துத்தநாகம்-துத்தநாக ஆக்சைடு சுழற்சி

துத்தநாகம்-துத்தநாக ஆக்சைடு சுழற்சி (zinc–zinc oxide cycle) என்பது ஐதரசனை [1] உற்பத்தி செய்கின்ற ஒரு வெப்பவேதியியல் சுழற்சி வினையாகும். துத்தநாகமும் துத்தநாக ஆக்சைடும் இவ்வினையில் பயன்படுத்தப்படுகின்றன [2] இவ்வினை இரண்டு படிநிலைகளில் நிகழ்கிறது. இச்சுழற்சியில் ஐதரசனின் உற்பத்தித் திறன் 40 சதவீதத்திற்கு அருகில் உள்ளது [3].

செயல்முறை விளக்கம் தொகு

தண்ணீர் மூலக்கூறை பிளக்கும் இரண்டு இரசாயன வினைகளை Zn/ZnO சுழற்சி உள்ளடக்கியுள்ளது. இவ்வினைகளில் ஒடுக்க-ஏற்ற வேதிவினைகள் பயன்படுத்தப்படுகின்றன:[4].

  • பிரிகை வினை: ZnO → Zn + 1/2 O2,
  • நீராற்பகுப்பு: Zn + H2O → ZnO + H2

சூரிய சக்தியை மையமாகக் கொண்ட முதல் வினையில் 900 பாகை செல்சியசு வெப்பநிலையில் துத்தநாக ஆக்சைடு துத்தநாகமாகவும் ஆக்சிசனாகவும் பிரிகையடைகிறது. இவ்வினை ஒரு வெப்பங்கொள் வினையாகும். இரண்டாவது வினையில் துத்தநாகம் 427 ° பாகை செல்சியசு வெப்பநிலையில் தண்ணீருடன் வினைபுரிந்து ஐதரசனையும் துத்தநாக ஆக்சைடையும் உற்பத்தி செய்கிறது.

சூரிய வெப்ப ஆற்றல் நிலையை அறிவதற்காக சூரிய சக்தி கோபுரமும் சூரிய வெப்ப ஆற்றலைப் பெறுவதற்கு சூரிய இலக்கு நிலைப்படுத்திகளும் பயன்படுத்தப்படுகின்றன.

இவற்றையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Project PD10
  2. Solar Hydrogen Production from a ZnO/Zn Thermo-chemical Cycle பரணிடப்பட்டது சூலை 24, 2008 at the வந்தவழி இயந்திரம்
  3. Novel Method for solar hydrogen generation பரணிடப்பட்டது பெப்பிரவரி 5, 2009 at the வந்தவழி இயந்திரம்
  4. "Solar thermal ZnO-decomposition". Archived from the original on 2006-05-05. பார்க்கப்பட்ட நாள் 2006-05-05.

புற இணைப்புகள் தொகு