துளு பிராமணர்கள்

துளு பிராமணர்கள் அல்லது துளுவ பிராமணர்கள் துளு நாட்டில் வசிப்பவர்களாவர். இது கேரளா வரை பரவியிருக்கும் பரசுராம சேத்திரத்தின் ஒரு பகுதியாக கருதப்படுகிறது. இவர்களின் இருப்பை கல்வெட்டுகளின் அடிப்படையில் துல்லியமாகவும் விஞ்ஞான ரீதியாகவும் விளக்க முடியும். ஸ்தானிக துளு பிராமணர்கள் அல்லது துளு பிராமணர்கள் என்றும் அழைக்கப்படும் இவர்கள் துளு நாட்டின் அசல் குடியிருப்பாளர்கள் ஆவர். சில அறிஞர்களின் கூற்றுப்படி, இவர்கள் 5ஆம் நூற்றாண்டு முதல் தென்னிந்தியாவில் வசித்து வருகின்றனர். பின்னர் இவர்கள் கொல்லூரிலிருந்து கப்பினாலேவுக்கும் பின்னர் புட்டூருக்கும் குடிபெயர்ந்தார்கள்.

இவர்கள் பல்வேறு பெயர்களில் வகைப்படுத்தப்படுகிறார்கள். [1] புத்திதி, புத்திவந்தனா, பசீடகம், ஐயர், துளு பிராமணர், சைனிகர், தைனிகர், பந்தபந்துலு, அன்னீர் மற்றும் பானீர்.

துளு நாட்டின் பிராமணர்களின் மீதமுள்ள துணைப்பிரிவுகள் இந்தியாவின் பிற பகுதிகளிலிருந்து குடியேறினார்கள். முதல் இடம்பெயர்வு: கி.பி 9 ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் இருந்தது.

இரண்டாவது இடம்பெயர்வு: கி.பி 11 ஆம் நூற்றாண்டில் நடந்தது.

குறிப்புகள் தொகு

  1. "Tulunadu" – via Internet Archive.

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=துளு_பிராமணர்கள்&oldid=3025654" இலிருந்து மீள்விக்கப்பட்டது