நக்மா

இந்திய நடிகை

நந்திதா மொராஜி (நர்மதா சாதனா) அல்லது பிரபலமாக நக்மா (இந்தி: नघमा) தமிழ், இந்தி, மற்றும் தெலுங்கு திரைப்பட நடிகையாவார். 1993 -1997 இற்கு இடைப்பட்ட காலத்தில் இவர் தமிழ்த் திரைப்படத்துறையில் முக்கிய கதாநாயகியாக இருந்தார்[1]. இவரது தாயார் இஸ்லாம் மதத்தையும், தந்தையார் இந்து மததையும் சேர்ந்தவராவார். இவர் நடிகை ஜோதிகாவின் சகோதரியாவார்.[2] இவர் நடிப்பை பாலிவூட்டில் ஆரம்பித்தார் எனினும் சிலத் திரைப்படங்களுக்குப் பின் தென்னிந்திய திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினார். இங்கு இவருக்கு நல்ல வரவேற்புக் கிட்டியது. இவர் இந்தி, மராத்தி, தமிழ், தெலுங்கு, மற்றும் ஆங்கில மொழிகளில் தேர்ச்சிப் பெற்றவர் ஆவார். மேலும் இவர் இந்தி, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், வங்காளி, போஜ்பூரி, பஞ்சாபி, மராத்தி ஆகிய மொழி திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.[3]

நக்மா

நக்மா
இயற் பெயர் நந்திதா மொராஜி
பிறப்பு (1974-12-25)25 திசம்பர் 1974
இந்தியா மும்பை, இந்தியா
வேறு பெயர் நர்மதா சாதனா
நடிப்புக் காலம் 1990- தற்போதுவரை

தமிழில் ரஜினிகாந்துடன் பாட்ஷா படத்தில் மற்றும் காதலன் திரைப்படத்தில் பிரபுதேவாவுடன் நடித்துப் புகழ் பெற்றார். காதலன் திரைப்படத்துக்காக இவருக்கு பிலிம்பேர் விருது வழங்கப்பட்டது.

அரசியல் அவதாரம் தொகு

2014 ஆம் ஆண்டுக்கான மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் சார்பாக உ.பி. மாநிலத்தின் மீரட் தொகுதியில் போட்டியிட்டார்.[4]

நடித்துள்ள திரைப்படங்கள் தொகு

நடித்துள்ள தமிழ் திரைப்படங்களின் பட்டியல் கீழ்வருமாறு[5]

ஆண்டு திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
1994 காதலன் ஸ்ருதி தமிழ் பிலிம்பேர் விருது
1995 பாட்சா பிரியா தமிழ்
1995 ரகசியப் போலிஸ் தமிழ்
1995 வில்லாதி வில்லன் ஜானகி தமிழ்
1996 லவ் பேர்ட்ஸ் தமிழ்
1996 மேட்டுக்குடி தமிழ்
1997 ஜானகிராமன் இந்து தமிழ்
1997 பெரிய தம்பி செல்வி தமிழ்
1997 பிஸ்தா வெண்ணிலா தமிழ்
1997 அரவிந்தன் தமிழ்
1998 வேட்டிய மடிச்சு கட்டு தமிழ்
2001 சிட்டிசன் சிபிஐ அதிகாரி தமிழ்
2001 தீனா குத்துப்பாடல் நடனக்காரியாக தமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. ""Nagma plays mother" in The Hindu (18 July 2002), at". Archived from the original on 6 ஜூன் 2011. பார்க்கப்பட்ட நாள் 15 செப்டம்பர் 2007. {{cite web}}: Check date values in: |access-date= and |archive-date= (help)
  2. As she herself has pointed out; see, e.g., "Revealed: Nagma's real Dad" in Mumbai Mirror (22 April 2006), online at http://www.icravebollywood.com/news/22april06/nagma.php பரணிடப்பட்டது 2006-10-25 at the வந்தவழி இயந்திரம் [1] பரணிடப்பட்டது 2006-10-25 at the வந்தவழி இயந்திரம் and http://movies.indiatimes.com/articleshow/msid-1498649,curpg-5.cms பரணிடப்பட்டது 2008-12-21 at the வந்தவழி இயந்திரம் [2] பரணிடப்பட்டது 2008-12-21 at the வந்தவழி இயந்திரம்.
  3. ""Nagma excels in nine languages!" Idleburra.com (30 Nov.2006) at". Archived from the original on 2010-01-31. பார்க்கப்பட்ட நாள் 2007-09-15.
  4. சில்மிஷக்காரர்கள் பிடியிலிருந்து நக்மாவை காப்பாற்ற காங்., முயற்சி
  5. Nagma Filmography
"https://ta.wikipedia.org/w/index.php?title=நக்மா&oldid=3691643" இலிருந்து மீள்விக்கப்பட்டது