தைவானியத் திரைப்படத்துறை

தைவானியத் திரைப்படத்துறை (cinema of Taiwan) என்பது தைவானின் வரலாற்றில் வேர்கொண்டதாகும். இது சீனமொழித் திரைப்பட மூன்று வரலாற்றிழைகளில் ஒன்றாகும். மற்றவை ஆங்காங் திரைப்படம், சீனத் திரைப்படம் என்பனவாகும். தைவானை யப்பான் ஆண்ட 1901 இல் அறிமுகமாகிய தைவானியத் திரைப்படம் பல கட்டங்களில் வளர்ந்தது. இது ஆங்காங் நகரின் முதன்மைப் போக்குக்கு வெளியில் மக்கள் சீனக் குடியரசுத் தணிக்கையிலும் வளர்ந்தது.

தைவானியத் திரைப்படத்துறை
மிங்சென் திரையரங்கம்
திரைகளின் எண்ணிக்கை784 (2017)[1]
நிகர நுழைவு வருமானம் (2017)[2]
மொத்தம்$10.6 பில்லியன்
தேசியத் திரைப்படங்கள்$729 மில்லியன் (6.90%)

பான்மைகள் தொகு

தைவானிய இயக்குநர்கள் தொகு

அண்மை ஆண்டுகளில், பல பன்னாட்டு புகழ்பெற்ற திரைப்பட தயாரிப்பாளர்களால் உலகக் கவனத்தை ஈர்த்துள்ளது. இவர்களில் கவு கிசியாவோ, எடவார்டு யாங், மலேசிய சீனராகிய திசாய் மிங்லியாங் ஆகியோர் குறிப்பிடத் தகுந்தவர்கள்.

சென் கியுவோபூ, திசூயி சியூ மிங், தனியார் துறை சார்ந்த் குவாங் மிங்சுவான் இலை ஆகியோர் 1990 களுக்குப் பிறகு பெயர்பெற்ற இயக்குநர்கள் ஆவர்.

அரசின் தாக்கம் தொகு

பிந்தைய யப்பானியக் குடியேற்றக் காலத்தில் இருந்து தைவானிய இராணுவச் சட்டம் நடைமுறைக்கு வந்த காலம் வரை தைவானியத் திரைப்பட வளர்ச்சி, அலுவல்முறை அரசு கலைக்கூட வளர்ச்சியைச் சார்ந்தே இருந்தது. அப்போது உருவாகிய திரைப்படங்கள் முதன்மையாக செய்திப் படங்களாகவே அமைந்தன. இவை அரசு நடத்திய கலைக்கூடங்களில் எடுக்கப்பட்டன. இவை தைவான் திரைப்படக் குழுமம், நடுவண் இயங்குபடக் கூட்டிணையம், சீனா திரைப்படக் கலைக்கூடம் ஆகியவற்றில் பெரும்பாலும் அரசியல் பரப்புரைக்காக எடுக்கப்பட்டன. இன்றும் கூட தைவான் அரசு திரைப்பட நிதி ஒதுக்கிடும் வழக்கத்தைக் கொண்டுள்ளது. இந்த நிதி தைவான் திரைப்படத்துறைக்குப் பயன்படுத்தப்படுகிறது. இத்தகைய நிதி ஒதுக்கீடு கேள்விக்குள்ளானாலும் திரைப்பட வளர்ச்சிக்கு நன்கு உதவுகிறது.

அரசின் தகவல் அலுவலகம் திரைப்பட நல்கைக்குப் பொறுப்பேற்கிறது. நல்கைகள் $5 மில்லியன், $800 மில்லியன் என இருவகைப்படும். பதினைந்து படங்களுக்கான திரையாக்கச் செலவு $120 மில்லியனாக அமைகிறது. ஒரு திரைப்பட ஆக்கத்துக்கான சரியான பண ஒதுக்கீடு சில வரன்முறைகளின்படி அமைகிறது; எடுத்துகாட்டாக, $5 மில்லியன் புதிய இயக்குநர்களுக்கு முதலில் தகவல் படம் எடுக்க வழங்கப்படுகிறது.

ஆவணப்படங்கள் தொகு

அண்மைக் காலத்தில், தைவான் ஆவணப்படங்களும் பரவலாக மக்களால் வரவேற்கப்படுகின்றன. தைவானிய ஆவணப்படங்களின் வளர்ச்சி 1987 இல் இராணுவச் சட்டம் நீங்கியதும் தொடங்கியது. இந்நிலையில் பதிவுகள் மக்களிடம் பரவியதாலும் தைவான் பண்பாட்டு விவகார மன்றம் தந்த ஆதரவாலும் மேம்பட்ட நடவடிக்கைகளாலும் நிகழ்ந்தது. ஆவணப்படங்கள் வேறு அரசுசார் முகமைகளாலும் தனியார் குழுமங்களாலும் ஆதரவு பெறுகின்றன. ஆவணப்படங்களை எடுக்க பலவகை திரைப்பட விழாக்களும் விருதுகளும் நிறுவப்பட்டுள்ளன.

தைவான் ஆவணப்படங்கள் திரைப்படம் எடுப்பவர்களைப் பற்றியோ அல்லது அவர்களது குடும்பத்தைப் பற்றியோ எடுக்கப்படுகின்றன. இவை சீரிய சமூக அல்லது அரசியல் சிக்கல்களைக் கருப்பொருளாகக் கொண்டு எடுக்கப்படுகின்றன. படிப்படியாக இவை பன்னாட்டுப் புகழையும் ஈட்டலாயின. பலர் பன்னாட்டுத் திரைப்பட விழாக்களில் பல விருதுகளை வென்றுள்ளனர்.

தொடக்கநிலைத் திரைப்படம், 1900–1945 தொகு

தைவானில் முதல் திரைப்படம் தாயோயிரோ தகமாத்சுவால் 1901 இல் (高松豊次郎; 高松豐次郎) அறிமுகப்படுத்தப்பட்டது.தைவானை 1900 முதல் 1937 வரை யப்பான் ஆண்டபோது யப்பானியக் குடியேற்ற நாட்டுத் திரைப்படச் சந்தைகளில் தைவான் திரைப்படத்துறை தான் மிகவும் முதன்மை வாய்ந்ததாக விளங்கியது. தகமாத்சு 1905 இல் யப்பானிய உருசியப் போர்ப்படம் எடுத்து 10,000 யப்பானிய யென்களைத் திரட்டி யப்பான் இராணுவத்திடம் அளித்தார். தைவான் குடியேற்ற அரசு 1910 இல் ஒருங்கிணைந்த தைவான் நாட்டு திரைப்பட வளர்ச்சிக்காக, தகமாத்சு, பிற திரைப்பட இயக்குநர்களின் தனித்தனித் திரைப்படத்துறை முயற்சிகளை ஒருங்கிணைத்தது. யப்பானியப் பேரரசில் தைவானியப் பண்பாட்டுக் கருப்பொருள்களைத் தன்மயமாக்கிப் பரந்த யப்பானியக் குடியேற்ற ஆட்சிப் பரப்பை விரிவாக்குவதில் தைவானியத் திரைப்படங்கள் பெரும்பங்காற்றின. தைவானியத் திரைப்படங்கள் தைவானியருக்கு அல்லாமல் யப்பானிய பார்வையாளருக்காகவே உருவாக்கியதாகத் தகமாட்சு தெளிவாகக் கூறுகிறார். எனவே, தொடக்கநிலைத் தைவானியத் திரைப்படங்கள் தீவின் புதுமைப்படுத்தலில் யப்பானிய முன்னெடுப்பைப் பாராட்டும் போக்கிலேயே எடுக்கப்பட்டுள்ளன. பிற திரைப்படங்கள் யப்பானியரின் ஓங்கலான குடியேற்ற உணர்வுகளுக்கு தீனி போடவே எடுக்கப்பட்டன. இவ்வகைப் படங்களாக காக்கொயரிங் தைவான்ஸ் நேடிவ் ரெபெல்ஸ் (1910) மற்றும் ஹீரோஸ் ஆஃப் தெ தைவான் எக்ஸ்டெர்மேசன் ஸ்குவாட் (1910) ஆகியவற்றைக் கூறலாம்.[3]

வருமானப் பங்கீடு தொகு

தைவான் திரைப்பட வருமானப் பகிர்வைப் பற்றித் தெங் சியூ பெங் வளைகுடா எண் 7 படத்தின்போது விவாதித்தார். தெங் திரைப்படத்தின் வருமானம் NTD 520 மில்லியன் ஆக அமையும் எனக் கொண்டார். ஆக்கச்செலவு NTD 50 மில்லியன் ஆகியது. இந்தச் செலவைக் கழித்த வருமானத்தில் 60% திரையரங்குகளுக்கும் 10% படப்பகிர்வாளருக்கும் தரப்படும். இயக்குநர் NT$140 மில்லியன் தொகையைப் பெறுவார்.[4]

குறிப்பிடத் தகுந்த இயக்குநர்களும் நடிகர்களும் நடிகைகளும் தொகு

  • குவேய்லுன் மேய்
  • யாய் சவு
  • கவு கிசியாவொ கிசியன்
  • செங்குவோ பூ
  • வுநியேன் யென்
  • கிங் கூ
  • ஆங்லீ

  • திசாய்மிங் இலியாங்
  • நிக்கி வூ
  • சூகியூயி
  • அலெக் சூ
  • உரூபி லின்
  • எட்வார்டு யாங்

  • பிரிகித்தே லின்
  • ஜிம்மி லின்
  • ஜெரி யான்
  • தோம் லின்
  • சாங் சென்
  • தகேழ்சி கனேழ்சிரோ

  • சில்வியா சாங்
  • இரேனே லியூ
  • சிகங் லங்
  • வூ சியேன் லியேன்
  • யாங்குவேயி மேய்
  • கிசூ பெங்

  • யோவன் லின்
  • சின்கான் (நடிகர்)
  • சார்லி சின் கிசியாங்லின்
  • இலிகான் கிசியாங்
  • இரிச்சேரன்

மேற்கோள்கள் தொகு

  1. "電影片映演業統計" (PDF). Ministry of Culture. 2018-02-06. Archived from the original (PDF) on 2018-03-10. பார்க்கப்பட்ட நாள் 2018-08-26.
  2. "全台院線映演中華民國影片、港陸影片暨其他外片之票房" (PDF). Ministry of Culture. 2018-02-27. Archived from the original (PDF) on 2018-08-04. பார்க்கப்பட்ட நாள் 2018-08-04.
  3. Baskett (2008), ப. 13-20.
  4. Teng Sue-feng (Feb 2009). tr. by Christopher J. Findler. "Biggest Production in Taiwan Film History-Seediq Bale". Taiwan Panorama. http://www.taiwan-panorama.com/en/show_issue.php?id=200929802040e.TXT&distype=text. பார்த்த நாள்: 2012-02-28.  [The Chinese version is more detailed]

நூல்தொகை தொகு

வெளி இணைப்புகள் தொகு