தொடர்ம விசையியல்

தொடர்ம விசையியல் (Continuum mechanics) என்பது விசையியலின் ஒரு துறையாகும். இத்துறையில் பொருட்களை தனித்தனி துகள்களால் (அணுக்களால்) ஆனதாகக் கொள்ளாது ஓர் தொடர்ந்த திணிவாக கருதி அதன் அசைவு விபரியல் மற்றும் விசையியலை பகுப்பாய்வு செய்கிறது. இத்தகைய கருதுகோளை முதன்முதலாக 19வது நூற்றாண்டில் முன்வைத்தவர் பிரெஞ்சு கணிதவியலாளர் அகஸ்தின் லூயி கேச்சி ஆகும். இத்துறையில் இன்றும் ஆராய்ச்சிகள் தொடர்கின்றன.

விளக்கம் தொகு

ஒரு பொருள் தொடர்ந்த திணிவைக் கொண்டிருப்பதாக கருதுவது அப்பொருள் முழுமையாக வெற்றிடத்தை நிரப்புவதாகவும் இடையில் எந்த இடைவெளியோ வெற்றிடமோ இல்லை என்றும் கருதுவதாகும். எனவை இக்கருதுகோள் உண்மைநிலையில் பொருட்கள் அணுக்களால் ஆனவை என்பதையும் எனவே தொடர்ந்த திணைவை கொண்டவை இல்லை என்பதையும் கருத்தில் கொள்வதில்லை. இருப்பினும் அணுவிடை நீளங்களை விட பலமடங்கு கூடுதலான நீள அளவுகளில், இத்தகைய கருதுகோள்கள் பெருமளவில் துல்லியமாக உள்ளன. அடிப்படை இயறுபியல் விதிகளான திணிவுக் காப்பு விதி, உந்தம், மற்றும் ஆற்றல் காப்பு போன்றவற்றை இத்தகைய வடிவங்களில் பயன்படுத்தி பொருட்களின் நடத்தையைக் குறித்து விவரிக்கும் வகையீட்டுச் சமன்பாடுகளைப் பெறலாம்.

தொடர்ம விசையியல் பாய்ம மற்றும் திடப்பொருட்களின் இயற்பியல் பண்புகளை, எந்தவொரு ஆள்கூற்று முறைமையின் கட்டுமின்றி ஆராய்கின்றன. இந்த இயற்பியல் பண்புகள் பின்னர் கணிதவியலில் எந்தவொரு ஆள்கூற்று முறைமையின் கட்டுமின்றி விவரிக்கக்கூடிய பல்திசையன்களால் குறியீடப்படுகின்றன. இந்த பல்திசையன்களை கணக்கிடுவதற்காக ஆள்கூற்று முறைமைகளில் வெளிப்படுத்த இயலும்.

தொடர்ம விசையியலின் கூறுகள் தொகு

தொடர்ம விசையியல்
தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி
திண்மநிலை விசையியல்
ஓய்வுநிலை வரையறுக்கப்பட்ட தொடர்ந்துள்ள பொருட்களின் இயற்பியல் கல்வி
மீட்சிப்பண்பு
அளிக்கப்பட்ட தகவை நீக்கியபிறகு தங்கள் ஓய்வு வடிவத்திற்கு மீளும் பொருட்களை விவரிக்கிறது.
நெகிழ்வு தன்மை
தேவையான அளவில் தகைவு அளிக்கப்பட்ட பின்னர் நிரந்தரமாக வடிவு மாறும் பொருட்களை விவரிக்கிறது.
உருமாற்றவியல்
திண்ம மற்றும் பாய்ம இருநிலைப் பண்புகளை காட்டும் பொருட்களின் கல்வி.
பாய்ம விசையியல்
விசையால் உருமாறுகின்ற தொடர்ந்துள்ள பொருட்களைக் குறித்த இயற்பியல் கல்வி
நியூட்டானியப் பாய்வற்ற பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டிராதவை
நியூட்டானியப் பாய்மங்கள் அளிக்கப்பட்ட நறுக்குத் தகைவிற்கேற்ற உருமாற்ற வீதங்களை கொண்டுள்ளவை.

மேற்கற்கை தொகு

  • Malvern, Lawrence E. (1969). Introduction to the mechanics of a continuous medium. New Jersey: Prentice-Hall, Inc.. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=தொடர்ம_விசையியல்&oldid=3622602" இலிருந்து மீள்விக்கப்பட்டது