தேசிய வரலாற்று அடையாளம்

தேசிய வரலாற்று அடையாளம் (National Historic Landmark, NHL) தேசிய முக்கியத்துவம் வாய்ந்த கட்டிடம், களம், கட்டமைப்பு, பொருள் அல்லது மாவட்டம் ஆகும். இவற்றை ஐக்கிய அமெரிக்காவின் கூட்டரசு அடையாளப்படுத்துகின்றது. மிகவும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையே தேசிய வரலாற்று அடையாளமாக ஏற்கின்றது. தேசிய வரலாற்று இடங்கள் பதிகையில் இடம்பெற்றுள்ள 80,000க்கும் கூடுதலான இடங்களில் 2,430 மட்டுமே தேசிய வரலாற்று அடையாளமாக ஏற்கப்பட்டுள்ளன.

யுஎஸ்எஸ் கான்ஸ்டிடியூசன்
பிராங்க் லாய்டு ரைட்டின் டாலியெசின் ஓர் தேசிய வரலாற்று அடையாளமாகும்.
மொரோக்கோவின் டான்ஜியர்சில் உள்ள அமெரிக்கத் தூதரகக் கட்டிடம், வெளிநாடொன்றில் உள்ள தேசிய வரலாற்று அடையாளமாகும்.
அரிசோனாவின் விண்டோ ராக்கில் உள்ள நவகோ நாட்டின் மன்றக் கட்டிடம்.
மொகோங்க் மலை மாளிகை, சவாங்குங்க் முகட்டிலுள்ள பொழுதுபோக்கிட தங்குவிடுதி; டென் ஹாக்கில் நிரந்தர நடுவர் நீதிமன்றம் அமையக் காரணமாகவிருந்த 1895-1916 மாநாடு இங்குதான் நடைபெற்றது.
டீலே பிளாசா, டாலஸ் டெக்சஸ் உள்ள அடிக்கல் தேசிய வரலாற்று அடையாளங்களில் ஒன்றாகும்.

தேசிய வரலாற்று அடையாள மாவட்டம் (National Historic Landmark District, NHLD) தேசிய வரலாற்று அடையாளமாக ஏற்கப்பட்டுள்ள ஒர் வரலாற்று மாவட்டமாகும். இதில் கட்டிடங்கள், கட்டமைப்புக்கள், களங்கள், பொருட்கள் போன்ற பங்களிக்கும் சொத்துக்களைத் தவிர பங்களிக்காத சொத்துக்களும் இருக்கலாம்.

வரலாறு தொகு

அக்டோபர் 9, 1960இல் உள்துறை அமைச்சர் பிரெட் ஆண்ட்ரூ சீட்டன் 92 சொத்துக்களை தேசிய வரலாற்று அடையாளங்களாக அறிவித்தார். இவற்றில் முதலாவதாக அயோவாவின் சியோக்சு நகரத்திலுள்ள செர்ஜண்ட் பிளாய்டு கல்லறையும் நினைவகமும் அந்தாண்டு 30, சூனில் நியமிக்கப்பட்டது; ஆனால் பல காரணங்களுக்காக அலுவல்முறையான அறிவிப்பு தள்ளிப்போயிற்று.

ஐக்கிய அமெரிக்கக் கூட்டரசின் உள்துறை தேசிய வரலாற்று அடையாளமாக அறிவிப்பதற்கான அடிப்படைகளாக இவற்றை பட்டியலிட்டுள்ளது:

  • வரலாற்று சிறப்புமிக்க நிகழ்வுகள் நடந்தக் களங்கள்;
  • சீர்மிகு நபர்கள் வாழ்ந்த அல்லது பணியாற்றிய இடங்கள்;
  • நாட்டை முன்னடத்திய கொள்கைகளை குறிக்கும் திருவோவியங்கள் (சின்னங்கள்);
  • வடிவமைப்பு அல்லது கட்டுமானத்திற்கான மிகச்சிறந்த காட்டுகள்;
  • வாழும் முறையொன்றை குறிக்கும் இடங்கள்;
  • தகவல் வெளியிடும் தொல்பொருளியல் களங்கள்.

மேற்சான்றுகள் தொகு


வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேசிய_வரலாற்று_அடையாளம்&oldid=2059721" இலிருந்து மீள்விக்கப்பட்டது