தோத் (Thoth) பண்டைய எகிப்தியக் கடவுள்களில் ஒருவர். தோத் கடவுள் நீண்ட அலகு கொண்ட பறவைத் தலையும், மனித உடலும் கொண்டது. நீண்ட இறகும், பறவைத் தலையும் கொண்டவர். மூத்து பெண் தேவதை இவரது மனைவி ஆவார்.[1] தோத் கடவுள் ஞானம், எழுத்து, சித்திர எழுத்து, அறிவியல், மாயாஜால வித்தை, கலைகள், நியாயத் தீர்ப்பு மற்றும் இறப்பிற்கு அதிபதி ஆவார். பண்டைய கிரேக்கக் கடவுள்களில் எர்மெசு தோத் கடவுளுக்கு சமமாகக் கருதப்படுகிறார். தோத் கடவுளின் முக்கியக் கோயில், எகிப்தில் ஹெர்மபோலிஸ் நகரத்தில் உள்ளது. 1826-இல் இக்கோயிலின் சிலபகுதிகள் அழிக்கப்பட்டது.[2]

தோத்
இடது கையில் அன்கு சின்னம் ஏந்திய, நீண்ட அலகு கொண்ட பறவைத் தலையும், மனித உடலும் கொண்ட தோத் கடவுள்
குழந்தைகள்சேசத்

சூரியக் கடவுளான இரா, சூரியப் படகில் ஏறி பாதாளத்தில் சுற்றி வருகையில் அதன் இருபுறங்களிலும் தோத் கடவுளும், அவரது மனைவியும், தேவதையுமான மாத் உடன் வருகின்றனர்.[3]எகிப்தின் பிந்தைய காலத்தில் தோத்திற்கு கடவுளுக்கு இணையான மதிப்பு தரப்படவில்லை[4][5]


அமர்ந்த நிலையில் தோத் கடவுள்
தோத் கடவுள் முன் இரண்டு கொக்குகள்
பபூன் குரங்கு போன்று சித்தரிக்கப்படும் தோத் கடவுள், காலம், கிமு 1400
அமர்ந்த நிலையில் தோத் கடவுள்
அகாமனிசியப் பேரரசர் இரு சிங்கங்களை கையில் பிடித்தவாறு நிற்கும் உருளை முத்திரையில், எகிப்திய படவெழுத்துகளில் கடவுள் தோத் எனக்கு ஒரு பாதுகாப்பு எனக்குறிக்கப்பட்டுள்ளது, காலம், கிமு 6-5-ஆம் நூற்றாண்டு[6]

இதனையும் காண்க தொகு

மேற்கோள்கள் தொகு

  1. Thutmose III: A New Biography By Eric H Cline, David O'Connor University of Michigan Press (January 5, 2006)p. 127
  2. Miroslav Verner, Temple of the World: Sanctuaries, Cults, and Mysteries of Ancient Egypt (2013) 149
  3. (Budge The Gods of the Egyptians Vol. 1 p. 400)
  4. (Budge The Gods of the Egyptians Vol. 1 p. 405)
  5. (Budge The Gods of the Egyptians p. 403)
  6. "Museum item, accession number: 36.106.2". www.metmuseum.org. Metropolitan Museum of Art.

ஆதார நூற்பட்டியல் தொகு

வெளி இணைப்புகள் தொகு

 
விக்கிமீடியா பொதுவகத்தில்,
Thoth
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
  • Stadler, Martin (2012). "Thoth". UCLA Encyclopedia of Egyptology. Department of Near Eastern Languages and Cultures, UC Los Angeles. 


"https://ta.wikipedia.org/w/index.php?title=தோத்&oldid=3445663" இலிருந்து மீள்விக்கப்பட்டது