நியூட்டனின் இரண்டாம் விதி

நியூட்டனின் இரண்டாவது விதி என்பது விசையானது ஒரு பொருளின் மீது இயங்கி ஒரு பொருளில் ஏற்படுத்தும் நகர்ச்சி பற்றி நியூட்டன் அவர்கள் கூறிய "பொருளின் நகர்ச்சி விதிகள்" என்பனவற்றில் இரண்டாவதாகும். நியூட்டனின் இரண்டாம் விதியைக் கீழ்க்காணுமாறு கூறலாம்: ஒரு விசையானது ஒரு பொருளின் மீது செலுத்தப்படும் பொழுது, அப்பொருளின் நகர்ச்சியில் ஏற்படும் முடுக்கம் அல்லது ஆர்முடுகல் என்பது அவ்விசையின் திசையிலேயே இருப்பதுடன் அவ்விசைக்கு நேர் சார்புடையதும் ஆகும். முடுக்கம் அல்லது ஆர்முடுகல் என்பது நேரத்திற்கு நேரம் விரைவு அல்லது திசைவேகம் மாறுபடும் வீதத்தைக் குறிப்பது. முடுக்கம் = கால அடிப்படையில் விரைவு அல்லது திசைவேகம் மாறும் வீதம். இவ்விதியை நியூட்டன் அவர்கள் 1687ல் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா என்னும் நூலில் எழுதியுள்ளார்.

நியூட்டனின் நகர்ச்சி விதிகள் பற்றி நியூட்டன் அவர்கள் 1687ல் இலத்தீன் மொழியில் எழுதிய பிரின்சிப்பியா மாத்தமாட்டிக்கா (Principia Mathematica.) என்னும் நூலில் எழுதியுள்ளார்.

உரை : ஒரு பொருளின் மீது செயல்படும் விசைகள் சமன் செய்யப்படாத பொழுது பொருளின் மீது ஏற்படும் விளைவை நியூட்டனின் இரண்டாவது இயக்க விதி விளக்குகிறது. இவ்விதியின்படி, பொருளின் உந்தம் மாறுபடும் வீதம் அதன்மீது செயல்படும் விசைக்கு நேர்த்தகவில் இருக்கும். உந்தம் மாறுபடும் திசை, விசையின் திசையை ஒத்ததாக இருக்கும்.

இவற்றையும் பார்க்க தொகு