தோ. சங்குன்னி மேனன்

தோட்டகட்டு சங்குன்னி மேனன் (Thottakattu Sankunni Menon) (21 ஏப்ரல் 1820 - 1881), இவர் ஒரு இந்திய அரசு ஊழியரும், நிர்வாகியுமாவார். இவர் 1860 முதல் 1879 வரை கொச்சி இராச்சியத்தின் திவானாக பணியாற்றினார். இவரது நிர்வாகம் வளர்ச்சியின் ஒரு காலமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது. இவரது சகோதரர் கோவிந்த மேனன் என்பவரும் 1889 க்கும் 1879க்குமிடையில் கொச்சியின் திவானாகப் பணியாற்றினார்.

தோட்டகட்டு சங்குன்னி மேனன்
இந்தியாவின் நட்சத்திரத்தின் தோழர்
கொச்சியின் திவான்
பதவியில்
1860–1879
ஆட்சியாளர்கள்நான்காம் இரவி வர்மா,
பதிநான்காம் இராம வர்மா
முன்னையவர்வெங்கட இராயர்
பின்னவர்தோ. கோவிந்த மேனன்

ஆரம்ப கால வாழ்க்கை தொகு

சங்குன்னி மேனன், 1840 முதல் 1856 வரை கொச்சி இராச்சியத்தில் திவானாகப் பணியாற்றிய சங்கர வாரியர் என்பவரின் மூத்த மகனாவார். [1] 1820 ஆம் ஆண்டில் திருச்சூரில் பிறந்த இவர் ஒரு நல்ல ஆங்கிலக் கல்வியைப் பெற்றார். வெங்கட ராவ் என்பவருக்குப் பின் கொச்சியின் திவானாக நியமிக்கப்பட்டபோது சென்னை மாகாணத்திலிருந்த திருநெல்வேலி மாவட்டத்தில் துணை ஆட்சியராக பணியாற்றி வந்தார்.

ஆட்சி தொகு

சங்குன்னி மேனனின் முதல் நான்கு ஆண்டுகள் இவரது துணை திவான் பரமேஸ்வர பட்டரின் சூழ்ச்சிகளைக் கையாளுவதிலேயே சென்றது. 1864 ஆம் ஆண்டில், கொச்சியின் மன்னன் ஐந்தாம் இரவி வர்மா இறந்த பின்னர், பரமேஸ்வர பட்டரை பதவி நீக்கம் செய்த பின்னர் இவர் நிர்வாகத்தின் முழு கட்டுப்பாட்டையும் பெற்றார்.

நிர்வாகம் தொகு

திவானாக நியமிக்கப்படுவதற்கு முன்னர் பிரிட்டிசு இந்தியாவில் நீதித்துறை அதிகாரியாக பணியாற்றிய மேனன், கொச்சினின் நீதி முறையை சீர்திருத்தினார். இவர் அனைத்து வட்டங்களிலும் நீதிமன்றங்களை நிறுவினார். மேனனின் காலம் வரை, மாநிலத்தில் அனைத்து நீதித்துறை நியமனங்களும் தகுதியற்ற ஆண்களால் நடத்தப்பட்டன. மேலும் ஊழல் அதிகமாக இருந்தது. மேனன் இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைத்து, நீதித்துறை அதிகாரிகள் தகுதிவாய்ந்தவர்களாக இருப்பது கட்டாயமாக்கப்பட்டது. அவர்களின் அதிகாரங்களும் கடமைகளும் குறியிடப்பட்டு ஊதியம் இரட்டிப்பாக்கப்பட்டன. மொத்தம் பதினொரு விதிமுறைகள் மூலம், மேனன் இந்த அமைப்பை பிரிட்டிசு இந்தியாவில் நடைமுறையில் உள்ளவற்றுடன் இணையாகக் கொண்டுவந்தார்.

1865 ஆம் ஆண்டில் நடைபெற்ற வர்த்தக மாநாட்டில் கொச்சி, திருவிதாங்கூர், பிரிட்டிசு இந்தியா (மலபார் மாவட்டம்) போன்ற சுதேச மாநிலங்கள் பங்கேற்றன. மாநாட்டின் விளைவாக, கொச்சி புகையிலை மீதான தனது ஏகபோகத்தை கைவிட்டு, பிரிட்டிசு இந்தியாவுடன் இணையாக உப்பு வரியை விலைக்கு உயர்த்தியது. இந்த நடவடிக்கைகள் அத்தியாவசிய பொருட்களின் கடத்தலைத் தடுக்க உதவியது.

புகையிலை ஏகபோகத்தை கைவிடுவதால் வருவாய் இழப்பை ஈடுசெய்ய, மேனன் நெல் விலையை அதிகரித்தார். தற்செயலாக, இந்த காலகட்டத்தில், நீர்ப்பாசனம் செழித்தது குறிப்பாக சித்தூர் வட்டத்தில் அதிக நிலங்கள் சாகுபடிக்கு உட்படுத்தப்பட்டன. கொச்சி அரசாங்கமும் அபினி மற்றும் கஞ்சா விற்பனையில் ஏகபோக உரிமையை ஏற்றுக்கொண்டது. மேனனின் ஆட்சிக் காலத்தில் மொத்த நில வருவாய் 35 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்துள்ளது. நில பத்திரங்களை பதிவு செய்வது அறிமுகப்படுத்தப்பட்டது, நீதிமன்ற கட்டணம் திருத்தப்பட்டது. மேலும் காப்பி சாகுபடிக்கு வன நிலங்கள் அகற்றப்பட்டன. மேனனின் ஆட்சிக் காலத்தில் மாநிலத்தின் வருமானம் 50 சதவீதத்திற்கும் மேலாக அதிகரித்தது.

ஐரோப்பிய பொறியியலாளரின் கீழ் பொதுப்பணித் துறை 1868 இல் ஒரு நிறுவப்பட்டது. இரயில்வேயை மாநில தலைநகருக்கு விரிவுபடுத்துவதற்காக சங்குன்னி மேனன் பிரிட்டிசு இந்தியாவில் இரயில்வே அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். ஆனால் திவானின் வாழ்நாளில் இந்த முயற்சிகள் பலனளிக்கவில்லை. மாநில அஞ்சல் சேவை பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது. எர்ணாகுளம் பொது நூலகம் சனவரி 1, 1870 அன்றும் , திருச்சூர் பொது நூலகம் 1873 அன்றும் திறக்கப்பட்டது. எர்ணாகுளம் பள்ளி இரண்டாம் வகுப்பு கல்லூரியின் தரத்திற்கு உயர்த்தப்பட்டது. அனைத்து வட்டங்களிலும் ஆங்கில பள்ளிகள் திறக்கப்பட்டன.

ஓய்வு தொகு

உடல்நிலை சரியில்லாததால் சங்குன்னி மேனன் 1879 ஆகத்து 22 அன்று ஓய்வு பெற்றார். இவருக்குப் பிறகு இவரது தம்பி கோவிந்த மேனன் பதவிக்கு வந்தார். அவர் ஓய்வு பெற்றதும், மன்னர் ராம வர்மா அவருக்கு கடிதம் எழுதினார்

மரியாதை தொகு

பிரிட்டிசு இராச்சியத்திற்கான இவரது சேவைகளுக்காக, இவர், இந்தியாவின் நட்சத்திரத்தின் தோழராக மாற்றப்பட்டார் .

மேற்கோள்கள் தொகு

  1. Penny, F. E.; Lady Lawley (1914). Southern India. A. C. Black. பக். 368. 

குறிப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=தோ._சங்குன்னி_மேனன்&oldid=3086872" இலிருந்து மீள்விக்கப்பட்டது