தோங்தெங் (Tongdaeng) (7 நவம்பர் 1998 - 26 திசம்பர் 2015), அல்லது தோங் தாயிங் என்றும் அழைக்கப்படும் இது ஒரு கலப்பின நாயாகும். பெண் நாயான இது செம்பு நிறத்துடன் காணப்பட்டது. மேலும் தாய்லாந்தின் மன்னர் பூமிபால் அதுல்யாதெச்சுக்கு சொந்தமான செல்லப்பிராணிகளில் ஒன்றாகும்.

தோங்தெங்
நுண்கலைத்துறையின் சின்பிரசோங், உருவாக்கிய நாயின் சிற்பம்
இனம்நாய்
வகைதாய் நாய்
பால்பெண்
பிறப்பு7 நவம்பர் 2017
இறப்பு26 திசம்பர் 2017.
Resting placeகுன் தாங் டேங் நினைவுச்சின்னம், ஹுவா ஹின் நாய் மையம், பிரச்சுவாப் கிரி கான் மாகாணம்
நாடுதாய்லாந்து
செயற்பட்ட ஆண்டுகள்13 திசம்பர் 2017
அறியப்படுவதற்கான
 காரணம்
மன்னர் பத்தாம் ராமாவின் ஒரு செல்ல நாய் 9[1][2]
உரிமையாளர்மன்னர் பூமிபால் அதுல்யாதெச்
2017 ஆம் ஆண்டில் மன்னர் பூமிபால் அதுல்யாதெச்சின் தகனக் கூடத்தில், காவோ காவ் (இடது) மற்றும் தோங்தெங் (வலது) மன்னரின் சிற்பத்துடன்.

வாழ்க்கை தொகு

மன்னர் சமீபத்தில் தான் நாட்டுக்கு அர்ப்பணித்த ஒரு மருத்துவ மையத்திலிருந்து 1998 ஆம் ஆண்டில் இந்த நாயை ஏற்றுக்கொண்டார். முன்னதாக செவிலியரான மாலி என்பவரால் இந்த நாய் பராமரிக்கப்பட்டது. இந்த நாயின் பெயர் தாய் மொழியில் "செம்பு" என்று பொருள்படும். [3] இந்த நாய் இடம்பெறும் நான்கு அஞ்சல் தலைகளின் நினைவுத் தொகுதி 2006 இல் தாய்லாந்து அஞ்சல் துறையால் வெளியிடப்பட்டது. [4]

பூமிபால் இந்த நாயை "அசாதாரணமான ஒரு பொதுவான நாய்" என்று அழைத்தார். மேலும் 2002 ஆம் ஆண்டில் " தி ஸ்டோரி ஆஃப் டோங்டெங் என்ற தலைப்பில் ஒரு சுயசரிதையும் எழுதினார். இந்த புத்தகம் பொதுவாக பல சமூக தலைப்புகளில் ஒரு உவமையாக குறிப்பிடப்படுகிறது. உதாரணமாக, மன்னர் இவ்வாறு எழுதினார், "தோங்தெங் சரியான நடத்தை கொண்ட மரியாதைக்குரிய நாய்; அது தாழ்மையானது, நெறிமுறை அறிந்தது. அது எப்போதும் அரசனை விட தாழ்வாக உட்கார்ந்திக்கும்; நாயைத் தழுவிக்கொள்ள மன்னர் அதை இழுக்கும்போது கூட, நாய் தன்னைத் தரையில் தாழ்த்திக் கொள்ளும். அதனுடைய காதுகள் மரியாதைக்குரியவாறு தரையை நோக்கி இருக்கும். 'தனக்கு தைரியம் இல்லை' என்று அது சொல்வது போல். " [5] மன்னருக்குச் சொந்தமான நாய்களின் பெயர்கள் அனைத்தும் "தோங்" (தங்கம்) என்ற வார்த்தையிலிருந்து தொடங்குகின்றன.

தாய் மொழியிலும், ஆங்கில உரை இரண்டிலும் வெளியிடப்பட்ட 84 பக்க புத்தகம், தாய்லாந்தில் அதன் முதல் பதிப்பில் 100,000 புத்தகங்கள் விரைவில் விற்கப்பட்டது. [3] தேவை மிக அதிகமாக இருந்ததால், புத்தகம் மதிப்புமிக்க பரிசாக மாறியது. [6] மேலும் பல முறை மறுபதிப்பும் செய்யப்பட்டது.

பூமிபால் மன்னரின் தகனத்திற்காக இந்த நாயின் சிற்பம் உருவாக்கப்பட்டது. நாயின் மார்பு மல்லிகைப் பூக்களால் அலங்கரிக்கப்பட்டது. மல்லிகை என்பது "அம்மாவின் காதல்" என்பதின் பிரதிநிதித்துவமும், அல்லது "மாலி" என்பது தாய்லாந்தின் அன்னையர் தினத்திற்கான மலராகவும், அத்துடன் தோங்தெங்கின் வளர்ப்புத் தாயின் பெயருமாகும்.

தேசத்துரோகச் சட்டம் தொகு

தனகோர்ன் சிரிபாய்பூன், என்றா ஒரு 27 வயது தொழிற்சாலை வேலையாள், 2015 ஆம் ஆண்டில் முகநூலில் இந்த நாயைப் பற்றி ஒரு "கிண்டலான" இடுகையின் மூலம் மன்னரை அவமதித்ததாக தாய்லாந்தில் தேசத்துரோகச் சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப்பட்டார். [7] அவரது வழக்கறிஞர் அனோன் நம்பா, சர்வதேச நியூயார்க் டைம்ஸுக்கு இந்த குற்றச்சாட்டு "விலங்கு மீதான துல்லியமான அவமானத்தை விவரிக்கவில்லை" என்று தெரிவித்தார். [8] இந்த நாய் இறப்பதற்கு 12 நாட்களுக்கு முன்னர், பேங்க்காக்கை தளமாகக் கொண்ட இன்டர்நேஷனல் நியூயார்க் டைம்ஸின் பதிப்பு 14 திசம்பர் 2015 தனது அச்சு பதிப்பிலிருந்து இக்கதையை நீக்கியது. 90 நாட்கள் சிறையில் கழித்த பின்னர் அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டிருந்தால், சிரிபாய்பூன் அதிகபட்சம் 37 ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அனுபவித்திருக்க் கூடும். சூன் 2018 நிலவரப்படி அவரது தற்போதைய இருப்பிடமும் அவரது வழக்கின் நிலையும் தெரியவில்லை.

பிபிசியின் கூற்றுப்படி, சிரிபாய்பூன் இந்த நாயின் பல புகைப்படங்களை பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார். இது மன்னரை கேலி செய்யும் வகையில் தோன்றியது. மேலும் தாய் மன்னரின் புகைப்படத்திற்கு அடுத்ததாக "லைக்" பொத்தானை இடுகையிட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இது மற்றொரு முகநூல் பயனரால் வெளியிடப்பட்டது. [9] இந்த வழக்கு இறுதியாக கைவிடப்பட்டது.

ஊடகங்களில் தொகு

இந்த நாயின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்ட குன் தோங்தெங்: தி இன்ஸ்பிரேஷன்ஸ் என்ற ஒரு படம், நவம்பர் 2015 இல் வெளியிடப்பட்டது. [10]

மேலும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. https://pet.kapook.com/view19715.html
  2. "காப்பகப்படுத்தப்பட்ட நகல்". Archived from the original on 2020-09-20. பார்க்கப்பட்ட நாள் 2020-10-02.
  3. 3.0 3.1 Seth Mydans, For Dogged Devotion to Etiquette, a Kingly Tribute, International Herald Tribune, 26 December 2002. Accessed 30 December 2015.
  4. Ho, Victoria (December 29, 2015). "Royal Thai dog at center of defamation case passes away". Mashable. http://mashable.com/2015/12/29/royal-thai-dog-passes-away/#01nyaBB.DEqO. பார்த்த நாள்: December 30, 2015. 
  5. "Dissing the king’s dog is a crime in Thailand". The Economist. 19 December 2015. https://www.economist.com/news/asia/21684177-dissing-kings-dog-crime-thailand-who-are-you-calling-bitch. பார்த்த நாள்: 21 December 2015. 
  6. "See Portraits of Thailand's King Bhumibol Adulyadej Displayed All Over Bangkok". http://time.com/4068781/thailand-king-bhumibol/. 
  7. Bhutia, Jigmey. "Thai man faces 37 years jail for 'insulting' King Bhumibol Adulyadej through his dog". ibtimes.co.uk. International Business Times. பார்க்கப்பட்ட நாள் 16 December 2015.
  8. Holmes, Oliver. "Thai man faces jail for insulting king's dog with 'sarcastic' internet post". theguardian.com. The Guardian. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.
  9. Head, Jonathan (December 16, 2015). "Defaming a dog: The ways to get arrested for lese-majeste in Thailand". BBC. https://www.bbc.com/news/world-asia-35099322. பார்த்த நாள்: December 29, 2015. 
  10. Panya, Duangkamol. "Who let the dogs out?". bangkokpost.com. Bangkok Post. பார்க்கப்பட்ட நாள் 15 December 2015.

மேலும் படிக்க தொகு

  • Bhumibol Adulyadej. The Story of Tongdaeng. Amarin, Bangkok. 2004. ISBN 974-272-917-4
"https://ta.wikipedia.org/w/index.php?title=தோங்தெங்&oldid=3878083" இலிருந்து மீள்விக்கப்பட்டது