தூப்பி மக்கள்

தூப்பி மக்கள் பிரேசில் நாட்டின் பழங்குடி மக்கள் இனத்தவர்களின் ஓரினத்தவர். இவர்களுடன் இனமான மற்றொரு இனம் குவாரனி மக்கள் ஆகும். இவர்கள் முதலில் அமேசான் மழைக்காடுகளில் (பொழிகளில்) வாழ்ந்தனர், பின்னர் தெற்காக நகர்ந்து அட்லாண்டிக் பெருங்கடல் கரைப் பகுதிகளில் வாழ்கின்றனர். 16 ஆவது நூற்றாண்டு முதல் மற்ற பழங்குடிகளைப் போல் தூப்பி மக்களும், குடியேறிய காலனி ஆட்சியாளர்களான போர்த்துகீசியர், எசுப்பானியர்களால் அடிமைப்படுத்தப்பட்டும், அவர்களோடு மணம் செய்து சேர்க்கப்பட்டும், கொன்று அழிக்கப்பட்டும் ஏறத்தாழ இன்று மிக அருகிவிட்ட ஓரினம். இவர்கள் மன நிறைவுடன் வாழும் சோம்பேறிகள்,இவர்களுடைய வாழு பயனற்ற ஒன்று என போர்த்துகீசியர்கள் நினைத்ததால் இவர்களை தங்களது அடிமகளாக ஆக்கிக்கொண்டனர். இன்று ஒரு சில ஒதுக்கப்பட்ட இடங்களில் இவர்கள் வாழ்கிறார்கள். பிரேசிலின் தென் பகுதிகளில் இவர்கள் தாழ்த்தப்பட்ட மக்களில் ஓரினமாக வாழ்கிறார்கள். இவர்கள் மொழியாகிய தூப்பி மொழி தென் அமெரிக்காவின் மொழிகளில் ஒன்று.

A Tupi woman

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தூப்பி_மக்கள்&oldid=1780842" இலிருந்து மீள்விக்கப்பட்டது