தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள்

தெருவோரக் குழந்தைகளுக்கான விளையாட்டுப் போட்டிகள் (Carnival in Rio de Janeiro) என்பது பிரேசில் நாட்டில அமைந்துள்ள ரியோடி செனிரோ நகரில் ஆண்டுதோறும் தெருவோரம் வாழும் குழந்தைகளைத் தேர்வுசெய்து அவர்களுக்கு விளையாட்டுப் போட்டிகள் நடத்தி, பரிசு வழங்கி அவர்களைக் கவுரவிக்கும் நிகழ்ச்சி ஆகும். இந்நிகழ்வு 2010 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்காவின் டர்பன் நகரில் முதன் முதலில் நடைபெற்றது.[1] இந்த விளையாட்டுப் போட்டியில் பிரேசில், தென்னாப்பிரிக்கா, நிகரகுவா, உக்ரைன், இந்தியா, பிலிபைன்சு, தான்சானியா போன்ற நாட்டுக் குழந்தைகள் பங்குப் பெறுகிறார்கள். இவர்களின் வயது வரம்பு 14 முதல் 16 ஆக இருக்கவேண்டும். ஒவ்வொரு நாட்டிலிருந்தும் 3 பெண் குழந்தைகள் உட்பட மொத்தம் 9 பேர் கலந்துகொள்ளலாம். இவர்கள் அனைவருமே குடும்பம் அற்றவர்களாக இருக்கவேண்டும் என்பது விதி.

இந்தியா தொகு

2016 ஆம் ஆண்டு நடந்த இந்த விளையாட்டுப் போட்டியில் தமிழ்நாடு மாநிலத்தின் தலைநகரான சென்னையைச் சேர்ந்த ஹெப்சிபா என்ற பெண் 100 மீட்டர் ஓட்டப்போட்டியிலும், மேலும் இரண்டு போட்டிகளிலும் பரிசு பெற்றார்.[2][3]

மேற்கோள்கள் தொகு