த ஈகுவலைசர் (திரைப்படம்)

த ஈகுவலைசர்  (The Equalizer) என்பது  2014 ஆண்டைய அமெரிக்க  அதிரடி திரில்லர் திரைப்படமாகும்.  ரிச்சர்ட் வென்க் எழுத,  அன்ட்ரோன் ஃப்குவா இயக்கியுள்ளார். இப்படமானது இதே பெயரில் 1980 களில் வெளிவந்த தொலைக்காட்சி தொடரை அடிப்படையாகக் கொண்டது. இப்படத்தில் டென்செல் வாஷிங்டன்,  மார்டன் செக்கோகஸ், சோலோ கிரேஸ் மோரேட்ஸ், டேவிட் ஹார்பர், புல் புல்மேன், மெலிசா லியோ ஆகிய நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

த ஈகுவலைசர்
The Equalizer
இயக்கம்அண்டோன் பியூக்வா
தயாரிப்பு
  • டாட் பிளாக்
  • ஜேசன் ப்ளூமெண்டால்
  • டென்சல் வாஷிங்டன்
  • அலெக்ஸ் சிஸ்கின்
  • ஸ்டீவ் டிஷ்
  • மாஸ் நெஃபெல்ட்
  • டோனி எல்ட்ரிட்ஜ்
  • மைக்கேல் ஸ்லோன்
மூலக்கதைத ஈகுவலைசர்
படைத்தவர் மைக்கேல் ஸ்லோன்
ரிச்சர்ட் லிண்ட்ஹீம்
திரைக்கதைரிச்சர்ட் வென்க்
இசைஹாரி கிரீக்சன்-வில்லியம்ஸ்
நடிப்பு
  • டென்செல் வாஷிங்டன்
  • மார்டன் சோகாஸ்
  • சோலோ கிரேஸ் மோர்ட்ஸ்
  • டேவிட் ஹார்பர்
  • பில் புல்மேன்
  • மெலிசா லியோ
ஒளிப்பதிவுமௌரோ ஃபியோர்
படத்தொகுப்புஜான் ரெபொரா
கலையகம்
  • வில்லேஜ் ரோட்ஷோ பிக்சர்ஸ்
  • எஸ்கேப் ஆர்டிஸ்ட்
விநியோகம்கொலம்பியா பிக்சர்ஸ்
வெளியீடுசெப்டம்பர் 7, 2014 (2014-09-07)(TIFF)
செப்டம்பர் 26, 2014 (United States)
ஓட்டம்132 நிமிடங்கள்[1]
நாடுஐக்கிய மாநிலங்கள்
மொழிஆங்கிலம்
ஆக்கச்செலவு$73 மில்லியன்[2]
மொத்த வருவாய்$192.3 மில்லியன்[3]

படத்தின் முதன்மைப் படப்பிடிப்பானது 2013 இல் மாசச்சூசெட்சில் தொடங்கியது. படத்தின் சிறப்புக் காட்சியானது  2014 செப்டம்பர் 7 அன்று டோரன்டோ சர்வதேச சர்வதேச திரைப்பட விழாவில் திரையிடப்பட்டது. உலக அளவில் செப்டம்பர் 26 அன்று வெளியிடப்பட்டது.

இந்தத் திரைப்படம் விமர்சகர்களிடமிருந்து கலவையான விமர்சனங்களைப் பெற்றது, விமர்சகர்கள் காட்சியமைப்பு, நடிப்பு, ஒலிப்பதிவு அதிரடி காட்சிகளை பாராட்டினார், என்றாலும் படத்தில் இடம்பெற்ற  வன்முறை, கதை மற்றும் திரைக்கதை போன்றவற்றை விமர்சித்தனர். இருப்பினும், படமானது உலகளாவில்  $ 192 மில்லியனுக்கும் கூடுதலாக வசூலித்து வணிக ரீதியாக வெற்றியடைந்தது. இப்படத்தின் அடுத்த பாகமானது 2018 சூலை 20 அன்று வெளியாவதாக உறுதிபடுத்தப்பட்டுள்ளது.

கதைச்சுருக்கம் தொகு

ராபட் மெக்கால் என்ற ஒரு முன்னாள் சிஐஏ உளவாளி, தன் மனைவியின் இறப்பிற்குப் பிறகு தன் அடையாளங்களை மறைத்து, அமைதியான வாழ்க்கை வாழ முயல்கிறார். இதற்கிடையில் ஒரு அப்பாவி பெண்ணிற்கு உதவப்போவதால் உருசிய மாபியாக்களாலும், ஊழலில் திளைக்கும் அமெரிக்க காவல் துறையினராலும் துன்பத்துக்கு உள்ளாக்கப்படுகிறார். இதையடுத்து நாயகன் அதிரடி விளையாட்டை விளையாட்டுக்குத் திரும்புகிறார்.

மேற்கோள்கள் தொகு

  1. "The Equalizer (15)". British Board of Film Classification. September 3, 2014. பார்க்கப்பட்ட நாள் September 3, 2014.
  2. FilmL.A. (May 2015). "2014 Feature Film Study". FilmL.A. Feature Film Study. https://www.filmla.com/wp-content/uploads/2017/10/2014_FeatureFilm_study_v10_WEB.pdf. பார்த்த நாள்: July 3, 2017. 
  3. "The Equalizer (2014) - Box Office Mojo". September 26, 2014. பார்க்கப்பட்ட நாள் January 13, 2014.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த_ஈகுவலைசர்_(திரைப்படம்)&oldid=2906914" இலிருந்து மீள்விக்கப்பட்டது