

துடுப்பு வால் கரிச்சான்
Greater racket-tailed drongo
உயிரியல் வகைப்பாடு e
திணை:
விலங்கு
தொகுதி:
வரிசை:
குடும்பம்:
பேரினம்:
இனம்:
D. paradiseus
இருசொற் பெயரீடு
Dicrurus paradiseus
(Linnaeus, 1766)
வேறு பெயர்கள்
  • Cuculus pardiseus Linnaeus, 1766
  • Dissemurus paradiseus (Linnaeus, 1766)
  • Dissemuroides paradiseus (Linnaeus, 1766)
  • Edolius grandis Gould, 1836

வகைப்பாடு தொகு

துடுப்பு வால் கரிச்சானில் 13 துணையினங்கள் அங்கீகரிக்கபட்டுள்ளன:[3]

விளக்கம் தொகு

இது பெரும்பாலும் ஆசியாவில் காணப்படுகிறது. இது துடுப்புபோன்ற தனித்துவமான வாலைக் கொண்டுள்ளது. இதன் முன் தலையில் அலகுக்கு அருகில் கிரிடம் போன்று இறகுகள் தூக்கலாகக் காணப்படும். இப்பறவைகளில் ஆண், பெண் என இரு பறவைகளுக்கு இடையில் பெரியதாக வேறுபாடு ஏதும் இல்லை. தென்னிந்தியாவில், முக்கியமாக மேற்குத்தொடர்ச்சி மலைகளை ஒட்டிய காடுகளில் காணப்படுகின்றன.

தென்னிந்தியாவில் காணப்படும் துணையினமான பாரடைசியஸ் துடுப்பு வால் கரிச்சானைவிடவிட வட இந்தியாவில் காணப்படும் துணையினத்தின் (D. p. grandis) தலைக் கொண்டை பெரியதாக இருப்பதோடு துடுப்பு வாலும் சற்று நீளமாக இருக்கும். இலங்கையில் காணப்படும் துணையினத்தின் (D. p. ceylonicus) தலைக் கொண்டை மிக நுட்பமானது. துடுப்பு வாலும் அளவில் சிறியது.[4]

நடத்தை தொகு

இவை பூச்சிகளையும், பூந்தேனையும், பழங்களையும் உண்ணக்கூடியது இதன் கால்கள் மிகவும் சிறியவை என்பதால், எப்போதும் மரத்தின் உச்சியில் இருக்கும் சிறிய கிளையில் அமர்ந்து இருக்கும். துணிவு மிக்கப்பறவையான இது தன் எல்லைக்குள் வரும் பறவைகளை கொத்தி விரட்டும்.

மேற்கோள்கள் தொகு

  1. BirdLife International. 2016. Dicrurus paradiseus. The IUCN Red List of Threatened Species 2016: e.T103711122A94102694. https://dx.doi.org/10.2305/IUCN.UK.2016-3.RLTS.T103711122A94102694.en. Downloaded on 11 December 2018.
  2. ராதிகா ராமசாமி (23 மார்ச் 2019). "பல குரல் பறவை". கட்டுரை. இந்து தமிழ். பார்க்கப்பட்ட நாள் 29 மார்ச் 2019. {{cite web}}: Check date values in: |accessdate= and |date= (help)
  3. Gill, Frank; Donsker, David, eds. (2018). "Orioles, drongos, fantails". World Bird List Version 8.1. International Ornithologists' Union. பார்க்கப்பட்ட நாள் 29 March 2018.
  4. க. ரத்தினம், தென்னிந்தியப் பறவைகள். சென்னை: தமிழ்நாடு பாடநூல் நிறுவனம். 1973. பக். 361. 

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துடுப்பு_வால்_கரிச்சான்&oldid=3804136" இலிருந்து மீள்விக்கப்பட்டது