தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம்

விக்கிப்பீடியா:பட்டியலிடல்

தென்னிந்திய திரைப்பட ஒளிப்பதிவாளர்கள் சங்கம் என்பது திரைத்துறையில் ஒளிப்பதிவாளர்களுக்கானச் சங்கமாகும். இச்சங்கம் ஒளிப்பதிவாளர்களின் சம்பளப் பிரட்சனை, ஒளிப்பதிவாளர்களின் கோரிக்கைகளை கொண்டு செல்வது போன்றவற்றிக்காகவும், திரைத்துறையினருக்கு விருதுகள் வழங்கவும் ஏற்படுத்தப்பட்டதாகும். தமிழ், தெலுங்கு, மலையாளம் போன்ற திரைத்துறையினரில் இருக்கும் ஒளிப்பதிவாளர்கள் இங்கு உறுப்பினர்களாக இருக்கின்றார்கள்.

சங்கத்தின் தோற்றம் தொகு

இச்சங்கம் நவம்பர் 28, 1972ல் தொடங்கப்பட்டது. இதற்கு பி.என்.சுந்தரம், ஏ.வின்சென்ட், மார்க்கஸ் பாட்லே ஆகியோர் உதவியுள்ளார்கள்.

சங்கத்தில் சேர தகுதிகள் தொகு

தற்போது சங்கத்தில் சேருவதற்கு +2 படிப்புத் தகுதியும், ஒரு ஒளிப்பதிவாளரிடம் உதவியாளராக பணியாற்றிய அனுபவமும், அவ்வொளிப்பதிவாளரிடம் சான்றிதழும் அவசியமாகும்.[1]

விருதுகள் தொகு

இச்சங்கத்தின் முலம் சிறந்த படங்கள், சிறந்த நடிக நடிகைகள் தேர்ந்தெடுக்கப் பெற்று விருதுகள் தரப்படுகின்றன.[2] தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி திரைப்படங்களுக்கு விருதுகள் தரப்படுகின்றன.

இவற்றையும் காண்க தொகு

ஆதாரங்கள் தொகு

  1. சினிமா எக்ஸ்பிரஸ் செப்டம்பர் 1, 2014 பக்கம் 50
  2. http://www.dailythanthi.com/News/State/2015/01/02014941/In-MalaysiaStarArts-festival.vpf சினிமா ஒளிப்பதிவாளர்கள் சங்கம் சார்பில் மலேசியாவில், நட்சத்திர கலைவிழா 9, 10–ந் தேதிகளில் நடக்கிறது - தினத் தந்தி

வெளி இணைப்புகள் தொகு