நிக்கொலாய் அந்திரியானொவ்

உடற்பயிற்சி வீரர்

நிக்கொலாய் எஃபிமோவிச் அந்திரியானொவ் (Nikolai Yefimovich Andrianov, உருசியம்: Николай Ефимович Андрианов; 14 அக்டோபர் 1952 - 21 மார்ச் 2011)[2] ஒரு சோவியத் / ரஷ்ய ஜிம்னாஸ்ட் ஆவார். மிக அதிக ஒலிம்பிக் பதக்கங்களுக்கான - 15 (7 தங்கப் பதக்கங்கள், 5 வெள்ளி பதக்கம், 3 வெண்கல பதக்கங்கள்) சாதனையை செய்தவர். பின்னாளில் மைக்கேல் ஃபெல்ப்ஸ் 2008 பெய்ஜிங் கோடைக்கால ஒலிம்பிக்கில் அவரை விட அதிக பதக்கங்கள் வென்று சாதனையை முறியடித்தார். மொத்த ஒலிம்பிக் பதக்க எண்ணிக்கையில் (ஆண் அல்லது பெண் பிரிவில்), ஆண்ட்ரியோவ் மூன்றாவது வீரராக உள்ளார். பெல்ப்ஸின் 28 மற்றும் லாரிசா லமினினா 18 பதக்கங்கள் பெற்று முதல் மற்றும் இரண்டாம் இடத்தில உள்ளனர். 1976 கோடைக்கால ஒலிம்பிக்ஸில் ஆண்ட்ரியானோவ் மிகவும் அதிக பதக்கங்களை வென்றார். 6 தனிநபர் பதக்கம் மற்றும் ஒரு அணிப் பதக்கம் வென்றார்.

நிக்கொலாய் அந்திரியானொவ்
Andrianov c. 1974
தனித் தகவல்கள்
முழுப் பெயர் நிக்கொலாய் எஃபிமோவிச் அந்திரியானொவ்
நாடு  சோவியத் ஒன்றியம்
உயரம் 166 cm[1]
எடை 60 kg
வகை ஆண்கள் கலையாற்றல்
தலைமைப் பயிற்சியாளர்(கள்) நிகோலாய் டோல்கேச்சேவ்
 
விருதுப் பட்டியல்
ஒலிம்பிக் விளையாட்டுக்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1972 முனிச் தரைப் பயிற்சி
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மாண்ட்ரீல் அனைத்து சுற்றிலும்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மாண்ட்ரீல் தரைப் பயிற்சி
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மாண்ட்ரீல் நிலைத்த வளையங்கள் (சீருடற்பயிற்சி)
தங்கப் பதக்கம் – முதலிடம் 1976 மாண்ட்ரீல் வால்ட்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1980 மாஸ்கோ அணிப் போட்டி
தங்கப் பதக்கம் – முதலிடம் 1980 மாஸ்கோ வால்ட்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1972 முனிச் அணிப் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1976 மாண்ட்ரீல் அணிப் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1976 மாண்ட்ரீல் இணை பார்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1980 மாஸ்கோ அனைத்து சுற்றிலும்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1980 மாஸ்கோ தரைப் பயிற்சி
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1972 முனிச் வால்ட்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1976 மாண்ட்ரீல் குதிரைக் கரடு (சீருடற்பயிற்சி)
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1980 மாஸ்கோ கிடைச் சட்டம் (சீருடற்பயிற்சி)
World Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 1974 வர்ணா நிலைத்த வளையங்கள் (சீருடற்பயிற்சி)
தங்கப் பதக்கம் – முதலிடம் 1978 ஸ்ட்ராஸ்பர்க் நிலைத்த வளையங்கள் (சீருடற்பயிற்சி)
தங்கப் பதக்கம் – முதலிடம் 1978 ஸ்ட்ராஸ்பர்க் அனைத்து சுற்றிலும்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1979 Ft. ஒர்த் அணிப் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1974 வர்ணா அணிப் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1974 வர்ணா அனைத்து சுற்றிலும்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1974 வர்ணா குதிரைக் கரடு (சீருடற்பயிற்சி)
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1974 வர்ணா வால்ட்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1974 வர்ணா இணை பார்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1978 ஸ்ட்ராஸ்பர்க் அணிப் போட்டி
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1978 ஸ்ட்ராஸ்பர்க் வால்ட்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1978 ஸ்ட்ராஸ்பர்க் இணை பார்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1979 Ft. ஒர்த் வால்ட்
European Championships
தங்கப் பதக்கம் – முதலிடம் 1971 மாட்ரிட் குதிரைக் கரடு (சீருடற்பயிற்சி)
தங்கப் பதக்கம் – முதலிடம் 1971 மாட்ரிட் வால்ட்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1973 கிரெநோபிள் தரைப் பயிற்சி
தங்கப் பதக்கம் – முதலிடம் 1973 கிரெநோபிள் வால்ட்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 பெர்ன் அனைத்து சுற்றிலும்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 பெர்ன் தரைப் பயிற்சி
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 பெர்ன் நிலைத்த வளையங்கள் (சீருடற்பயிற்சி)
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 பெர்ன் வால்ட்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 பெர்ன் இணை பார்கள்
தங்கப் பதக்கம் – முதலிடம் 1975 பெர்ன் கிடைச் சட்டம் (சீருடற்பயிற்சி)
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1971 மாட்ரிட் நிலைத்த வளையங்கள் (சீருடற்பயிற்சி)
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1971 மாட்ரிட் இணை பார்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1973 கிரெநோபிள் அனைத்து சுற்றிலும்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1973 கிரெநோபிள் நிலைத்த வளையங்கள் (சீருடற்பயிற்சி)
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1973 கிரெநோபிள் இணை பார்கள்
வெள்ளிப் பதக்கம் – இரண்டாமிடம் 1975 பெர்ன் குதிரைக் கரடு (சீருடற்பயிற்சி)
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1971 மாட்ரிட் அனைத்து சுற்றிலும்
வெண்கலப் பதக்கம் - மூன்றாமிடம் 1971 மாட்ரிட் தரைப் பயிற்சி

ஆண்கள் கலைநய சீருடற்பயிற்சிகள் ஜிம்னாஸ்டிக்ஸ் விளையாட்டிலும், மிகப் அதிக தனிப்பட்ட ஒலிம்பிக் பதக்கங்களுக்கான (12) சாதனையைப் பெற்றுள்ளார். தனி நபர் ஆண் ஜிம்னாஸ்டிக்சில் 6 தஙகப் பதக்கங்கள் பெற்று சாதனையைப் , போரிஸ் ஷாக்லின் மற்றும் டிமிட்ரி பிலொஜெர்ஷேவுடன் பகிர்ந்துள்ளார்.

ஒலிம்பிக், உலக மற்றும் ஐரோப்பிய மட்டங்களில் உள்ள அனைத்து வெற்றியாளர்களிடையே உள்ள பல தரவரிசையில், அவர் மிக உயர்ந்தவராக உள்ளார். உதாரணமாக, தங்க மொத்த மட்டத்தில் அல்லது தங்கம் மட்டத்தில் உள்ள மொத்த தனிநபர் பதக்கங்களில் வைட்டலி ஸ்கெர்போவிற்கு இரண்டாவதாக உள்ளார். இந்த சாதனைகள் அவரை அனைத்து காலத்திலும் மிகவும் அலங்கரிக்கப்பட்ட ஜிம்னாஸ்ட்களில் ஒருவராக கருதவைக்கிறது. .

ஆரம்ப வாழ்க்கை மற்றும் ஒலிம்பிக் வாழ்க்கை தொகு

ஆண்ட்ரியோவ் 11 வயதில் விளாடிமிர் நகரில் உள்ள ப்யூவெஸ்ட்வேக் விளையாட்டு சமுதாயத்தின் குழந்தைகள் மற்றும் இளைஞர் விளையாட்டுப் பள்ளியில் நுழைந்தார். அவருடைய முதல் சர்வதேச வெற்றி 1971 ஆம் ஆண்டில் மாட்ரிட்டில் நடைபெற்ற ஐரோப்பிய சாம்பியன்ஷிப்பில் கிடைத்தது, அங்கு அவர் இரண்டு தங்க பதக்கங்களை வென்றார். 1971 மற்றும் 1980 க்கு இடையில் அவர் ஒலிம்பிக் விளையாட்டுகள், உலக சாம்பியன்ஷிப் மற்றும் ஐரோப்பிய சாம்பியன்ஷிப்புகள் உட்பட பல சர்வதேச ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டிகளை வென்றார்.

1972 மாடி போட்டியில் (1972 Floor competition) ஆண்ட்ரியோ முதல் ஒலிம்பிக் தங்கப்பதக்கத்தை வென்றார். அவர் 1976 ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டில் சிறந்து விளையாடி நான்கு தங்கங்களையும் வென்றார். மேலும் இரண்டு வெள்ளி மற்றும் ஒரு வெண்கல, அனைத்து சுற்றிலும் தேர்ந்தவர் (all rounder) ஆகிய பதக்கங்களை வென்றார் . இந்த பதக்கங்கள் 1976 ஆம் ஆண்டின் தரைப் பயிற்சி (floor exercise), ரிங்ஸ் (rings), வால்ட்ஸ் (vaults) மற்றும் அனைத்து சுற்றுக்கும் (all round) பெற்றவை. 1992 ஆம் ஆண்டில் வைட்டலி ஸ்கெர்போ ஆறு தங்கம் வெல்லும் வரை, ஒற்றை ஆட்டங்களில் நான்கு ஜிம்னாஸ்டிக் தங்கங்கள் எனும் சாதனை ஆண்ட்ரியோவுடையது.

மாஸ்கோவில் 1980 கோடைக்கால ஒலிம்பிக்கில் ஆட்ரியானோவ் ஒலிம்பிக் உறுதிமொழியை விளையாட்டு வீரர்களுக்குக் கொடுத்தார். ஜிம்னாஸ்டிக்ஸ் போட்டியில் , அவர் இரண்டு தங்கம், இரண்டு வெள்ளி, ஒரு வெண்கலத்தையும் வென்றார். அந்த ஒலிம்பிக்கில் ஆண்ட்ரியோவோவின் தங்கம் வால்ட்டிலும் (vault), அணித் தேர்விலும் இருந்தது. அவரது வெள்ளிகள் அனைத்து சுற்று மற்றும் தரை பயிற்சிகளில் இருந்தன. அவருடைய வெண்கல பதக்கம் கிடைமட்ட பட்டியில் (horizontal bar) இருந்தது . அந்த ஆண்டு ஒலிம்பிக்கிற்குப் பிறகு அவர் ஓய்வு பெற்றார்.

நோய் மற்றும் மரணம் தொகு

அவரது இறுதி ஆண்டுகளில், ஆண்டிரியோவ் நரம்பியல் சீர்கேடு பல அமைப்பு வீழ்ச்சியால் தாக்கப்பட்டார். மேலும் அவரது இறுதி மாதங்களில் அவரது கை, கால்களை நகர்த்த முடியவில்லை, பேசவும் முடியவில்லை[3]. அவருடைய சொந்த ஊரான விளாடிமிர்ல் 21 மார்ச் 2011 நாளில், 58 வயதில் இறந்தார்[4]. ரஷ்யாவின் தேசிய உடற்பயிற்சிக் கழக பயிற்சியாளர் அலெக்ஸாண்டர், அலெக்ஸாண்ட்ரோவ் மரணம் "சோகம்" என்று அழைத்தார், ஆனால் நீண்ட காலமாக அவர் நோய்வாய்ப்பட்டதாகக் கூறினார்[5]

குறிப்புகள் தொகு

  1. Nikolay Andrianov பரணிடப்பட்டது 2020-04-17 at the வந்தவழி இயந்திரம். sports-reference.com
  2. London 2012 – Olympic legend Andrianov dies – Yahoo! Eurosport. Uk.eurosport.yahoo.com. Retrieved on 22 March 2011.
  3. Amanda Turner. "Legendary Olympian In Fight For His Life". International Gymnast. பார்க்கப்பட்ட நாள் 7 September 2010.
  4. Amanda Turner. "Olympic Legend Andrianov Dies at 58". International Gymnast. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.
  5. "London 2012 – Olympic legend Andrianov dies aged 58". Yahoo!. 21 March 2011. பார்க்கப்பட்ட நாள் 21 March 2011.