தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம்

தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறை அல்லது செயற்கை தேர்வு (Selective breeding) அல்லது தேர்ந்தெடுத்த இனப்பெருக்கம் என்பது விலங்குகள், தாவரங்கள் ஆகியவற்றின் குறிப்பிட்ட தோற்ற அமைப்புக்குரிய பண்புக்கூறுகளைத் தேர்ந்தெடுத்து அவற்றின் மரபுப்பண்புகளோடு இணைத்து மறு உருவாக்கம் செய்ய மனிதர்கள் பயன்படுத்தப்படும் ஓர் இனப்பெருக்கச் செயல்முறையாகும். பொதுவாக வளர்ப்புப் விலங்குகள் எனப்படும் கால்நடைக்கும், தாவர வளர்ப்புக்கும் விலங்குகள் அல்லது தாவரங்களின், ஆண், பெண் இரண்டையும் ஒன்றாக வளர்ப்பதன் மூலம் அவை தானாகவே பாலியல் இனப்பெருக்கம் செய்து வழித்தோன்றல்களை உருவாக்கும். இதற்காக வீட்டில் வளர்க்கப்படும் விலங்குகள் வளர்ப்பு விலங்குகள் எனப்படும். இதில் தொழில் முறை வளர்ப்பாளர்கள் ஈடுபடுவார்கள். அதேபோல, தொழில்முறை வளர்ப்பாளர்களால் வளர்க்கப்படும் தாவர இனங்கள் வீரிய ஒட்டு வகைகள் எனப்படும். பொதுவாக, இவை தாவரப் பல்வகைமை, பயிரிடு வகைகள் என அழைக்கப்படுகின்றன.

பெல்ஜியன் புளூ மாடு. மெல்லிய தசை வளர்ச்சிக் குறைபாடான மியோஸ்டாட்டின் மரபணுவில் உள்ள குறைபாடு, தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் மாற்றப்பட்டு வளர்க்கப்படுகிறது
சிகூவூவா இனமும் கிரேட் டேன் இனமும் கலந்து தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் மூலம் உருவாக்கப்பட்ட நாய்.
மக்காச்சோளத்தின் தேர்ந்தெடுத்த வளர்ப்பு

இரண்டு வெவ்வேறு விலங்கினங்களின் இரண்டு தேர்ந்தெடுக்கபட்ட பண்புக்கூறுகள் இணைந்து உருவாகும் புதிய பண்புக்கூறுள்ள விலங்குகள் கலப்பினங்கள் எனப்படுகின்றன. மலர்கள், காய்கறிகள் பழ மரங்கள் ஆகியவற்றின் வீரிய ஒட்டுவகைகள், தொழில்சாரா, வணிக முறையான அல்லது வணிக முறையற்ற வல்லுனர்களால் உருவாக்கப்படலாம். வழக்கில் உள்ள முதன்மையான பயிர்கள் வழக்கமாக தொழில்முறையாளர்களின் கலப்பினங்களாகவே அமைகின்றன.

கால்நடை வளர்ப்பில் உள்ளினச்சேர்க்கை , மரபுவழித்தொடர் இனப்பெருக்கம், வேற்றினச் சேர்க்கை ஆகிய நுட்பங்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதே போன்ற முறைகள் தாவர வளர்ப்பிலும் பயன்படுத்தப்படுகின்றன. 1859 ஆம் ஆண்டு வெளியிட்ட உயிரினங்களின் தோற்றம் (நூல்) என்ற தனது நூலில், மாற்றங்களை உருவாக்குவதில் தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் எவ்வாறு வெற்றிகரமாக இருந்தது என்பதை சார்லஸ் டார்வின் விவாதிக்கிறார். அந்நூலின் முதல் அத்தியாயத்தில் வீட்டு வளர்ப்பு விலங்குகள், அதாவது புறாக்கள், பூனைகள் , கால்நடை, மற்றும் நாய்கள் ஆகியவற்றின் தேர்ந்தெடுத்த வளர்ப்பு குறித்து விவரிக்கப்பட்டுள்ளது. டார்வின் இயற்கைத் தேர்வுக் கோட்பாட்டை வலுப்படுத்த மரபான செயற்கைத் தேர்வு வழிமுறையைப் பயன்படுத்தினார்.[1]

வேளாண்மையிலும் உயிரியல் ஆய்வுகளிலும் விரும்பும் விளைவை உருவாக்குவதற்காக, தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் திட்டமிட்டு செய்யப்படுகிறது. இது மிகவும் இன்று மிகவும் வழமையாக மாறிவிட்டது. தேர்ந்தெடுக்கப்பட்ட இனப்பெருக்கம் எதிர்பாராத விதமாகவும் முடியலாம். பயிர் விளைச்சல் முறையின் விளைவாக விரும்பத்தக்க அல்லது விரும்பத்தகாத விளைவுகள் உருவாகி இருக்கலாம் . எடுத்துகாட்டாஎக, சில கூலங்களில் விதை அளவை அதிகரிக்க பெரிய விதைகளை தேர்ந்தெடுப்பதைக் காட்டிலும் சில உழுதல் நடைமுறைகள் மூலங்கூட பெரிய விதைகளை உருவாகச் செய்திருக்கலாம். பெரும்பாலும், தாவர வளர்ப்பில் இயற்கை , செயற்கை காரணிகளுக்கு இடையே இடைவிடாத தொடர் உறவு இருந்தே வந்துள்ளது.[2]

வரலாறு தொகு

தாவரங்களிலும் விலங்குகளிலும் தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறை வரலாற்ருக்கு முந்தைய காலத்தில் இருந்தே நmiடைமுறையில் இருந்து வந்துள்ளது; கோதுமை, அரிசி, நாய்கள் ஆகியவற்றின் சிறப்பினங்கள் அவற்றின் காட்டுவகைகளை விட முற்றிலும் வேறுபட்டனவாகும். குறிப்பாக, இலென்னியா, சோளம் ஆகியவை அவற்றின் காட்டுவகைகளான தியோசின்டேவில் இருந்து பெரிதும் வேறுபட்டனவாகும். இவை தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறையாலநடுவண் அமெரிக்காவில் உருவாகியவை. பண்டைய உரோமானியர்களும் தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறையைப் பின்பற்றியுள்ளனர்.[3] ஏறத்தாழ 2000 ஆண்டு பழைய நூல்கள் விலங்குகளின் தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறை பற்றி அறிவுரைகளைத் தருகின்றன. இவ்வளர்ப்பின் நோக்கம் பலதிறப் பட்டனவாக அமைகின்றன . அந்நூல்கள் மாகோ போன்ற கார்த்திகினிய வேளாண் அறிஞர்களின் மேற்கோள்களைச் சான்றுகளாகத் தருகின்றன.[4] பதினொறாம் நூற்றாண்டில் இந்தத் தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறை பற்றிப் பாரசீகப் பலதுறை அறிஞர் அபு இரேகன் புரூனியால் விளக்கப்படுகிறது. இதை இவர் தனது இந்தியா எனும் நூலில் விளக்குகிறார். இந்நூல் பல்வேறு எடுத்துகாட்டுகளையும் தருகிறது.[5]

வேளாண் வல்லுனர் தனது கூலத்தைத் தெரிவு செய்து தேவையான அளவுக்கு அதைப் பயிரிடுகிறார். ஒரு கானியல் வல்லுனர் தான் சிறந்தவை எனக் கருதும் வகைகளை மட்டும் காத்துப் பிறவகைகளை வெட்டிப் புறக்கணிக்கிறார். தேனீக்கள் தம் கூட்டில் உள்ள வேலை செய்யாதவற்றைத் தாமே உண்கின்றன.

—அபு இரேகன் புரூனி, இந்தியா

அறிவியல் முறையில் இராபர்ட் பிளாக்வெலல் எனும் வேளாணியல் அறிஞர் தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறையைப் பதினெட்டாம் நூற்றாண்டில் பிரித்தானிய வேளாண்புரட்சியின்போது நிறுவினார். இவரது திட்டம் செம்மறியாட்டைச் சார்ந்தே அமைந்தது. இயல்பான பிறப்பிடச் செம்மறிகளைப் பயன்படுத்தி மிகவிரைவாகவே பெரிய நுண்ணெலும்புள்ள மிளிரும் நீண்ட கம்பளி முடியமைந்த செம்மறிவகையை உருவாக்கினார். இவர் இலிங்கன் செம்மறிவகையையும் மேம்படுத்தினார். இதிலிருந்து, பிறகு புதிய இலீசெசுட்டர் வகைச் செம்மறி உருவாக்கப்பட்டது. இது கொம்பற்ற முழு இறைச்சி மிக்க உடல் மேற்பகுதி நேராக அமைந்த செம்மறியாகும்.[6]

இந்தவகைச் செம்மறியாடுகள் பேரளவில் வட அமெரிக்கா, ஆத்திரேலியா உட்பட பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டன. இது மேலும் பல தற்கால வளர்ப்பினச் செம்மறி வகைகளுக்கும் வழிவகுத்தது. துணிகள், இறைச்சி சார்ந்த விருப்பார்வங்கள் மாறியதும் இதன் சந்தை வீழ்ச்சி கானத் தொடங்கியது. இதன் ஆங்கில வகையும் இலாங்வுல் வகையும் நீண்ட கம்பளிக்கக இன்றும் வளர்க்கப்படுகிறது.

கறிக்கான மாட்டினவகையையும் பிளாக்வெல் முதலில் உருவாக்கினார். இதற்கு முன்பு மாடுகள் எருதுகளைப் போல ஏருழவே பயன்பட்டு வந்தன.[7][சான்று தேவை]இவர் நீள்கொம்பு மாடுகளையும் வெசுட்டுமோர்லாந்து காளைகளையும் கலந்து ஆங்கிலேய நீள்கொம்புவகைகளை உருவாக்கினார்]. பல உழவர்கள் இவரைப் பின்பற்றி, அளவிலும் பண்பிலும் உயர்ந்த பண்ணை விலங்குவகைகளைப் பேரளவில் வளர்த்தெடுத்தனர். 1700 ஆம் ஆண்டளவில் இறைச்சி எருதின் எடை 168 கிகி ஆகவும் 1786 ஆம் ஆண்டளவில் இது 381 கிகி ஆகவும் உயர்ந்தது.சென்றாலும், இவரது இறப்புக்குப் பிறகு நீள்கொம்பு வகையினம் குறுங்கொம்பு வகையினங்களாக மாற்றப்பட்டது.

பிளாக்வெல் மேலும் கருப்பு வண்டி ஓட்டும் குதிரையையும் தேர்ந்தெடுத்த வளர்ப்புமுறையில் உருவாக்கினார். பின்னர் இது சயர்வகைக் குதிரை ஆனது.

தேர்ந்தெடுத்த விலங்கு வளர்ப்புமுறை தொகு

 
இசுகாட்லாந்து பிபே ஊரின் வெசுட்டிசு நாய்களின் மூன்று தலைமுறைகள்

தேர்ந்தெடுத்த தாவர வளர்ப்புமுறை தொகு

 
ஆய்வாளர்கள் பன்னிறங்களில் தேர்ந்தெடுத்த தாவர வளர்ப்புமுறை யால் காரட்டுக் கிழங்குகளை உருவாக்கல்.

மேற்கோள்கள் தொகு

  1. டார்வின்
  2. Purugganan, M. D.; Fuller, D. Q. (2009). "The nature of selection during plant domestication". Nature. 457 (7231): 843–8. Bibcode:2009Natur.457..843P. doi:10.1038/nature07895. PMID 19212403.
  3. Buffum, Burt C. (2008). Arid Agriculture; A Hand-Book for the Western Farmer and Stockman. Read Books. பக். 232. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4086-6710-1. https://books.google.com/books?id=Rmbur_Am8vgC&pg=PA232. 
  4. Lush, Jay L. (2008). Animal Breeding Plans. Orchard Press. பக். 21. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1-4437-8451-1. https://books.google.com/books?id=KA-4oOQLgP8C&pg=PA21. 
  5. Wilczynski, J. Z. (1959). "On the Presumed Darwinism of Alberuni Eight Hundred Years before Darwin". Isis 50 (4): 459–466. doi:10.1086/348801. 
  6. "Robert Bakewell (1725–1795)". BBC History. பார்க்கப்பட்ட நாள் 20 July 2012.
  7. Bean, John (2016). Trail of the Viking Finger. Troubador Publishing. பக். 114. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-1785893056. 

நூல்தொகை தொகு

மேலும் படிக்க தொகு

வெளி இணைப்புகள் தொகு