நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு

நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு இலங்கையின் மன்னார் மாவட்டத்தில் உள்ள ஒரு நிர்வாக அலகாகும். மன்னார் மாவட்டம் யாழ்ப்பாணக் குடாநாட்டுக்குத் தெற்கே வன்னியில் இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரம் அமைந்துள்ளது. நானாட்டான் பிரதேச செயலாளர் பிரிவு துணை நிர்வாக அலகுகளாக 31 கிராம அலுவலர் பிரிவுகளைக் கொண்டுள்ளது. செம்மாந்தீவு, முருங்கன், செட்டியார்மகன்கட்டை, இலகடிப்பிட்டி, வஞ்சியன்குளம், வங்காலை, ராசமடு, இலந்தைமோட்டை, நானாட்டான், அத்திக்குழி, புத்திரர்கண்டான், வாழ்க்கைப்பட்டான்கண்டல், கலிமோட்டை புளியங்குளம், பொன்தீவுக்கண்டல், பரியாரிகண்டல், சிறுகண்டல், பள்ளன்கோட்டை, பெரியகட்டைக்காடு, மோட்டைக்கடை, இரட்டைக்குளம், சுண்டிக்குழி, கற்கடந்தகுளம், ரசூல்புதுவெளி, கஞ்சித்தாழ்வு, நறுவிலிக்குளம், தோமஸ்புரி, உமனகிரி, அச்சன்குளம், இசைமலைத்தாழ்வு ஆகிய ஊர்கள் இப் பிரதேச செயலாளர் பிரிவினுள் அடங்குகின்றன. இப்பிரிவின் மேற்கில் கடலும், வடக்கில் மன்னார் நகரம் பிரதேச செயலாளர் பிரிவும், தெற்கில் முசலி பிரதேச செயலாளர் பிரிவும், கிழக்கில் மடு பிரதேச செயலாளர் பிரிவும், எல்லைகளாக உள்ளன.

இப்பிரிவு 148 சதுர கிலோமீட்டர் பரப்பளவு கொண்டது[1].

குறிப்புக்கள் தொகு

  1. புள்ளிவிபரத் தொகுப்பு 2007, தொகைமதிப்புப் புள்ளிவிபரத் திணைக்களம், இலங்கை

இவற்றையும் பார்க்கவும் தொகு

வெளியிணைப்புக்கள் தொகு