தேஹ்ரதும் மாவட்டம்

தேஹ்ரதும் மாவட்டம் (Terhathum District) (நேபாளி: तेह्रथुम जिल्लाListen), நேபாள நாட்டின் கிழக்குப் பகுதியில், நேபாள மாநில எண் 1-இல் அமைந்துள்ள பதினான்கு மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்ட நிர்வாகத் தலைமையிடம் மியாங்லுங் நகரம் ஆகும்.

நேபாள நாட்டில் தேஹ்ரதும் மாவட்டத்தின் அமைவிடம்

தேஹ்ரதும் மாவட்டம் 679 சதுர மீட்டர் பரப்பளவு கொண்டது. 2001-ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின் படி இம்மாவட்ட மக்கள் தொகை 1,13,111 ஆகும். இம்மாவட்டத்தில் லிம்பு மொழி மற்றும் நேபாள மொழிகள் பேசப்படுகிறது.

பெயர்க் காரணம் தொகு

தேஹ்ரதும் என்ற நேபாள மொழிச் சொல்லிற்கு, தேஹ்ரா என்பதற்கு பதின்மூன்று என்றும், தும் என்பதற்கு கோட்டை என்றும் பொருள். தேஹ்ரதும் என்பதற்கு பதின்மூன்று கோட்டைகள் என்று பொருள்படும்.

 
கருப்பு ஏலக்காய்த் தோட்டம்

புவியியல் மற்றும் தட்ப வெப்பம் தொகு

நேபாளப் புவியியல் & தட்ப வெப்பம்[1] உயரம் பரப்பளவு  %
Upper Tropical climate 300 – 1,000 மீட்டர்கள் 24.0%
Subtropics 1,000 – 2,000 மீட்டர்கள் 56.4%
Temperate climate 2,000 – 3,000 மீட்டர்கள் 19.5%

கிராம வளர்ச்சிக் குழுக்கள் மற்றும் நகராட்சிகள் தொகு

 
தேஹ்ரதும் மாவட்ட நகராட்சிகள் மற்றும் கிராம வளர்ச்சிக் குழுக்களைக் காட்டும் வரைபடம்

தேஹ்ரதும் மாவட்டம், ஒன்பது உட்கோட்டங்களுடன், 32 உள்ளாட்சி கிராம வளர்ச்சிக் குழுக்களையும், இரண்டு நகராட்சிகளையும் கொண்டுள்ளது.

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. The Map of Potential Vegetation of Nepal – a forestry/agroecological/biodiversity classification system (PDF), . Forest & Landscape Development and Environment Series 2-2005 and CFC-TIS Document Series No.110., 2005, ISBN 87-7903-210-9, பார்க்கப்பட்ட நாள் Nov 22, 2013 {{citation}}: horizontal tab character in |series= at position 91 (help)

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தேஹ்ரதும்_மாவட்டம்&oldid=3893117" இலிருந்து மீள்விக்கப்பட்டது